Tiruvannamalai

News April 2, 2024

தி.மலை: டயர் வெடித்து விபத்து: 15 பேர்?

image

சேத்துப்பட்டு அடுத்த இந்திரவனம் கிராம வழியாக ராணிப்பேட்டை பகுதியில் இருந்து மேல்மலையனூர் கோவிலுக்கு சாமி கும்பிட சென்ற பக்தர்களின் வேன் டயர் வெடித்து கவிழ்ந்ததில் 15 பேர் படுகாயமடைந்தனர். இது தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற சேத்துப்பட்டு போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும், விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 2, 2024

தி.மலை: ஆசிட் ஊத்தி கொலை

image

வந்தவாசி தாலுகா தையூர் கிராமத்தைச் சேர்ந்த நந்தகுமார். இவர் வந்தவாசியில் உள்ள வழக்கறிஞரிடம் குமாஸ்தாவாக பணிபுரிந்து வந்தார். நந்தகுமாருக்கும் அவரது சித்தப்பா ஜெயேந்திரன் என்பவருக்கும் சொத்து பிரச்னை  இருந்து வந்தது. இந்நிலையில், ஜெயேந்திரன் மற்றும் அவரது மகன் சதீஷ் கண்ணன் ஆகிய இருவரும் நந்தகுமாரை ஆசிட் ஊத்தி கொலை செய்த வழக்கில் ஆரணி நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது.

News April 2, 2024

முதல் முறை வாக்காளர்களுக்கு பத்திரிகை வழங்கி விழிப்புணர்வு.

image

ஆரணி பேருந்து நிலையத்தில் பாராளுமன்ற பொதுத் தேர்தல் 2024 முன்னிட்டு முதல்முறை வாக்காளர்களுக்கு 100 சதவீதம் வாக்களிப்பது அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மேலதாளம் மற்றும் சீர்வரிசை தட்டுடன் சென்று பேருந்தில் பயணித்த முதல் முறை வாக்காளர்களுக்கு பத்திரிகையை வழங்கி மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சித் தலைவர் தெ.பாஸ்கர் பாண்டியன் நேற்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

News April 2, 2024

தி.மலை முதல் சென்னை கடற்கரை வரை நேரடி இரயில் சேவை

image

சென்னை கடற்கரையில் இருந்து வேலூர் வரை சென்று கொண்டிருந்த இரயில் இனி திருவண்ணாமலை வரை வந்து செல்லும் என்று திருச்சி பிரிவு தெற்கு இரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. மாலை 6.00 மணிக்கு சென்னை கடற்கரையில் இருந்து புறப்படும் இரயில் இரவு 12.05 க்கு வேலூர், ஆரணி வழியாக திருவண்ணாமலை வந்து சேரும். காலை 3.45 க்கு புறப்பட்டு காலை 9.05 க்கு ஆரணி, வேலூர் வழியாக சென்னை வந்தடையும்.

News April 2, 2024

தி.மலை அருகே மீட்கப்பட்ட ஆண் சடலம்

image

ஆரணி அடுத்த புதுப்பாளையம் கிராமத்தில் புளியமரம் அருகே 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் இருப்பதாக கிராம நிர்வாக அலுவலருக்கு அப்பகுதி மக்கள் நேற்று தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து கிராம நிர்வாக அலுவலர் பூங்கொடி கண்ணமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 2, 2024

தி.மு.க வேட்பாளரின் வாகனத்தை  சோதனையிட்ட பறக்கும் படையினர்

image

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தொகுதி களம்பூர் பேரூராட்சியில் வாக்கு சேகரித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த ஆரணி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் M.S.தரணிவேந்தனின் வாகனத்தை நேற்று(ஏப்.1)தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

News April 1, 2024

தி.மலை தொகுதியில் 1722 வாக்குப்பதிவு இயந்திரங்கள்

image

தி.மலை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூர், கலசப்பாக்கம் செங்கம், திருப்பத்தூர், ஜோலார்பேட்டை ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் உள்ள 854 வாக்குச்சாவடி மையங்களில்1722 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர் தெ. பாஸ்கர பாண்டியன் அறிவித்தார்.

News April 1, 2024

தி.மலை: ரேண்டமைஸேன் செய்யும் பணி

image

தி.மலை மாவட்ட ஆட்சியர் அலுவலர கூட்டரங்கில் 2024 மக்களவை தேர்தலையொட்டி  தி.மலை மற்றும் ஆரணி மக்களவை தொகுதிகளுக்கு கூடுதலாக மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் ரேண்டமைஸேன் செய்யும் பணி இன்று (01.04.24) ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமையில், அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் போட்டியிடும் வேட்பாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

News April 1, 2024

தி.மலையில் மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி

image

தி.மலை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மின்னணு வாக்குபதிவு இயந்திர பாதுகாப்பு கிடங்கினை இன்று அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் & போட்டியிடும் வேட்பாளர்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் அவர்களால் திறக்கப்பட்டு, தி.மலை & ஆரணி பாராளுமன்ற தொகுதிகளுக்கு கூடுதலாக மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணியினை தொடங்கி வைத்து ஆய்வு செய்தார்.

News April 1, 2024

இன்று முதல் வீடு தேடி வரும் பூத் சிலிப்

image

நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்க திருவண்ணாமலை தொகுதி வாக்காளர்களுக்கு வீடு வீடாகச் சென்று பூத் சிலிப் வழங்கும் பணி இன்று முதல் தொடங்கியது. இதனை மாவட்ட ஆட்சியர் தெ. பாஸ்கர பாண்டியன் நேரில் சென்று ஆய்வு செய்து பணியை தொடங்கி வைத்தார். இந்த ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் ஆரணி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் மு. பிரியதர்ஷினி மற்றும் உதவி தேர்தல் அலுவலர்கள் உடன் இருந்தனர்.