India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (16.10.2024) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்ட ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. சென்னைக்கு அருகே நாளை அதிகாலை கரையைக் கடக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், அடுத்த 24 மணி நேரத்திற்கு தி.மலை மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதற்கான ஆரஞ்சு அலர்ட்டும் விடுத்துள்ளது.
மழை பாதிப்புகள் குறித்து தகவல் தெரிவிக்க தி.மலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறை நேற்று திறக்கப்பட்டது. இந்த அறையை 1077, 04175 – 232377 என்ற எண்களில் தொடா்பு கொண்டு மழை தொடா்பான பாதிப்புகள் குறித்து மக்கள் தெரிவிக்கலாம். மின்சாரம் பாதிப்பு தொடா்பான தகவல்களை 9498794987 என்ற கைப்பேசி எண்ணில் தெரிவிக்கலாம் என்று தி.மலை மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.
புரட்டாசி பெளர்ணமியை முன்னிட்டு, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன், கிரிவலம் செல்லும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள், சுகாதார பாதுகாப்பு, மருத்துவ முகாம்கள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய உத்தரவிட்டார். குழந்தைகளை வைத்து யாசகம் செய்வதை தடுக்கவும், நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இக்கூட்டத்தில் மாவட்ட எஸ்பி, வருவாய் அலுவலர்கள், கோயில் இணை ஆணையர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில், வாராந்திர மக்கள் குறைதீர்வு கூட்டம் நேற்று கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நேற்று நடந்தது. அதில், டிஆர்ஓ ராமபிரதீபன் உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். கடந்த வாரங்களில் பெறப்பட்ட மனுக்கள் மீதான நடவடிக்கைகள் குறித்து, துறைவாரியாக ஆய்வு நடத்தினார். மேலும், 2 நபர்களுக்கு சிறு தொழில் தொடங்குவதற்கான வங்கிக் கடனுதவிக்கான காசோலையை கலெக்டர் வழங்கினார்.
தி.மலை மாவட்டத்தில் மிக கனமழை இருக்க வாய்ப்பிருப்பதால், ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு கிரிவலத்திற்கு வரும் முதியவர்கள், குழந்தைகள், உடல் நலிவுற்றவர்களுக்கு மழையால் பாதிப்பு ஏற்படும் என்பதால் முன்னெச்சரிக்கையாக கிரிவலம் வருவதை தவிர்க்குமாறு மாவட்ட நிர்வாகம் கேட்டு கொண்டுள்ளது.
கனமழை எதிரொலி காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.வ்இது அரசு மற்றும் தனியார் அரசு உதவி பெறும் பள்ளி என அனைத்து மாணவர்களுக்கும் பொருந்தும். கல்லூரி விடுமுறை பற்றி இன்னும் எந்த வித அறிவிப்பும் வெளியாகவில்லை.
திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (15.10.2024) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் கொடுக்கபட்டுள்ளது.
புரட்டாசி பௌர்ணமியை முன்னிட்டு, வேலூர் மண்டலத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு 100 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. வேலூரில் இருந்து 50, திருப்பத்தூரில் இருந்து 30, ஆற்காட்டில் இருந்து 20 பஸ்கள் இயக்கப்படுகின்றன. பௌர்ணமி நாளை இரவு 8 மணிக்கு தொடங்கி மறுநாள் மாலை 5.38 மணிக்கு நிறைவடைகிறது. பக்தர்கள் எண்ணிக்கையைப் பொறுத்து கூடுதல் பஸ்கள் இயக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ளது. இதற்காக TN-Alert என்ற மொபைல் செயலி மூலம் தங்கள் இருப்பிடம் சார்ந்த வானிலை மற்றும் முன்னெச்சரிக்கை செய்திகளை மக்கள் தமிழிலேயே தெரிந்து கொள்ளலாம். இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மக்கள் தங்கள் பகுதி பேரிடர் தொடர்பான புகார்களை 1077 அல்லது 04175232377 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.