Tiruvannamalai

News April 7, 2024

உங்கள் தொகுதி வேட்பாளர் பற்றி தெரிந்து கொண்டு வாக்களிக்கவும்

image

உங்கள் தொகுதியில் போட்டியிடும் நட்சத்திர வேட்பாளர் முதல் சுயேட்சை வேட்பாளர்கள் வரை அவர்களுடைய தனிப்பட்ட தகவல்கள், குற்றவழக்குகள், சொத்துமதிப்பு, கல்வித்தகுதி,வழங்கப்பட்ட குற்றத்தண்டனை போன்ற முழுதகவல்களையும் தெரிந்து கொள்ள <>https://affidavit.eci.gov.in/ <<>>என்ற தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் சென்று பதிவிறக்கம் செய்து தெரிந்துகொள்ளலாம். அல்லது ப்ளே ஸ்டோரில் KYC என்ற செயலி மூலமும் தெரிந்து கொள்ளலாம்.

News April 7, 2024

தி.மலை: வாலிபால் விளையாட்டு போட்டி மூலம் விழிப்புணர்வு

image

திருவண்ணாமலை நகரம், காந்திநகர் பைபாஸ் சாலையில் உள்ள மைதானத்தில் பாராளுமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து இளைஞர்களிடையே நடைபெற்ற வாலிபால் போட்டியினை திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் தெ. பாஸ்கர பாண்டியன் நேற்று (06.04.2024) தொடங்கி வைத்து இளைஞர்களுடன் வாலிபால் விளையாடினார்.

News April 6, 2024

தி.மலைக்கு 1125 மெட்ரிக் டன் யூரியா ரயிலில் வருகை

image

திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகளுக்கு விற்பனை செய்வதற்காக 1125 மெட்ரிக் டன் யூரியா சென்னை மணலியில் இருந்து திருவண்ணாமலைக்கு சரக்கு ரயில் மூலம் நேற்று வந்தது. இதனை விவசாயிகளுக்கு வினியோகம் செய்வதற்காக விற்பனை நிலையங்களுக்கு பிரித்து அளிக்கப்பட்டுள்ளது.

News April 6, 2024

போக்சோ சட்டத்தின் கீழ் 10 ஆண்டுகள் சிறை தண்டனை

image

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் அருகே சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட நபருக்கு போக்சோ சட்டத்தின் கீழ் 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.5,000 அபராதம் விதித்து திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. இதன் அடிப்படையில், இன்று குற்றவாளியை திருவண்ணாமலை மாவட்ட காவல் துறையினர் சிறையில் அடைத்தனர்.

News April 6, 2024

முன்னாள் படைவீரர்களுக்கு அழைப்பு

image

திருவண்ணாமலை ஆரணி மக்களவைத் தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு ஏப்.19-ஆம் தேதி நடைபெறுகிறது. தோ்தலில் முன்னாள் படை வீரா்களை சிறப்புக் காவலா்களாக பணியமா்த்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. முன்னாள் படை வீரா்கள் தங்களது பெயரை அசல் படை விலகல் சான்றிதழ், அடையாள அட்டை, வாக்காளா் அடையாள அட்டையுடன் திருவண்ணாமலை மாவட்ட முன்னாள் படை வீரா் நல உதவி இயக்குநா் அலுவலகத்துக்கு நேரில் சென்று பதிவு செய்து கொள்ளலாம்.

News April 6, 2024

பதற்றமான சாவடி எண்ணிக்கை வெளியீடு

image

தி.மலை, ஆரணி மக்களவைத் தொகுதியில் பதற்றமான வாக்குச்சாவடிகள், மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, 166 ,108 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்றும், 1,3 வாக்குச்சாவடி மிகவும் பதற்றமானது என்றும் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.

News April 6, 2024

தி.மலை மாவட்ட கிரிக்கெட் வீரர்கள் தேர்வு

image

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 16 மற்றும் 19 வயதுக்கு உட்பட்ட கிரிக்கெட் வீரர்கள் தேர்வு வரும் 09.04.2024 அன்று காலை ஏழு மணியளவில், அருணை இன்ஜினியரிங் கல்லூரி மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க விரும்பும் வீரர்கள் ஆதார் அட்டை, பிறப்புச் சான்று, பாஸ்போர்ட் புகைப்படம் இரண்டு கொண்டுவர வேண்டும் என திருவண்ணாமலை மாவட்ட கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.

News April 6, 2024

இந்திய கூட்டணி பிரச்சாரக் கூட்டம்

image

செங்கத்தில் நேற்று இரவு இந்தியா கூட்டணியின் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக திமுக வேட்பாளர் அண்ணாதுரையை ஆதரித்து பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி தலைமை தாங்கினார். இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.
ராமகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார். கூட்டணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

News April 5, 2024

திருவண்ணாமலை: தேநீர் கடையில் நூதன பிரச்சாரம்

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (05.04.2024) திமுக இளைஞரணி சார்பில் C.N அண்ணாதுரை அவர்களுக்கு வாக்கு கேட்டு தேநீர் கடையில் டீ போட்டு கொடுத்து நூதன பிரச்சாரம் மேற்கொண்டனர். இந்த பிரச்சாரத்தின் போது திமுக இளைஞரணி உறுப்பினர்கள், கழக உடன்பிறப்புகள் மற்றும் கழக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

News April 5, 2024

திருவண்ணாமலை அருகே திரைப்பட நடிகர் ரியோ ராஜ்

image

தி.மலை மாவட்டத்தில் உள்ள வேட்டவலம் அடுத்த கீரனூர் பகுதியில் உள்ள சன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கான இசை மற்றும் விளையாட்டு திருவிழா இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட திரைப்பட நடிகர் ரியோ ராஜ் அவர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. இந்த விழாவில் அறக்கட்டளை தலைவர், துணை தலைவர், பொருளர், இயக்குனர், கல்லூரி முதல்வர் சசிகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.