Tiruvannamalai

News April 9, 2024

சித்ரா பெளர்ணமி பாதுகாப்பு பணியில் 5000 போலீசார்

image

திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அண்ணாமலையார் கோவிலுக்கு தினமும் உள்ளூர், வெளியூர் மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை புரிகின்றனர். இந்த நிலையில் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி சித்ரா பெளர்ணமி விழாவிற்கு 2400 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இதில் 5000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

News April 9, 2024

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்

image

இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு மே 5 ஆம் தேதி நாடு முழுவதும் 571 நகரங்களில் நடைபெற உள்ளது. நீட் தேர்வுக்கு இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க பிப்.9 முதல் மார்ச்.16 வரை அவகாசம் அளிக்கப்பட்டது. குறிப்பிட்ட அவகாசத்திற்குள் விண்ணப்பிக்க முடியாதவர்களின் நலன் கருதி இன்று மற்றும் நாளை விண்ணப்பிக்கலாம் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

News April 9, 2024

3 ஆம் கட்ட பயிற்சிக்கு தயாராகுங்கள்

image

ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெற உள்ள திருவண்ணாமலை பாராளுமன்றத் தேர்தலில் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான 3 ஆம் கட்ட பயிற்சி வகுப்பு 13 ஆம் தேதி சனிக்கிழமை அன்று ஏற்கனவே நடைபெற்ற பயிற்சி மையங்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளதால் அனைத்து வாக்குப்பதிவு அலுவலர்களும் தவறாமல் பயிற்சியில் கலந்து கொள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 9, 2024

இரண்டாவது ரேண்டமைசேசன் பணி

image

தி.மலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தி.மலை பாராளுமன்ற தொகுதிக்கான வாக்குப் பதிவு இயந்திரங்களை தேர்தலுக்கு முந்தைய நாளன்று வாக்குப்பதிவு மையங்களுக்கு அனுப்பிட ஏதுவாக இரண்டாவது ரேண்டமைசேசன்  தி.மலை பாராளுமன்ற தொகுதி தேர்தல் பொது மேற்பார்வையாளர் மகாவீர் பிரதாப் மீனா  அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நேற்று (08.04.2024) நடைபெற்றது.

News April 8, 2024

தி.மலையில் 101.8 டிகிரி வெப்பம்

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  வெயிலின் தாக்கத்தால் பாதசாரிகள் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.  திருவண்ணாமலையில் இன்றைய அதிகபட்ச வெப்பநிலை 101.8 டிகிரி பாரன்ஹீட் 38.7 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.

News April 8, 2024

தி.மலை: முன்னாள் எம்எல்ஏ காலமானார்

image

திருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லூர் தொகுதி அதிமுகவைச் சேர்ந்த முக்கிய நிர்வாகியும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ஏ.கே.எஸ்.அன்பழகன் உடல் நலக்குறைவால் இன்று காலமானார். இவரது உடலுக்கு அதிமுக முக்கிய தலைவர்கள், அரசியல் கட்சியினர் என பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். இவர் எம்ஜிஆர் மன்ற இணை செயலாளராக பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

News April 8, 2024

தி,மலையிலிருந்து திருப்பதிக்கு பாதயாத்திரை

image

திருமணமாகி 17 ஆண்டுகளுக்குப் பிறகு பிறந்த இரட்டைக் குழந்தைகளுக்காக, பாதயாத்திரை நேர்த்திக்கடன் செலுத்த பிரத்யேக மர வண்டி தயார் செய்து அதில் அமர வைத்து, திருப்பதி செல்கிறார் சே.கூடலூர் கிராமத்தைச் சேர்ந்த பூமிநாதன். ஏழுமலையானிடம் வேண்டி குழந்தைப் பேறு கிடைத்ததால், பிரார்த்தனையை நிறைவேற்ற பாத யாத்திரை செல்வதாக அவர் கூறியுள்ளார்.

News April 8, 2024

அதிமுக முன்னாள் எம்எல்ஏ காலமானார்

image

திருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லூர் தொகுதி அதிமுகவைச் சேர்ந்த முக்கிய நிர்வாகியும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ஏ.கே.எஸ்.அன்பழகன் உடல் நலக்குறைவால் இன்று காலமானார். இவரது உடலுக்கு அதிமுக முக்கிய தலைவர்கள், அரசியல் கட்சியினர் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவர் எம்ஜிஆர் மன்ற இணை செயலாளராக பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

News April 7, 2024

தி.மலை: கலெக்டர் எச்சரிக்கை

image

கீழ்பெண்ணாத்தூர் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 2024 மக்களவை தேர்தலை தபால் வாக்கு செலுத்தும் மையத்தினை மாவட்ட தேர்தல் அலுவலரும் ஆட்சியருமான பாஸ்கர பாண்டியன் இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் அரசு அலுவலர்கள் இருந்தனர். மேலும், தபால் வாக்கு சேகரிப்பதில் குளறுபடிகள் ஏதும் இருக்கக் கூடாது என எச்சரித்தார். 

News April 7, 2024

ஏப். 19ஆம் தேதி பொது விடுமுறை – ஆட்சியர்

image

தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக ஏப்.19 அன்று நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்காளர்களும் வாக்களிப்பதற்கு வசதியாக வாக்குப்பதிவு நடைபெறும் நாளான வரும் ஏப்.19 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று பொது விடுமுறை அளிக்கப்படுகிறது என கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.