India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சித்ரா பௌர்ணமியையொட்டி மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் இன்று ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், துறை சார்ந்த அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
2024 மக்களவை தேர்தலில் 100 சதவீத வாக்கு பதிவை முன்னிட்டு மாவட்ட விளையாட்டு அரங்கில் வான்வழி சாகச நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் இன்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் அரசு அலுவலர்கள், துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட போளூர் தொகுதியில் தேர்தல் பணிக்குழு அலுவலகத்தில் அதிமுக மற்றும் பாமக கட்சியின் இருந்து முக்கிய நிர்வாகிகள், இளைஞர்கள் எ.வ.கம்பன் முன்னிலையில், திமுகவில் இணைந்தனர். தேர்தல் நேரத்தில் கட்சி மாறியதால், பாமக, அதிமுகவினரிடையே பெரும் குழப்பம் நீடித்துள்ளது.
போளூரில் உள்ள திமுக சட்டமன்ற தொகுதி தேர்தல் பணிக்குழு அலுவலகத்தில், இன்று (15.04.2024), பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி, திமுக மாநில மருத்துவரணி துணைத் தலைவரும், போளூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளருமான வே.கம்பன் முன்னிலையில் இணைந்தனர். இந்நிகழ்வில், திமுக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.
கண்ணமங்கலம் பகுதியில் நேற்று வெவ்வேறு சாலை விபத்தில் இரண்டு பெண்கள் பலி. போளூர் அடுத்த மாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பவித்ரா என்ற இளம் பெண் கோவிலுக்கு சென்று திரும்பிய போது தி.மலை வேலூர் சாலையில் பேருந்து மோதி சம்பவ இடத்திலேயே பலியானார். ஆரணி சைதாப்பேட்டை சசிகலா என்ற பெண் கொங்கராம்பட்டு பகுதியில் நிலைத்தடுமாறி விழுந்து உடல் நசுங்கி பலியானர். விபத்து குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
தி.மலை, ஆரணி மக்களவைத் தொகுதிகளின் வாக்குச்சாவடிகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் காவலர்களுக்கான வாக்குச்சாவடிகள் ஒதுக்கீடு செய்யும் பணி ஆட்சியா் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் தொகுதி காவல் மேற்பாா்வையாளா் பாட்டுலா கங்காதா், தி.மலை மக்களவைத் தொகுதிக்கான பொது மேற்பாா்வையாளா் மகாவீா் பிரசாத் மீனா, ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், எஸ்.பி கார்த்திகேயன் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம் சேத்பட் பகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் இன்று தற்போது நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் பாக்கியலட்சுமி ஆதரித்து அவருக்கு ஒதுக்கப்பட்ட மைக் சின்னத்தில் வாக்களிக்க கோரி சேத்பட் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். இதில், ஏராளமான கட்சிக்காரர்கள், தொண்டர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே, மின்கம்பத்தில் மோதி, அரசுப் பேருந்து தலைகீழாக கவிழ்ந்ததில் 15க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர். வந்தவாசியை அடுத்த நடுக்குப்பம் – ஏம்பலம் செல்லும் வழியில் இன்று மதியம் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரத்தில் இருந்த வயலில் தலைகீழாக கவிழந்து விபத்துக்குள்ளானது. விபத்தில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தி.மலையில் கிரிவல பாதையில் திருநேர் அண்ணாமலையார் கோவிலில் உள்ள லிங்கத்தின் மீது ஒவ்வொரு ஆண்டும் தமிழ்ப்புத்தாண்டு தினமான சித்திரை மாதம் 1 ஆம் தேதியன்று காலையில் சூரிய ஒளி விழும் அதிசய நிகழ்வு நடைபெறும். அதன்படி இன்று காலை லிங்கத்தின் மீது சூரியஒளி விழும் அதிசய நிகழ்வு நடைபெற்றது. அதனை காண அதிகாலையில் கோவிலில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ அண்ணாமலையார் மற்றும் உண்ணாமலை அம்மன் திருக்கோவிலில் சித்திரை மாத தமிழ் வருட பிறப்பை முன்னிட்டு உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து அதிக அளவில் அண்ணாமலையார் பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்துள்ளனர். இதனால் அண்ணாமலையார் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
Sorry, no posts matched your criteria.