Tiruvannamalai

News April 27, 2024

கிராம சபை கூட்டம் ரத்தா?

image

தி.மலை மாவட்டத்தில் ஆண்டுக்கு 6 முறை கிராம சபைக்கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் மே.1 இல் கிராம சபை கூட்டம் நடத்தப்பட வேண்டும். ஆனால் தற்போது தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் இந்தாண்டு கிராம சபை கூட்டம் நடத்தப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இன்றுவரை கிராம சபை கூட்டம் நடத்துவதற்கான தகவல்கள், வழிகாட்டுகளோ கிராமங்களுக்கு வழக்கப்பட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

News April 27, 2024

தி.மலை அருகே விபத்து: இருவர் பலி

image

செங்கம் தோக்கவாடி பிரதான சாலையில் இயற்கை உபாதை கழிக்க தோக்கவாடி பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளி வாசலா, அவரது கணவர் முனியப்பன் நேற்று இரவு சாலையை கடக்க முயன்ற போது பெங்களூரில் இருந்து திருவண்ணாமலை நோக்கி வந்த கார் இவர்கள் மீது மோதியது. இதில் கணவன் மனைவி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 27, 2024

ஆரணி அருகே இளைஞர் கைது

image

ஆரணி அருகே உள்ள எஸ் யூ வனம் கிராமத்தைச் சேர்ந்த தங்கபாலு சொத்து தகராறில் வயலில் நீர் பாய்ச்சியபோது தனது பெரியப்பா ஆறுமுகன் என்பவரை தாக்கி ஆறுமுகனின் பல்லை உடைத்துள்ளார். பல்லை உடைத்த தங்கபாலு மீது ஆரணி கிராமிய காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் மகாராணி வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

News April 26, 2024

சேத்துப்பட்டு நகரில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம்

image

சேத்துப்பட்டு, பழம்பேட்டை வந்தவாசி சாலையில் உள்ள முகமாரியம்மன் கோயில் கூழ்வார்த்தல் திருவிழா இன்று நடைபெற்றது. இதனையொட்டி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

News April 26, 2024

தி.மலை அருகே குவிந்த மக்கள்

image

ஆரணி அடுத்த அத்திமலைப்பட்டு மேட்டுகுடிசை காரமலை அடிவாரத்தில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க ஸ்தலமாக விளங்கிவரும் அருள்மிகு ஸ்ரீ குள்ள செல்லியம்மன் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது.யாக கலசத்தில் யாக பூஜைகள் நடத்தி கலச புறப்பாடு கொண்டு கோபுர கலசத்தில் புனித நீர் தெளித்து கும்பாபிஷேகம் நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடி அம்மனை வணங்கினர்.

News April 26, 2024

தி.மலை – மலையின் மகத்துவம் அறிவோம்!

image

பஞ்சபூத தலத்தின் அக்னித் தலமான புகழ்பெற்ற அண்ணாமலையார் கோவில் நகரின் மத்தியில் அமைந்துள்ளது. இங்குள்ள மலை 260 கோடி பழமையானது என பீர்பால் சகானி என்ற விஞ்ஞானி தெரிவித்துள்ளார். பால் பிரண்டன் எனும் பிரிட்டிஷ் ஆய்வாளார் தனது “மெசேஜ் பிரம் அருணாச்சலா” எனும் நூலில் “லெமூரியா கண்டத்தின் எஞ்சிய பகுதி திருவண்ணாமலை” எனக் கூறியுள்ளார். முக்தி தலமான இம்மலையில் பல சித்தர்கள் வாழ்ந்து சமாதியடைந்திருக்கின்றனர்.

News April 26, 2024

தி.மலை அருகே ரூ. 26 லட்சம் 

image

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த முனுகப்பட்டு கிராமத்தில் உள்ள அருள்மிகு ஶ்ரீ பச்சையம்மன் உடனுறை ஶ்ரீ மன்னாா்சாமி கோயிலில் உண்டியல் காணிக்கைகள் என்னும் பணி நேற்று நடைபெற்றது. இதில் பக்தா்கள் காணிக்கையாக ரூ. 26,85,338 யும், நகைகளாக 256 கிராம் தங்கமும், 51 கிராம் வெள்ளியும் காணிக்கையாக கிடைத்துள்ளது .

News April 26, 2024

பிரம்மோற்சவ விழா நிறைவு நாள்

image

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு வட்டம் நெடுங்குணம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ ராமச்சந்திர பெருமாள் ஆலயத்தில் பிரம்மோற்சவ விழாவின் பத்தாம் நாளான நேற்று சுவாமி ஸ்ரீ தேவி பூதேவி சமேதராய் தன்னுடைய மருமகன் வள்ளி தெய்வானை,சமேத ஶ்ரீ சுப்பிரமணிய சுவாமியுடன் மாட வீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

News April 25, 2024

தி.மலையில் அதிகபட்ச வெப்பநிலை 100.4 டிகிரி

image

தி.மலை மாவட்டத்தில் கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர அஞ்சுகின்றனர். இந்நிலையில், இன்றைய அதிகபட்ச வெப்பநிலை 100. 4 டிகிரி பாரன்ஹீட், 38 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.

News April 25, 2024

தி.மலை: அதிமுக சார்பில் பழங்கள் வழங்கல்

image

தி.மலை, ஆரணி அடுத்த கண்ணமங்கலம் பேருந்து நிலையம் அருகில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தலை ஆரணி சட்டமன்ற உறுப்பினர் சேவூர் எஸ். இராமச்சந்திரன் திறந்து வைத்து பொதுமக்களுக்கு மோர், தண்ணீர், தர்பூசணி பழங்களை இன்று வழங்கினார். இந்நிகழ்வில், அதிமுக மத்திய மாவட்ட செயலாளர் எல்.ஜெயசுதா லட்சுமிகாந்தன் மற்றும் அதிமுக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.