India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவண்ணாமலை சென்னை கடற்கரையிலிருந்து திருவண்ணாமலைக்கு மே 2 ஆம் தேதி முதல் தினசரி ரயில் சேவை தொடங்க உள்ள நிலையில் நேர பட்டியலையும் மற்றும் பயணக் கட்டணமாக ரூ.50 நிர்ணயித்து தென்னக ரயில்வே நிர்வாகம் அறிவித்தது. இதனால் திருவண்ணாமலைக்கு கிரிவலம் செல்ல வரும் சென்னை நகரத்து பக்தர்கள், பொதுமக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.
வந்தவாசி பகுதியைச் சேர்ந்த தேவேந்திரன் தனது உறவினரின் குழந்தையான 16 வயது சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்நிலையில்,சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி மூன்று மாதம் கர்ப்பமாக இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர், வந்தவாசி மகளிர் போலீசார் தேவேந்திரனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சென்னை கடற்கரையில் இருந்து வேலூர் கண்டோன்மென்ட்டிற்கு தினமும் மின்சார ரயில் இயக்கப்படுகிறது. பாஸ்ட் மின்சார ரயில் சேவையானது மாலை 6 மணிக்கு கடற்கரை நிலையத்தில் இருந்து புறப்பட்டு வேலூர் கண்டோன் மென்ட்டிற்கு இரவு 9.35 மணிக்கு சென்றடைகிறது. இந்த ரெயில் மே மாதம் 2-ந்தேதியில் இருந்து வேலூரில் இருந்து திருவண்ணாமலை வரை நீட்டிக்க ரயில்வே வாரியம் பச்சைக் கொடி காட்டியுள்ளது.
தி.மலை மணலூர்பேட்டை சாலை மேல்புத்தியந்தல் அருகே நேற்று இரவு கார் ஒன்று வேகமாக சென்றது. அப்போது முன்னாள் சென்று கொண்டிருந்த டிராக்டர் மீது கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து மோதியது. இதில் டிராக்டர் தலைகீழாக கவிழ்ந்தது. காரை ஒட்டி சென்ற கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருவத்தை சேர்ந்த ஓட்டுநர் படுகாயமடைந்தார். இவ்விபத்து குறித்து தச்சம்பட்டு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கண்ணமங்கலம் அருகே உள்ள ரெட்டிப்பாளையம் ஏரி கரையில் ஏழுமலை மனைவி பிரேமா என்பவரை அடையாளம் தெரியாத 3 இளைஞர்கள் தாக்கிவிட்டு தப்பியோடினர். காயமடைந்த பிரேமா வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
பிரேமாவை தாக்கிய மூன்று இளைஞர்கள் குறித்து சப் இன்ஸ்பெக்டர் கார்த்திக் தலைமையில் கண்ணமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.
தி.மலை தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலு அறிவுரைப்படி காந்தி சிலை முன்பு கோடை வெயிலில் பொதுமக்களின் தாகம் தீர்க்க கரும்பு ஜூஸ் மற்றும் நீர்மோர் ஆகியவற்றை மாவட்ட பிரதிநிதி இல.குணசேகரன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சு. ராஜாங்கம், நகர மன்ற உறுப்பினர் மண்டி ஆ. பிரகாஷ் மற்றும் இளைஞர் அணி நிர்வாகிகள் வழங்கினர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர அஞ்சுகின்றனர். இந்நிலையில், இன்றைய அதிகபட்ச வெப்பநிலை 102. 2 டிகிரி பாரன்ஹீட், 39 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.
செங்கம் அருகே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருக்கும் சாத்தனூர் அணையின் முழு கொள்ளளவு 109 அடியாகும். தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் வரத்து மிகக் குறைவாக உள்ளது. தற்போது அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்ட நிலையில் இன்றைய நீர்மட்டம் 80.8 அடியாக உள்ளது என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் தி.மலை மாவட்ட விளையாட்டரங்கத்தில் வரும் 29ம் தேதி தொடங்கி அடுத்த மாதம் 13ம் தேதி வரை நடைபெற உள்ளது. இப்பயிற்சி முகாமில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி கட்டணம் ரூ. 200-ஐ ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். மேலும் விவரங்களுக்கு www.sdat.tn.gov.in என்ற இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம்.
செங்கம் அடுத்த பழைய குயிலம் கிராமத்தில் மாரியம்மன் ஆலயத்தில் ஊர் பொதுமக்கள் சார்பில் நேற்று பெண்கள் வேப்பிலை தோரணம் கட்டி வீதியில் தோறும் உலா சென்று கூல் ஊற்றி அம்மனை வழிபட்டனர். ராஜபாளையம் காமாட்சி அம்மன் ஆலயம் அருகே சிலம்பாட்ட கலைஞர்கள் மனித உடல் மீது தலைகீழாக நின்று தங்களுடைய தனி திறமையை வெளிப்படுத்தி மக்களை மகிழ்வித்தனர்.
Sorry, no posts matched your criteria.