India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
B.Pharm, D.Pharm சான்று பெற்றவர்கள், தமிழ்நாடு முழுவதும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் முதல்வர் மருந்தகம் அமைக்க www.mudhalvarmarundhagam.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க இன்றே (டிச.5) கடைசி நாள் என்பதால், விருப்பமுள்ள தொழில்முனைவோர் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மானியமாக ரூ.3 லட்சம் 2 தவணைகளாக ரொக்கமாகவும், மருந்துகளாகவும் வழங்கப்படும்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (04.12.2024) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
அருணாச்சலேஸ்வரர் கோவிலில் நடைபெறும் முக்கிய விழாவான கார்த்திகை தீபத் திருவிழாவின் 10 ஆம் நாளில் அண்ணாமலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படும். இந்த தீபத் திருவிழாவை தொடர்ந்து 11 நாட்கள் எரியும் தீபம் ஏற்ற பயன்படுத்தப்படும் நெய், இந்த ஆண்டு திருவண்ணாமலை ஆவின் நிறுவனம் மூலம் 34 லட்சத்து 50,000 மதிப்புள்ள 4500 கிலோ நெய் கொள்முதல் செய்யப்பட்டு கோவில் மூன்றாம் பிரகாரத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில்,நேற்று இரவு ஸ்ரீவிநாயகர் உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது.இந்தக் கோயிலின் கார்த்திகை தீபத் திருவிழா இன்று கொடியேற்றம்புதன்கிழமை (டிச.4) காலை 6 மணிக்கு மேல் 7.25 மணிக்குள் தீபத் திருவிழாவுக்கான கொடியேற்றம் நடைபெற்றது.கோயில் மூன்றாம் பிரகாரத்தில் உள்ள தங்கக் கொடிமரத்தில் சிவாச்சாரியர்கள் திருவிழாவுக்கான கொடியை ஏற்றினர்.
செய்யார் நகரில் மழை நீர் சூழ்ந்துள்ளதை அகற்றாத திருவத்திபுரம் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து நேற்று செய்யார் நகரில் சாலை மறியலில் ஈடுபட்ட 20 ஆண்கள் 30 பெண்கள் உள்ளிட்ட 50 பேர் மீது போக்குவரத்துக்கும், பொது மக்களுக்கும், இடையூறாக சாலை மறியலில் ஈடுபட்டதாக கிராம நிர்வாக அலுவலர் உதயகுமார் கொடுத்த புகாரின் பேரில், செய்யாறு காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் மோகன் வழக்கு பதிவு செய்து விசாரணை.
ஃபெஞ்சல் புயல் மற்றும் அதிகனமழை காரணமாக தமிழகத்தின் வடமாவட்டங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டது.குறிப்பாக திருவண்ணாமலை மாவட்டத்தில் அதன் தாக்கம் அதிகமாக இருந்தது.நிவாரணம் வழங்குவது தொடர்பாக திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் மாவட்டத்தில் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளின் விவரங்களை அரசுக்கு அனுப்பி வைத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளார்.
செங்கம் தாலுக்கா முழுவதும் கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நேரில் பார்வையிட்டனர். கொட்டாவூர் குப்பநத்தம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் யாரும் வரவில்லை. தாலுக்கா முழுவதும் 3,000 ஏக்கருக்கும் மேல் பாதிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் நேரடியாக ஆய்வு செய்து விவசாயிகளிடம் மனுக்களை பெற்று உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (03.12.2024) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
அகரம்பள்ளிப்பட்டு – தொண்டமானூர் கிராமங்களுக்கு இடையே ரூ.16 கோடியில் கட்டப்பட்ட பாலம், 3 மாதங்களிலேயே வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திமுக அரசை விமர்சித்த நிலையில், தமிழக அரசு சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது அதில், பாலத்திற்கு மேலே 4 அடி உயரட்துக்கு தண்ணீர் சென்றால் பாலம் சேதமடைந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலையில் மண் சரிவில் சிக்கியவர்களில் 7ஆவது நபரின் உடல் மீட்கப்பட்டது. ஏற்கெனவே 6 பேரில் உடல் மீட்கப்பட்ட நிலையில், இன்று கடைசியாக, மண்ணில் புதைந்த சிறுமி ரம்யாவின் உடல் நீண்ட போராட்டத்துக்கு பின் மீட்கப்பட்டது. இந்த துயர சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Sorry, no posts matched your criteria.