India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திண்டுக்கல், ஆத்துரை சேர்ந்த குமார் (37). இவர் திருப்பூர், வெள்ளியங்காடு பகுதியில் தங்கி, வேலை வாய்ப்பு நிறுவனம் நடத்தி வருகிறார். இவரிடம், கேரளாவை சேர்ந்த 19 வயது இளம்பெண்ணிடம், பெருமாநல்லூரில் குமார் என்பவர் வேலை வாங்கி தருவதாக, அவரை அழைத்து சென்று, அங்கு அறையில் வைத்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். புகாரின் பேரில் குமாரை தெற்கு அனைத்து மகளிர் போலீசார் நேற்று கைது செய்தனர்.
திருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பில் தினமும் பகுதி வாரியாக, திருப்பூர் மாவட்டம் முழுவதும் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் பெயர் மற்றும் செல்போன் எண்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. அதன்படி இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விபரத்தை, மாவட்ட காவல்துறை வெளியிட்டு உள்ளது. அதனை பயன்படுத்தி பொதுமக்கள் தங்கள் பகுதியில் நடைபெறும் குற்ற செயல்களை போலீசாருக்கு தெரிவிக்கலாம்.
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் தலைமையில், மக்கள் குறைதீர் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்கள் 409 மனுக்களை அளித்திருப்பதாகவும், மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பரிந்துரை செய்திருப்பதாகவும், மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆலமரத்தூர் 110 கி.வோ துணை மின் நிலையத்தில் நாளை (26.11.2024) காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால் இத்துணை மின் நிலையத்திலிருந்து மின் வினியோகம் செய்யப்படும் பகுதிகளுக்கு மின் வினியோகம் இருக்காது என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அறிவித்துள்ளது.
வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்தம் – 2025, கடந்த அக். 29ல் துவங்கி நடைபெற்று வருகிறது. திருப்பூர் மாவட்டத்தில், திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, பல்லடம், அவிநாசி, உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம், காங்கயம் ஆகிய எட்டு சட்டசபை தொகுதிகளிலும் நடைபெற்றது. நேற்றுமுன்தினம் வரையிலான மூன்று முகாம்களில் மட்டும், வாக்காளர்களிடமிருந்து மொத்தம், 30 ஆயிரத்து 468 படிவங்கள் பெறப்பட்டுள்ளன.
மன்னார்குடியை சேர்ந்தவர் பிரபாகரன், 33. இவரது தம்பி ராஜசேகர், 26. இவர்கள் திருப்பூரில் தங்கி வேலை செய்து வருகின்றனர். நேற்று இருவரும் பலவஞ்சிபாளையம் பிரிவில் உள்ள மதுக்கடையில் மது அருந்தி கொண்டிருந்தனர். தற்போது இருவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் தகராறு ஏற்பட்டது. அண்ணன் தம்பியை கத்தியால் குத்தியுள்ளார். தொடர்பாக வீரபாண்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
1.திருப்பூர் மாவட்டத்தில் இன்று அனைத்து வார்டுகளில் வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெற்றது.
2.மகளை பாலியல் தொந்தரவு செய்த தந்தை கைது
3.மடத்துக்குளம் ரயில் நிலையத்தை பராமரிக்க கோரி மனு
4.உடுமலை உழவர் சந்தையில் பூண்டு கிலோ ரூ400க்கு விற்பனை
5.இலவச கண் சிகிச்சை முகாமை துவக்கி வைத்த அமைச்சர்
திருப்பூர் மாவட்டத்தில் இன்று (24.11.2024) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் 265 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நேற்று நடத்தப்பட்டு கலெக்டர் அறிவித்திருந்தார். அதன்படி ஒவ்வொரு ஊராட்சியிலும் பொதுமக்கள் பொது இடத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மொத்தம் 264 ஊராட்சிகளில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மொத்தம் 4293 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
திருப்பூர் மங்கலம் ரோட்டில், 58 ஏக்கர் பரப்பளவில் ஆண்டிபாளையம் குளம் அமைந்திருக்கிறது. இங்கு, 58 ஏக்கர் பரப்பளவில் ஆண்டிபாளையம் குளம் அமைந்திருக்கிறது. ஆண்டிபாளையம் குளத்தில் படகு இல்லம் உருவாக்க, 1.50 கோடி ரூபாய் நிதியை அரசு ஒதுக்கிய நிலையில் வரும், 26ம் தேதி, முதல்வர் ஸ்டாலின், இந்த படகு இல்லத்தை ‘வீடியோ கான்பிரன்ஸிங்’ மூலமாக திறந்து வைக்க உள்ளார்.
Sorry, no posts matched your criteria.