India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருப்பூர் மாநகரத்திற்குட்பட்ட காவல் நிலையங்களில் பணிபுரியக் கூடிய, 8 காவலர்களை, பணியிடமாற்றம் செய்து, மாநகர காவல் ஆணையர் லட்சுமி உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி திருமுருகன்பூண்டியில் காவலராக பணியாற்றிய சுரேஷ்குமார், தெற்கு காவல் நிலையத்திற்கும், தெற்கு காவல் நிலையத்தில் பணியாற்றிய கணேஷ் பாபு கொங்குநகர் உள்ளிட்ட காவல் நிலையங்களுக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, திருப்பூர் மாவட்டத்தில் வரும் டிச.1ம் தேதி, ஒரு சில இடங்களில் மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் ஆரஞ்சு அலார்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதேபோல் டிச.2ம் தேதியும் திருப்பூருக்கு, கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் சாலை பாதுகாப்பு குறித்து ஆய்வு கூட்டம் கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் சாலை விபத்துகளில் உயிரிழப்பு அதிகரிப்பதற்கான காரணம் குறித்து இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் தலைக்கவசம் அணியவும், நான்கு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் கட்டாயம் சீட் பெல்ட் அணியவும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என தெரிவித்தனர்.
இதய நோயால் ஏற்படும் பாதிப்பு மற்றும் உயிரிழப்பை கட்டுப்படுத்த, காந்தி நகர் ரோட்டரி சங்கத்தின் முயற்சியால், ‘இதயம் காப்போம்’ என்ற பெயரில் இலவச பஸ் திட்டம், ரூ.1.30 கோடி மதிப்பில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளது. நாளை, (29ம் தேதி) மாலை, 4:30 மணிக்கு, தாராபுரம் ரோடு, வேலாயுதசாமி திருமண மண்டபத்தில் திட்ட துவக்க விழா நடக்கிறது. கலெக்டர் கிறிஸ்துராஜ் கலந்து கொள்கிறார்.
திருப்பூர் மாவட்டத்தில் இன்று (27.11.2024) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
திருப்பூர் கல்லூரி சாலை மற்றும் மங்களம் சாலையை இணைக்கக்கூடிய வகையிலான, அனைபாளையம் சுரங்கப்பாதையில், பாராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால், மூன்று நாட்கள் அப்பகுதிகள் போக்குவரத்திற்கு தடை செய்வதாக, ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவித்துள்ளது. பணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தாதவாறு மாற்று பாதையில் செல்ல பொது மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திருப்பூர் பல்லடம் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருப்பூர் மாநகர மாவட்ட அதிமுக கள ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது. மேற்கு மண்டல அதிமுக பொறுப்பாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி வேலுமணி கலந்து கொண்டிருந்த இந்த கூட்டத்தில், முன்னாள் எம்எல்ஏ குணசேகரன், பாஜக கூட்டணி காரணமாக திருப்பூர் தெற்கு தொகுதியில் வெற்றி வாய்ப்பு இழந்ததாக குற்றம் சாட்டினார்.
திருப்பூர் மாவட்டத்தில் இன்று (26.11.2024) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு, உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
திருப்பூர் தாராபுரம் சாலை செல்லப்பபுரத்தைச் சேர்ந்தவர் காந்திமதி. இவர் நேற்று மாலை முதல் பாளையம் ஹவுசிங் யூனிட் பகுதியில் உள்ள தனது மகன் வீட்டிற்கு செல்வதற்காக திருப்பூர் பழைய பஸ் நிலையத்தில் இருந்து பேருந்து ஏறினார். பேருந்தில் திடீரென அவரது பணம் கொண்டு வந்திருந்த பை அந்தப் பையில் 40 ஆயிரம் இருந்ததாகவும் திடீரென தொலைந்து விட்டதாகவும் கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
திருப்பூர் பாரதிநகர் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் குடியிருப்புதார்கள், செல்லப்பிராணிகள் வளர்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், சுகாதாரம் (ம) சட்ட ஒழுங்குபிரச்சை ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட குடியிருப்புதாரரின் குடியிருப்பு ரத்து செய்யப்படும் என தெரிவித்துள்ளனர். மேலே உள்ள படம் பாரதி நகர் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் ஒட்டப்பட்ட எச்சரிக்கை நோட்டீஸ் ஆகும்.
Sorry, no posts matched your criteria.