India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஒருங்கிணைந்த திருப்பூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திருப்பூர் ஆலங்காடு பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான செல்வ பெருந்தகை கலந்து கொண்டு கட்சியை வளர்க்க வேண்டியதன் அவசியம் குறித்து உரையாற்றினார். இதில் நிர்வாகிகள் ஏராளமானவர் கலந்து கொண்டனர்.
திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் தேர்தலில் பதிவான வாக்குகள் கொண்ட மின்னணு வாக்கு இயந்திரங்கள் திருப்பூர் எல்ஆர்ஜி அரசு கல்லூரியில் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளது. இங்கு வருகின்ற நான்காம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. அதைத்தொடர்ந்து 13 வேட்பாளர்களுக்கு 1274 முகவர்கள் நேற்று நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
கோடை காலத்தில் பயணிகள் வசதிக்காக வாராந்திர சிறப்பு ரயில்களின் சேவை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது என நேற்று சேலம் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். அதன்படி வெள்ளிக்கிழமை தோறும் கொச்சுவேலியில் இருந்து புறப்படும் நிஜாமுதீன் வாராந்திர ரயில் ஜூன் மாதம் 28ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என ரயில்வே வட்டார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காங்கேயம் பஸ் நிலையத்திலிருந்து பழைய கோட்டை சாலை போக்குவரத்து பணிமனை வரை இருபுறமும் மருத்துவமனைகள், மருந்துக் கடைகள், துணிக்கடைகள் உள்ளிட்ட ஏராளமான கடைகள் இயங்கி வருகின்றன. இந்தச் சாலையில் காலை மற்றும் மாலை வேளைகளில் இந்தக் கடைகளில் பொருட்களை வாங்க வருபவர்களால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதி அடைகின்றனர்.
வெள்ளகோவிலில் அரசு மருத்துவமனை மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் தேசிய டெங்கு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி தனியார் நூற்பாலை பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு வெள்ளகோவில் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார்.
தேசிய டெங்கு தினத்தை முன்னிட்டு திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் பவன் குமார் தலைமையில் முதலாவது மண்டல மகப்பேறு மருத்துவமனையில் சமூகத்துடன் இணைந்த டெங்குவை கட்டுப்படுத்துவோம் என்ற தலைப்பில் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். திருப்பூர் மாவட்ட மலேரியா அலுவலர் முத்துவேல், மாநகர நல அலுவலர் கலைச்செல்வன் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.
காங்கேயம் -சென்னிமலை சாலையில் தாராபுரத்திற்கு செல்ல சரக்கு ஆட்டோ சென்றுள்ளது. அப்போது வாய்க்கால் மேடு பகுதியில் எதிர்பாராத விதமாக லாரி மீது மோதியதில் ஆட்டோவில் பயணம் செய்த 3 பேர் இன்று படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். இதுகுறித்து காங்கேயம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பூர் மாநகரம் முழுவதும் தெருநாய்களின் எண்ணிக்கை அதிகளவில் உள்ளன. வாகன ஓட்டிகள், நடந்து செல்லும் பாதசாரிகள் ஆகியோர் அச்சத்துடனே செல்லும் நிலை தொடர்கிறது. தினமும் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனைக்கு வருவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இதை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பூர், நிப்ட்-டீ ஆடை வடிவமைப்பு கல்லுாரியில், தேசிய ஆடை வடிவமைப்பு மற்றும் நெட் பேஷன் டெக்னாலஜி நுழைவுத்தேர்வு நடந்தது. இத்தேர்வில், கிட்ஸ் கிளப் சி.பி.எஸ்.இ. பள்ளி மாணவர் சஜிஷ்னு பங்கேற்றார். தேசிய அளவில் 2 லட்சம் பேர் எழுதிய தேர்வில், 28வது இடமும், ஓ.பி.சி., என்.சி.எல். பிரிவில் 4ம் பெற்று, சாதனை படைத்தவருக்கு நேற்று பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
முதலமைச்சர் திட்டத்தின் கீழ் திருப்பூர் தெற்கு தொகுதியின் நீண்டகால பிரச்சனைகள் குறித்து முதல்வர் ஸ்டாலினுக்கு எம்.எல்.ஏ செல்வராஜ் கோரிக்கைகள் வைத்திருந்தார். அதைதொடர்ந்து வளர்ச்சி திட்ட பணிகளுக்காக ரூ.64 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எனவே மக்கள் சார்பாக, முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாக எம்எல்ஏ செல்வராஜ் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.