Tiruppur

News May 22, 2024

திருப்பூர் மழைக்கு வாய்ப்பு!

image

திருப்பூர் மாவட்டத்தில் இன்று (மே.22) மாலை 4 மணி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மழைக்கு வாய்ப்புள்ளது. திருப்பூர் மாவட்டத்தின் ஒருசில பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

News May 22, 2024

அவினாசி சாலையில் போக்குவரத்து நெரிசல்

image

திருப்பூர் அவிநாசி சாலை குமார் நகர், பங்களா ஸ்டாப் போன்ற பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. கடும் போக்குவரத்து நெரிசலால் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றது. போக்குவரத்து நெரிசல் காரணமாக இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் இன்று கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

News May 22, 2024

திருப்பூரில் 664.50 மில்லி மீட்டர் மழை பதிவு

image

திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்து சில தினங்களாகவே கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக குளம், குட்டைகள் நிரம்பி வருகின்றன. இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் நேற்றைய தினம் 664.50 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருப்பதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக திருமூர்த்தி அணை பகுதியில் 143 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

News May 22, 2024

அமைச்சர் தலைமையில் குறைகேட்பு கூட்டம்

image

திருப்பூர் தெற்கு மாவட்டம் காங்கேயம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வெள்ளகோவில் நகரம் மற்றும் முத்தூர் பேரூராட்சியில் வார்டு வாரியாக பொதுமக்கள் கோரிக்கைகள், குறைகள் குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். இதில் மாவட்ட செயலாளர் இல பத்மநாபன் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

News May 22, 2024

திருப்பூர்: உண்டியல் காணிக்கை எண்ணிக்கை

image

உடுமலை திருமூர்த்தி மலையில் உள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலில் நேற்று உண்டியல் எண்ணும் பணி தொடங்கியது. கோசாலை உண்டியல் உட்பட 12 உண்டியல்கள் திறக்கப்பட்டன. அதில் 88 ஆயிரத்து 467 ரூபாய் இருந்தது. கோசாலை உண்டியல் மூலமாக 1,773 ரூபாய் கிடைத்தது. இந்த உண்டியல்கள் கடந்த முறை ஏப்ரல் மாதம் 26ஆம் தேதி எண்ணப்பட்டது குறிப்பிடத்தக்கது. நிகழ்வில் அறங்காவலர் குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

News May 21, 2024

திருப்பூர்: சிறுமிக்கு பாலியல் தொல்லை!

image

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே அரசு பள்ளி ஒன்றில் 5ம் வகுப்பு படித்து வந்த 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த காங்கேயம், இல்லியம்புதூர் சேர்ந்த சென்ட்ரிங் தொழிலாளி சூர்யபிரகாஷ் (எ) சண்முகம் (38).என்பவரை போக்சோ சட்டத்தில் காங்கேயம் மகளிர் போலீசார் இன்று மதியம் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

News May 21, 2024

திருப்பூர் : நாளை மழைக்கு வாய்ப்பு!

image

திருப்பூர் மாவட்டத்தில் நாளை (மே.22) மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திருப்பூரில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மழை பதிவாகக் கூடும். தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மழைக்கு வாய்ப்புள்ளது.

News May 21, 2024

திருப்பூரில் கனமழைக்கு வாய்ப்பு!

image

திருப்பூர் மாவட்டத்திற்கு இன்று (மே.21) மழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம். அதன்படி, திருப்பூரில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கனமழைக்கு வாய்ப்புள்ளது. திருப்பூர் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

News May 21, 2024

திருப்பூரில் தயார் நிலையில் தீயணைப்புத் துறையினர்

image

திருப்பூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஏராளமான கிராமப் பகுதிகளில் குட்டைகள் உடைந்து ஊருக்குள் மழை நீர் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடுகிறது. பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீட்பு பணிகளில் ஈடுபடுவதற்காக திருப்பூரில் 100 கமாண்டோ வீரர்களுடன் தீயணைப்புத் துறையினர் தயார் நிலையில் உள்ளனர்.

News May 21, 2024

குளத்தில் செத்தும் மிதக்கும் மீன்களால் பரபரப்பு

image

திருப்பூர்-ஊத்துக்குளி சாலை சர்க்கார் பெரியபாளையம் பகுதியில் 440 ஏக்கர் பரப்பளவில் நஞ்சராயன் குளம் அமைந்துள்ளது. தமிழகத்தின் 17வது பறவைகள் சரணாலயமாக இது அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 2 தினங்களாக கனமழை பெய்து வரக்கூடிய நிலையில் இன்று காலை நஞ்சராயன் குளத்தில் மீன்கள் செத்து மிதப்பதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.