Tiruppur

News May 24, 2024

தமிழக கேரள எல்லையில் மே 26ஆம் தேதி முற்றுகை

image

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே அமராவதி ஆற்றின் துணை ஆறான சிலந்தி ஆற்றில் வட்டவடாவில் கேரளா அரசு தற்போது தடுப்பணை கட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதனால் அமராவதி அணைக்கு நீர்வரத்து பாதிக்கும் அபாயம் உள்ளது. இதனால் அதை தடுத்து நிறுத்த நாளை மறுநாள் (மே 26) காலை 10 மணிக்கு சின்னாறு சோதனைச்சாவடியில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் அறிவித்துள்ளது.

News May 24, 2024

நொய்யலில் தூர்வாரும் பணி: ஆணையாளர் ஆய்வு

image

கோவை உள்ளிட்ட மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்துவரும் கனமழையின் காரணமாக நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக திருப்பூரில் உள்ள நொய்யல் ஆற்றில் வழக்கமாகச் செல்லும் தண்ணீரைவிட அதிக அளவு செல்கிறது. இந்நிலையில் நொய்யல் ஆற்றில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனை மாநகராட்சி ஆணையாளர் பவன் குமார் நேற்று நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

News May 23, 2024

தேர் ரத வீதிகளில் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

image

திருப்பூர் அரிசி கடைவீதியில் உள்ள ஸ்ரீ விஸ்வேஸ்வரர் கோவில் தேர் திருவிழா இன்று நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு தேர்தல் ரதம் வரும் வீதிகளில் சாலை அமைக்கும் பணிகள் மற்றும் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அதனை இன்று மாநகராட்சி ஆணையாளர் அதிகாரிகளுடன் நேரில் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது மாமன்ற உறுப்பினர் கண்ணப்பன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

News May 23, 2024

குட்டையில் மூழ்கிய கல்லூரி மாணவன் உயிரிழப்பு

image

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே லிங்கம்மநாயக்கனூர் புதூருக்கு விடுமுறைக்கு கெங்கம்பாளையத்தைச் சேர்ந்த வினோத் என்ற தொழிற்பயிற்சி கல்லூரி மாணவன் வந்திருந்தார். இந்நிலையில் நேற்று மாலை அப்பகுதியில் உள்ள குட்டைக்கு குளிக்கச் சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக வினோத் பரிதாபமாக குட்டைக்குள் மூழ்கி உயிரிழந்தார். இச்சம்பவம் இந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

News May 23, 2024

தேர்ச்சி பெறாதவர்களுக்கு அரசு பள்ளியில் பயிற்சி வகுப்பு

image

திருப்பூர் மாவட்டத்தில் பிளஸ் டூ பொதுத்தேர்வில் 608 மாணவ மாணவிகளும், பிளஸ் ஒன் தேர்வில் 1247 மாணவ மாணவிகளும், எஸ்எஸ்எல்சி தேர்வில் 231 மாணவ மாணவிகளும் தேர்ச்சி பெறவில்லை. இந்நிலையில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு ஜூலை 2ம் தேதி முதல் எட்டாம் தேதி வரையிலும் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருவதாக மாவட்ட ஆட்சியர் நேற்று தெரிவித்துள்ளார்.

News May 23, 2024

மாணவிகளை சேர்க்க மறுத்த அரசு பள்ளி

image

திருப்பூர் அருகே பூலுவபட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் அப்பகுதியைச் சேர்ந்த 2 மாணவிகள் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றனர். தொடர்ந்து 2 மாணவிகளும் பிளஸ் ஒன் படிக்க அருகில் உள்ள கணக்கம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் சேர்வதற்காக சென்றனர். அப்போது சேர்க்கை கட்டணமாக தலா 3350 செலுத்த வேண்டும் என கூறினர். இதனால் மாணவிகளின் பெற்றோர்கள் கல்வித்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

News May 23, 2024

தேசிய சாகச விருதுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள்

image

இந்திய அரசு ஆண்டுதோறும் ஒருவருக்கு நிலம் நீர் மற்றும் ஆகாயத்தில் சாகச விளையாட்டுகளில் சாதனை புரிந்தவர்களை கௌரவிக்கும் வகையில் டென்சிங் நாற்கே தேசிய சாகச விருது வழங்கி வருகிறது. அதன்படி 2023ஆம் ஆண்டுக்கான இந்த விருதுபெற விண்ணப்பிக்கலாம் என திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் நேற்று தெரிவித்துள்ளார்.

News May 23, 2024

தடுப்பணையில் ஆர்ப்பரித்துக் கொட்டிய வெள்ளம்

image

திருப்பூர் மாவட்டம் மங்கலம் பகுதியில் நேற்று பெய்த கனமழையின் காரணமாக நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளப்பெருக்கு காரணமாக நொய்யல் ஆற்றின் குறுக்கே நல்ல மண் தடுப்பணையில் வெள்ளம் ஆர்ப்பரித்துக் கொட்டியது. இதனைப் பார்ப்பதற்கு மிகவும் பிரமிப்பான அருவிபோல் காணப்பட்டது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

News May 22, 2024

திருப்பூரில் நாளை கனமழை

image

திருப்பூர் மாவட்டத்திற்கு நாளை (மே.23) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திருப்பூரில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கி.மீ முதல் 40 கி.மீ வரை) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கனமழை பெய்யக்கூடும்

News May 22, 2024

திருப்பூரில் 15 செ.மீ மழைப்பதிவு!

image

திருப்பூர் மாவட்டத்தில் நேற்று (மே.21) பதிவான மழைப்பொழிவின் விவரத்தை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திருமூர்த்தி அணை, திருமூர்த்தி IB ஆகிய பகுதிகளில் 14 செ.மீட்டரும், அமராவதி அணையில் 12 செ.மீட்டரும் மடத்துக்குளம் பகுதியில் 7 செ.மீட்டரும் திருப்பூர் PWD, மூலனூர் ஆகிய பகுதிகளில் 2 செ.மீட்டர் மழைப்பொழிவு பதிவானது.