India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
➤ பணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது ➤ உடுமலை அமராவதி அணைக்கு நீர்வரத்து 2483 கன அடி ➤ அனுப்பர்பாளையம் பகுதியில் கஞ்சா விற்ற 2 பேர் கைது ➤ பல்லடம்; மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி ➤ அவிநாசியில் டிச.18 கடையடைப்பு போராட்டம் ➤ மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் 364 மனுக்கள் ➤ திருப்பூரில் ஸ்வெட்டர் விற்பனை ஜோர் ➤ தாராபுரத்தில் கடையடைப்பு போராட்டம் அறிவிப்பு
திருப்பூர் பல்லடம் சாலையில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர் நாள் கூட்டம், காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற்றது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் பங்கேற்று தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக மனுக்களை அளித்தனர். இந்நிலையில் இன்று 364 மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சொத்து வரி உயர்வு மற்றும் கட்டிடங்களுக்கு 18% வாடகை உயர்வு ஆகியவற்றை மத்திய மாநில அரசுகள் திரும்ப பெற கோரி அவிநாசியில் அனைத்து வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வருகிற 18ம் தேதி கடையடைப்பு போராட்டம் நடைபெற உள்ளது. இதனால் அன்றைய தினம் மளிகை உள்ளிட்ட முக்கிய கடைகள் அடைக்கப்பட்டிருக்கும். இதனால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் என கூறப்படுகிறது.
வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மூலமாக 2024-25ஆம் ஆண்டுக்கான செம்மை நெல் சாகுபடி செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் திருப்பூரில் அதிக மகசூல் பெறும் விவசாயிகளுக்கு நெல் உற்பத்தித் திறனுக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டியில் கலந்து கொண்டு மாநில அளவில் முதலிடம் பிடிக்கும் விவசாயிக்கு ரூ.5 லட்சம் மற்றும் ரூ.7 ஆயிரம் மதிப்புடைய தங்கப்பதக்கம் வழங்கப்படவுள்ளது.
திருப்பூர் ரங்கநாதபுரம் பகுதியில் ஒரு கும்பல் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டிருப்பதாக வேலம்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் அவர்கள் தோட்டத்துப்பாளையம் பகுதியை சேர்ந்த 6 பேர் என்று தெரிய வந்த நிலையில் அவர்களை சுற்றி வளைத்து போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ 17500 ஐ பறிமுதல் செய்தனர்.
திருப்பூர் மாவட்டத்தில் இன்று (15.12.2024) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட, தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
திருப்பூர் பல்லடம் சேமலைகவுண்டன்பாளையத்தில் 3 பேர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், 16 நாட்கள் கடந்தும், இதில் தொடர்புடையவர்களை நெருங்க முடியாமல் காவல்துறையினர் திணறி வருகின்றனர். தோட்டத்தைக் குத்தகைக்கு எடுத்தவர்கள், தொழிலாளர்கள் என 50க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. குற்றவாளிகளை பிடிக்க, டி.ஐ.ஜி., எஸ்.பி., முழு நேரமும் பல்லடத்தில் முகாமிட்டு கண்காணித்து வருவதாக கூறப்படுகிறது.
திருப்பூரில் நல்ல தொழில் முனைவோரின் செயல்பாட்டால் ஒட்டுமொத்த சமுதாயமும் பயனடைய வேண்டும் என ராம்ராஜ் காட்டன் நிறுவனர் நாகராஜன் பேசினர். மிக சாதாரண சூழ்நிலையில் இருந்து வெற்றிக்கான பயணம் என்ற தலைப்பில் ஏற்றுமதியாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. சங்கத் தலைவர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார்.
திருப்பூர் பாரதியார் பல்கலைக்கழக கல்லூரி அணி வீரர்களுக்கு இடையேயான குத்துச்சண்டை போட்டி பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று நடைபெற்றது. மாநிலம் முழுவதும் இருந்து பல்வேறு கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர். இதில் திருப்பூர் அரசு சிக்கண்ணா, கல்லூரி வணிக நிர்வாகவியல் துறை இரண்டாம் ஆண்டு மாணவன் ஹரிஹரன் தங்கப் பதக்கம் வென்றார்.
காங்கேயம் அருகே வெள்ளகோவில் செமண்டம்பாளையத்தில் கடந்த 10ம் தேதி நிகழ்ந்த சாலை விபத்தில் பள்ளி ஆசிரியர் சரஸ்வதி, மாணவி ஸ்ரீ ராகவி ஆகியோர் பலியாகினார். இவர்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிவாரணத் தொகை வழங்கப்பட்டது. இந்த நிவாரணத் தொகைக்கான காசோலையை நேற்று செய்தி துறை அமைச்சர் சுவாமிநாதன் மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் வழங்கினர்.
Sorry, no posts matched your criteria.