Tiruppur

News December 28, 2024

திருப்பூரில் செவிலியர் பணி நேர்காணல் அறிவிப்பு

image

திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட ஆரம்பசுகாதார நிலையங்களில் காலியாக உள்ள தற்கால உள்பணியிடங்களை மாநகராட்சி நல சங்கம் மூலமாக ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. அதன்படி நகர சுகாதார செவிலியர்கள் 6 பேரும், மருந்தாளுனர் 2 பேர், ஆய்வக நுட்புனர் 6 பேரும் நியமிக்கப்பட உள்ளனர். இவர்களுக்கு வரும் 10ஆம், தேதி திருப்பூர் மாநகராட்சி சுகாதார பிரிவில் காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை நேர்காணல் நடைபெற உள்ளது.

News December 27, 2024

திருப்பூரில் பதின்ம வயது கர்ப்பம் அதிகரிப்பு!

image

திருப்பூர் மாவட்டத்தில், டீன் ஏஜ் பெண்கள் கர்ப்பமாவது நாளுக்கு நாள் அதிகரித்து வருதாக அதிர்ச்சி ரிப்போர்ட் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் முதல், டிசம்பர் மாதம் வரை இதுவரை 790, டீன் ஏஜ் பெண்கள் கர்ப்பம் தரித்துள்ளனர். இதே முந்தய ஆண்டில் 691 கர்ப்பம் தரித்துள்ளனர். இது கடந்த ஆண்டைவிட 14.32% அதிகம் என கூறப்பட்டுள்ளது.  இதனால் குழந்தை திருமணங்களும் கனிசமாக உயர்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

News December 27, 2024

குரூப்-4 தேர்வு இலவச பயிற்சி – கலெக்டர் அறிவிப்பு

image

தமிழ்நாடு அரசு தேர்வாணையம் சார்பில் குரூப்-4 கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், பில் கலெக்டர், தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் தேர்வுக்கான அறிவிப்பு அடுத்த ஆண்டு ஏப்ரல் 24- ஆம் தேதி வெளியிடப்படவுள்ளது. இந்நிலையில், குரூப் 4 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் ஜனவரி 3 ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது என கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்தார்.

News December 27, 2024

பெங்களூரு-திருவனந்தபுரம் சிறப்பு ரயில்

image

பயணிகளின் வசதிக்காக சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர் வழியாக பெங்களூரு-திருவனந்தபுரம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரயில் இன்று வெள்ளிக்கிழமை மதியம் 3.50 மணிக்கு பெங்களூரில் இருந்து புறப்பட்டு அடுத்த நாள் காலை 10.05 மணிக்கு திருவனந்தபுரம் அடையும் என சேலம் கோட்டை ரயில்வே அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.

News December 27, 2024

திருப்பூரில் 8 மாதத்தில் 25 ஆயிரம் கோடி

image

பின்னலாடை உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் சர்வதேச அளவில் மிக முக்கிய பங்காற்றுகிறது திருப்பூர் தொழில் நகரம். கடந்த சில ஆண்டுகளாக நலிவடைந்த பின்னலாடை உற்பத்தி மற்றும் ஏற்றுமதி 2024-25 ஆம் நிதி ஆண்டின் ஏப்ரல் தொடங்கி நவம்பர் வரையிலான 8 மாத காலத்தில் 25 ஆயிரம் கோடி ஏற்றுமதி செய்திருப்பதாகவும், இன்னும் 4 மாத காலத்தில், 40 ஆயிரம் கோடி என்ற இலக்கை அடையும் எனவும் ஏற்றுமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

News December 26, 2024

அவிநாசி அருகே சாலை விபத்தில் ஒருவர் பலி

image

திருப்பூர், அவிநாசி, மங்கலம் சாலையில், லாரி, கார் நேருக்கு நேர் மோதி, இன்று விபத்து ஏற்பட்டது. இதில் பழங்கரை பகுதியை சேர்ந்த ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். அவ்வழியே சென்றவர்கள் கொடுத்த தகவலின் பேரில் அங்கு சென்ற போலீசார், விபத்தில் உயிரிழந்தவரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அவிநாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். 

News December 26, 2024

34வது நாள் காத்திருப்பு போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள்

image

பல்லடம் அடுத்த காரணம்பேட்டை பெருமாகவுண்டம்பாளையம் பகுதியில் பாரத் பெட்ரோலியத்தின் ஐடிபிஎல் எண்ணெய் குழாய் பாதிக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் நடத்தி வரும் நிலையில் இன்று 34வது நாளாக காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில் அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

News December 26, 2024

மெட்ரோ ரயில் திட்டம்: திருப்பூர் வரை நீட்டிக்க வலியுறுத்தல்

image

திருப்பூர் நிட்மா சங்க அலுவலகத்தில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கோவை மெட்ரோ ரயில் திட்டம் தற்போது விமான நிலையம் வரை கொண்டுவரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தை திருப்பூர் வரை நீட்டிக்க வேண்டியது அவசியமாகும். இது தொடர்பாக ஏற்கனவே முதல்வர் மு.க.ஸ்டாலினை கடந்த ஏப்ரல் 12ஆம் தேதி சந்தித்து வலியுறுத்தியுள்ளதாக தெரிவித்தனர்.

News December 26, 2024

பொங்கலூர் அருகே வேன் கார் மோதி விபத்து

image

கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக அவ்வப்போது பாதையில் மாற்றி விடப்பட்டு ஒருவழிப்பாதையில் வாகனங்கள் சென்றுவருவதால் அவ்வப்போது விபத்து ஏற்படுகிறது. நேற்று பல்லடத்திலிருந்து அழகுமலை நோக்கி சென்ற வேனும், கோவையை நோக்கி சென்ற காரும் மோதி விபத்து ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக அனைவரும் காயம் இன்றி உயிர் தப்பினர்.

News December 26, 2024

திருப்பூரில் நாளை மின்தடை அறிவிப்பு

image

திருப்பூர் துணைமின் நிலையத்தில் நாளை (டிச.27) பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதால் காலை 9 மணி-மாலை 4 மணி வரை அவிநாசி ரோடு, புஷ்பா தியேட்டர் பகுதி, காலேஜ் ரோடு, ஓடக்காடு, பங்களா ஸ்டாப், காவேரி வீதி, ஸ்டேன்ஸ் வீதி, ஹவுசிங் யூனிட், முத்துசாமி வீதி விரிவு, கே.ஆர்.இ., லே- அவுட், எஸ்.ஆர். நகர் வடக்கு, நேதாஜி வீதி, குமரன்வீதி, பாத்திமா நகர், டெலிபோன் காலனி, உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும் என அறிவிப்பு.

error: Content is protected !!