India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தாராபுரம் தேசிய நெடுஞ்சாலை தனியார் கல்லூரி அருகே தாராபுரம் சாலையில் இருந்து இன்று காலை திருப்பூர் நோக்கி சென்ற அரசு பேருந்தும், லாரியும் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் அரசு பேருந்தில் பயணித்த 7 பேர் படுகாயம் அடைந்தனர். தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் விண்ணப்பிப்போருக்கு ஒரு பெண் குழந்தையெனில் 50 ஆயிரம் மற்றும் 2 பெண் குழந்தையெனில் தலா 25 ஆயிரம் சேமிப்பு பத்திரமாக வழங்கப்படும். 18 வயது நிறைவடைந்து பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் முதிர்வு தொகை வழங்கப்படுகிறது. முதிர்வுத் தொகை பெற விண்ணப்பிப்பதற்கான சிறப்பு முகாம் நாளை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாராபுரத்தில் காய்ச்சலுக்கு பெண் போலீஸ் எஸ்.எஸ்.ஐ உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தாராபுரம் போக்குவரத்து போலீஸ் எஸ்.எஸ்.ஐயா சுதா(47) என்பவர் பணியாற்றி வந்தார். இவருக்கு திடீரென ஏற்பட்ட காய்ச்சல் காரணமாக, கடந்த 4 நாள்களாக திண்டுக்கல்லில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.
பல்லடம் ஒன்றியம் செல்விபாளையம் ஊராட்சியில் சுமார் 10,000 மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு விசைத்தறி, கறிக்கோழி உற்பத்தி உள்ளிட்ட தொழில்கள் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே ஊராட்சியில் திருட்டு, வழிப்பறி சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து வருகிறது. இவற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் குற்ற செயல்களை தடுக்க கண்காணிப்பு கேமராவுடன் தட்டுப்பாட்டு வரை நேற்று அமைக்கப்பட்டது.
தொழில் நகரமான கோவை வரை மெட்ரோ ரயில் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அதனை தொழில் நகரமான திருப்பூர் வரை நீட்டிக்க வேண்டும் என தொழில்துறையினர் கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில் கோவையிலிருந்து உக்கடம் வழியாக திருப்பூர் வரை மெட்ரோ ரயிலின் உத்தேச பாதை வழித்தடங்கள் அடங்கிய விளம்பர பதாகை மாநகராட்சி அலுவலகம் அருகே வைக்கப்பட்டு, முதல்வருக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் புகழ்பெற்ற காளை சிலை அமைக்க கோரி பல்வேறு அமைப்புகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் காங்கேயம் முன்னாள் யூனியன் சேர்மன் மகேஷ் குமார் நேற்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை நேரில் சந்தித்து காங்கேயத்தில் காளை சிலை நிறுவுவதற்கான ஏற்பாடுகள் குறித்தும், அதற்கான இடையூறு பிரச்சனைகள் குறித்தும் நேரில் எடுத்துரைத்தார்.
இந்திய பள்ளிகள் விளையாட்டு குழுமம் நடத்தும் 68வது தேசிய அளவிலான கடற்கரை கையுந்து பந்து போட்டி ஒடிசா மாநிலம் பூரியில் நடைபெற்றது. இதில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். தமிழ்நாட்டு அணிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டு விளையாடிய குமுதா பள்ளி மாணவர்கள் பல்வேறு பிரிவுகளில் வெற்றி பெற்று சாதனை படைத்தனர். நேற்று அவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
கோவையில் இருந்து சேலம் நோக்கி அரசு பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. இந்த பஸ் கோவை செல்லும் தேசிய நெடுஞ்சாலை செங்கப்பள்ளி அருகே கஸ்தூர்பாளையம் பிரிவு அருகே வந்தபோது முன்னாள் சென்ற தனியார் பஸ் இரண்டும் நேற்று மோதியது. இந்த பேருந்தில் இருந்து 20க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர். அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் இல்லை. இது குறித்து ஊத்துக்குளி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பூரை சேர்ந்த சத்தியநாராயணன் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு கல்வி பயின்று வந்தார். சக மாணவர்கள் ‘ராகிங்” செய்து தாக்கியதால் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவத்தில் கல்லூரி மாணவர்கள் 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களிடம் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள 8 சட்டசபைதொகுகளுக்கான வாக்காளர் வரைவு பட்டியல் வெளியிடப்பட்டு, கடந்த அக்.29 முதல் நவ 28ம் தேதி வரை சுருக்கமுறை திருத்த பணிகள் நடைபெற்றன. இந்நிலையில், தேர்தல் கமிஷன் உத்தரவுப்படி, திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, பல்லடம், அவிநாசி, காங்கேயம், தாராபுரம், உடுமலை, மடத்துக்குளம் ஆகிய 8 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்காளர் வரைவு பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.