Tiruppur

News January 21, 2025

திருப்பூரில் இன்று மின் தடை ஏற்படும் பகுதிகள்!

image

திருப்பூர் மாவட்டத்தில் இன்று பல்வேறு பகுதிகளில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. அதன்படி இன்று காலை 9 மணி முதல், மாலை 4 வரை, வஞ்சிபாளையம், கணியம்பூண்டி, வேலம்பாளையம், பரமசிவம்பாளையம், ஊத்துக்குளி நகரம், ஊத்துக்குளி ஆர்எஸ், மொரட்டுபாளையம், பொதியபாளையம், உதியூர், கோமங்கலபுதூர், குண்டடம், கடைமடு, கள்ளர்பட்டிசுங்கம், நல்லம்பள்ளி, பூசாரிபட்டி ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

News January 20, 2025

திருப்பூர் மாவட்டத்தில் கிராம சபை கூட்டம்

image

திருப்பூர் மாவட்டத்திலுள்ள 265 கிராம ஊராட்சிகளிலும், குடியரசு தினமான வருகிற 26ம் தேதி அன்று காலை 11  மணியளவில் கிராம சபைக் கூட்டம் அந்தந்த ஊராட்சிகளின் பொது இடங்களில் நடைபெறும். கிராம சபைக் கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம், ஊராட்சியின் தணிக்கை அறிக்கை உள்ளிட்டவைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது என கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

News January 20, 2025

பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

image

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொது மக்களிடம் இருந்து வீட்டு மனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, சாலை வசதி வேண்டி, குடிநீர் வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 318 மனுக்கள் பெறப்பட்டு பொதுமக்கள் முன்னிலையில் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

News January 20, 2025

பின்னலாடை உற்பத்தி மூலப்பொருளான நூல் விலை குறைவு

image

திருப்பூர், கோவை மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஜவுளி உற்பத்தி தொழில் அதிகமாக இருந்து வருகிறது. இந்நிலையில் ஜவுளி உற்பத்திக்கு மூலப்பொருளான நூல் விலை கடந்த ஆண்டுகளில் நிலையில்லாமல் உயர்ந்து வந்தது. கடந்த நிதியாண்டு முதல் குறைந்து வந்த நிலையில் இந்த மாதத்திற்கான நூல் விலை 7 ரூபாய் குறைக்கப்பட்டு, இருப்பதாக நூற்பாலைகள் தெரிவித்துள்ளனர். இது ஜவுளி துறையினரிடம் வரவேற்பு பெற்றுள்ளது.

News January 20, 2025

சிறுமையை திருமணம் செய்த வாலிபர் கைது!

image

திருப்பூர் கல்லூரி சாலை பகுதியை சார்ந்தவர் சந்துரு. பெயிண்டர் ஆன இவர், 16 வயது சிறுமி ஒருவரை சில மாதங்களாக காதலித்து வந்துள்ளார். தொடர்ந்து சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி, சிறுமியின் தாய் சம்மத்துடன் திருமணம் செய்து கொண்டு, கர்ப்பமாக்கி உள்ளார். சைல்டு லைன் அமைப்புக்கு தகவல் வந்ததை அடுத்து, அவர்கள் கொடுத்த புகாரின் பேரில், வடக்கு மகளிர் போலீசார், போக்சோ வழக்கு பதிவு, செய்து சந்துருவை கைது செய்தனர்.

News January 20, 2025

திருப்பூர் தொழில் அதிபரிடம் 27 லட்சம் மோசடி

image

திருப்பூர் கணியாம்பூண்டியை தொழிலதிபர் ஒருவர், செல்போன் எண்ணை, ஒரு வாட்ஸ் அப் குழு இணைத்துள்ளனர். தொடர்ந்து அந்த குழுவில் பேசிய நபர் ஒருவர், பங்குச் சந்தையில் முதலீடு செய்தால், கூடுதல் லாபம் கிடைக்கும் என கூறியுள்ளார். இதனை நம்பி அந்த தொழில் அதிபர், பல்வேறு தவணைகளாக ரூ.27‌‌.25 லட்சத்தை பரிமாற்றம் செய்துள்ளார். பின்பு தன் ஏமாற்றப்பட்டதை அறிந்து, திருப்பூர் சைபர் க்ரைம் போலீசில் புகார் அளித்துள்ளார்.

News January 20, 2025

கராத்தே போட்டியில் வெண்கலம் பெற்ற மாணவர்கள்

image

சர்வதேச அளவிலான கராத்தேப் போட்டி, சென்னையிலுள்ள மான்ட்ஃபோர்ட் உள்விளையாட்டு அரங்கில் நேற்று (19/01/2025) நடந்தது. இதில் பங்கேற்ற பல்லடம் அட்வென்சர் அகாடமி ஆப் மார்ஷியல் ஆர்ட்ஸ் மாணவர்கள், நகுலன் கட்டாவில், வெள்ளியும், விகாஷ் மற்றும் சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோர் கட்டாவில் தலா ஒரு வெண்கலம் பெற்றனர். அவர்களை பயிற்ச்சியாளர் ராஜேஷ் பாராட்டினார்.

News January 19, 2025

திருப்பூர் மாவட்ட காவல்துறை இரவு ரோந்து விவரம்

image

திருப்பூர் மாவட்டத்தில் குற்ற சம்பவங்கள் அதிக அளவில் நடைபெறுவதால் அதனை தடுக்கும் வகையில் போலீசார் இரவு ரோந்து அலுவலர் விவரங்களை தினந்தோறும் அறிவித்து வருகின்றனர். அதன்படி இன்று இரவு திருப்பூர் மாவட்ட பொறுப்பு அதிகாரியாக பல்லடம் துணை காவல் கண்காணிப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் ஒவ்வொரு தாலுகாவிற்கும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

News January 19, 2025

திருப்பூர்; சொந்த ஊர் செல்லும் வட மாநில தொழிலாளர்கள்

image

அடுத்த மாதம் வட மாநிலங்களில் கும்பமேளா திருவிழா கொண்டாடப்பட உள்ளது. திருவிழாவுக்கு செல்ல வட மாநில தொழிலாளர்கள் தற்போது திருப்பூரில் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர். இதனால் ரயில் நிலையங்களில் வழக்கத்தை விட தினமும் பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்ல கூடுதல் சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன.

News January 19, 2025

திருப்பூரில் போலீசார் தீவிர சோதனை! ஏன் தெரியுமா? 

image

திருப்பூர் பின்னலாடை தொழில் நிறுவனங்களில் பல்வேறு மாநிலங்களிலிருந்து வட மாநில தொழிலாளர்கள் ஏராளமானோர் பணியாற்றி வருகின்றனர். இதில் உரிய ஆவணங்கள் இன்றி வங்கதேசத்தினர் சட்டவிரோதமாக பணியாற்றி வருகின்றனர். இவர்களை கண்காணிக்கும் விதமாக திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்தில் வங்கதேசத்தினர் யாரும் சட்ட விரோதமாக உள்ளனரா என தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

error: Content is protected !!