India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

▶️இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது ▶️விண்ணபிக்க <

திருப்பூர் மக்களே.., எதிர்பாராத நேரங்களில் வீட்டின் சமையல் கேஸ் சிலிண்டரில் எல்பிஜி (LPG) கசிவு ஏற்பட்டால், 1906 என்ற அவசர உதவி எண்ணுக்கு அழைக்கவும். இது இந்தியன் ஆயில், ஹெச்பிசி போன்ற அனைத்து எல்பிஜி நிறுவனங்களுக்கும் பொதுவான அவசர உதவி எண் ஆகும். வேறு எதேனும் உதவி தேவைப்பட்டால் 1800 233 3555 என்ற எண்ணையும் தொடர்பு கொள்ளலாம். இந்தத் தகவலை உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

இந்தியாவில் இருந்து அமெரிக்கா செல்லும் பொருட்களுக்கு 50 சதவீத வரியை அமெரிக்கா விதித்துள்ளது. இதனால் திருப்பூர் மாவட்ட ஆடை வர்த்தகம் கடும் பாதிப்படைந்துள்ளது. ஏறத்தாழ ரூ.3ஆயிரம் கோடி வரை பாதிப்படைந்துள்ளதாக தெரிவிக்கின்றனர். இந்நிலையில், இதுகுறுத்து உடனடி நடவடிக்கை தேவை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்த உங்கள் கருத்துகளை கீழே பதிவிடவும்!

திருப்பூர் ரயில் நிலையம் அருகே வடக்கு காவல் நிலைய போலீசார் சோதனை நடத்திய போது, தமிழக அரசு தடை செய்த குட்கா பொருட்களை வைத்திருந்த பிரோஜ் மற்றும் அஜிருதீன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து அவர்களிடம் இருந்து 5.3 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

திருப்பூர் மக்களே, மத்திய அரசு நிறுவனத்தில் வேலை வேண்டுமா? தி நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கம்பெனி என்ற பொதுத்துறை காப்பீடு நிறுவனத்தில், பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 550 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. பட்டப்படிப்பு முடித்தவர்கள் முதல் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.50,925 முதல் ரூ.96,765 வரை சம்பளம் வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் இங்கு <

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் மாநகராட்சி அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதையடுத்து, வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாயுடன் போலீசார் தீவிர சோதனை நடத்தினர். இந்த சோதனையில் எதுவும் தெரியவில்லையென உறுதி செய்யப்பட்டதையடுத்து, இது ஒரு தவறான தகவல் என உறுதி செய்யப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக வீரபாண்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தியாவின் பின்னலாடை ஏற்றுமதியில் 68 சதவீதம் திருப்பூரில் இருந்தே நடக்கிறது. இந்நிலையில், அமெரிக்க அதிபர் விதித்த 50 சதவீத அபராத வரியானது திருப்பூர் பின்னலாடை தொழிலை ஸ்தம்பிக்க செய்துள்ளது. இதன் காரணமாக திருப்பூரில் ரூ.4 ஆயிரம் கோடி மதிப்பிலான ஆடைகள் தேங்கி கிடக்கிறது. தினசரி ரூ.500 கோடி முதல் ரூ.700 கோடி வரை உடனடி இழப்பு ஏற்படும் என ஏற்றுமதியாளர் சங்க நிர்வாகி முத்துரத்தினம் தெரிவித்தார்.

திருப்பூர் மக்களே.., மின்சாரத்துறையில் காலியாக உள்ள 1543 இன்ஜினியர் மற்றும் சூப்பர்வைசர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சம்பளமாக மாதம் ரூ.30,000 – ரூ.1,20,000 வரை வழங்கப்படும். இதற்கு B.Sc, B.E. ,B.Tech, M.Tech, ME படித்தவர்கள் விண்ணபிக்கலாம். <

ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராமநத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் இலவசமாக வீட்டுமனை பெறலாம்.இந்த தகுதிகள் இருந்தால் கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை அளிக்கலாம். இந்த சூப்பர் திட்டம் குறித்து மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

திருப்பூர்: அத்திக்கடவு அவிநாசி திட்டத்தில் திருப்பூர், கோவை, ஈரோடு ஆகிய மாவட்டங்களில், 1,045 குளம், குட்டைகளுக்கு நீர் நிரப்பப்படுகிறது. இதில் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் பல இடங்களில் அடிக்கடி குழாய் உடைப்பு மற்றும் வால்வுகளில் பழுது ஏற்படுகிறது. இது குறித்த புகார்களுக்கு, 89258 52927, 89258 52928 எண்களில் தகவல் தெரிவிக்கலாம். இந்தத் தகவலை உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!
Sorry, no posts matched your criteria.