India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருப்பூர் மக்களே வீடு கட்ட ஆகும் செலவை விட வீட்டுக்கு வாங்கும் கட்டிட வரைபட மற்றும் சாக்கடை குழாய் அனுமதி வாங்க பல ஆயிரம் செலவு ஆகும். அந்த செலவை FREE ஆக்க ஒரு வழி. இதற்கு https://pmay-urban.gov.in/ என்ற இணையதளம் சென்று ஆதார் எண், வருமானம் போன்றவற்றை பதிவு செய்து விண்ணப்பித்து இலவச கட்டிட வரை பட அனுமதி பெறலாம். இதன் மூலம் உங்கள் செலவு மிச்சமாகும். வீடு கட்டபோறவங்களுக்கு SHARE பண்ணுங்க!

திருப்பூர் மாவட்டத்தில் நாளை செப்.13 காலை 10 மணி முதல் ரேஷன் குறைதீர் முகாம் நடைபெறுகிறது. இதில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், புதிய ரேஷன் அட்டை விண்ணப்பித்தல், செல்போன் எண் பதிவு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மனு அளிக்கலாம். மேலும் நியாய விலை கடைகளின் செயல்பாடுகள் குறித்தும் புகார் அளிக்கலாம் என திருப்பூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். முகாம் நடைபெறும் இடங்கள் <

திருப்பூர் மக்களே மத்திய அரசின் மின்சாரத் துறையில் கள பொறியாளர் & மேற்பார்வையாளர் பணிக்கு 1,543 காலியிடங்கள் உள்ளது. இதற்கு BE / B.Tech / B.Sc படித்தவர்கள் விண்ணபிக்கலாம். சம்பளமாக ரூ.23,000 முதல் ரூ.1,20,000 வரை வழங்கப்படும். இங்கு<

திருப்பூர் மாவட்டம் நல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மணியகாரம்பாளையம் பகுதியில், போலீசார் ரோந்து பணிகள் ஈடுபட்டிருந்தனர். அப்போது சட்டவிரோதமாக லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து அப்பகுதியில் சோதனை மேற்கொண்டு லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட வேல் துரை என்பவரை கைது செய்து, அவரிடம் இருந்து லாட்டரி சீட்டுகளையும், நல்லூர் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அறிவித்த அறிக்கையில்: 2025, 2026 ஆண்டிற்கான தமிழகத்தை சேர்ந்த 150 புத்த மதம் சேர்ந்தவர்களுக்கு புனித பயணம் மேற்கொள்ள மானியம் வழங்கப்படுகிறது. ஒரு நபருக்கு அதிகபட்சம், 5 ஆயிரம் ரூபாய் வீதம் நேரடி மானியமாக வழங்கப்படும். மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறபான்மையினர் நல வாரிய அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெறலாம். என தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாநகராட்சி நிர்வாகத்தால் கங்கா நகர் பிரதான சாலையில் உள்ள தனியார் பணியன் தொழில் நிறுவனத்தில் இருந்து பிரதான சாலையில் உள்ள பாதாள சாக்கடை குழாயில் தொழிற்சாலை கழிவுநீரினை மாநகராட்சி முன்அனுமதியின்றி விதிகளுக்கு முரணாக இணைத்தது மற்றும் மாநகராட்சி சாலையை அனுமதியின்றி சேதப்படுத்தியது கண்டறியப்பட்டதால் ரூ.1,00,000 அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டதாக மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் குமரன் சாலையில் வடக்கு போலீசார் சோதனை பணியில் ஈடுபட்டிருந்த போது, வட மாநிலத்தைச் சேர்ந்த அமன் குமார் மீனா என்ற நபரிடம் 2.1 கிலோ குட்கா பொருட்கள் இருப்பது தெரியவந்தது. போலீசார் அதிரடியாக உடையதை பறிமுதல் செய்து, அவர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில், இன்று 11.09.2025 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை, பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். காங்கேயம், தாராபுரம், உடுமலை, பல்லடம், அவிநாசி ஆகிய பகுதியில் உள்ள காவல்துறையின் இரவு ரோந்து பணி விபரம், மாவட்ட காவல் துறையினரால் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அவசர உதவிக்கு நூற்றி எட்டு ஐ அழைக்கவும்.

▶️திருப்பூர் மாவட்ட இணையதளம்: https://tiruppur.nic.in/ta/ இதில் மாவட்டம் சார்ந்த அறிவிப்புகள், முக்கிய எண்கள் போன்றவைகளைப் பெற்றுக் கொள்ளலாம்.
▶️திருப்பூர் மாநகராட்சி:https://www.tnurbantree.tn.gov.in/tiruppur/about-us/ இதில் மாநகராட்சி சார்ந்த புகார்களுக்கு அணுகலாம்.
▶️மாவட்ட நீதிமன்றம்https://tiruppur.dcourts.gov.in/இதில் நீதிமன்றம் சார்ந்த சேவைகளைப் பெறலாம்.

திருப்பூர்: ரயில்வே கோட்ட அலுவலர் மரியா மைக்கேல் அறிவிப்பில், ‘ கோவையில் தண்டவாளம் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் நாளை(செப்.12) ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி திருச்சி-பாலக்காடு எக்ஸ்பிரஸ் (வண்டி எண். 16843) திருச்சியில் இருந்து மதியம் 1 மணிக்கு புறப்பட்டு இருகூர்-போத்தனூர் வழியாக இயக்கப்படும். இந்த ரயில் சிங்காநல்லூர், பீளமேடு, கோவை ரெயில் நிலையங்களுக்கு போகாது.
Sorry, no posts matched your criteria.