Tiruppur

News September 16, 2025

திருப்பூரில் இலவச Sewing Machine ஆப்ரேட்டர் பயிற்சி

image

திருப்பூரில், தமிழக அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ், இலவச Sewing Machine Operator பயிற்சி வழங்கப்படுகிறது. 70 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சியில், Sewing Machine செயல்பாடு உள்ளிட்ட அனைத்து பயிற்சிகளும் அளிக்கப்படும். இதற்கு 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். இதற்கு விண்ணப்பிக்க <>இந்த லிங்கை க்ளிக்<<>> செய்யவும். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News September 16, 2025

திருப்பூர்: ரூ.85,000 சம்பளத்தில் SBI வங்கியில் வேலை!

image

திருப்பூர் மக்களே, SBI பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள 122 Specialist Officer பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு B.E./B. Tech. படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.85,920 முதல் ரூ.1,05,280 வரை வழங்கப்படும். இந்த பணிக்கு தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர். இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர், அக்.02ம் தேதிக்குள் <>இந்த லிங்கை க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News September 16, 2025

திருப்பூரில் தனியார் வேலை வாய்ப்பு முகாம்

image

திருப்பூர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும் மையம் வளாகத்தில் (அறை எண்.439-ல்), வரும் 19ம் தேதி, காலை 10 மணி முதல், சிறப்பு தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதில் 10, 12ம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ, பொறியியல் பட்டப்படிப்பு முடித்த அனைத்து மனுதாரர்கள் தங்களது சுய விவரம், கல்விச் சான்றுகளின் நகல்களுடன் கலந்து கொண்டு வேலை வாய்ப்பு பெறலாம். இதை உடனே SHARE பண்ணுங்க!

News September 16, 2025

திருப்பூர் மக்களே: இந்த வாட்ஸ் அப் நம்பர் முக்கியம்!

image

திருப்பூர் மக்களே.. பிறப்பு, இறப்பு சான்றிதழ் தொடர்பான சேவைகள், சொத்து வரி செலுத்துதல் , பொதுமக்கள் குறைதீர்க்கும் சேவைகள், என 32 வகையான சேவைகளுக்கு இனி எங்கும் அலைய வேண்டாம். உங்கள் பகுதிக்கான அனைத்து சேவைகளுக்கும் 9445061913 எனும் வாட்ஸ் ஆப் எண்ணிற்கு ஒரு ‘HI’ அல்லது ‘வணக்கம்’ மெசேஜை அனுப்பினால் போதும். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News September 16, 2025

திருப்பூர்: ஆவினில் பணி புரிய அரிய வாய்ப்பு!

image

▶️தமிழக அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் இலவச ‘பால் கணக்கெடுப்பு, அக்கவுண்டிங்’ பயிற்சி வழங்கப்படுகிறது. ▶️20 நாட்கள் நடைபெறும் இந்தப் பயிற்சியில் தினசரி பால் கணக்கீடு, கலெக்‌ஷன், நிர்வாகம் உள்ளிட்டவை சார்ந்த பயிற்சிகள் வழங்கப்படும். ▶️இதில் பயிற்சி பெற்றால் ஆவின் நிறுவனத்தில் பணிபுரியும் வாய்ப்பை பெறலாம். இதற்கு விண்ணப்பிக்க <>இங்கே கிளிக்<<>> பண்ணுங்க. உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News September 16, 2025

திருப்பூர் காவல்துறை எச்சரிக்கை

image

திருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பில், பொதுமக்களுக்கு வங்கி சார்ந்த சேவைகளின் விழிப்புணர்வு வெளியிடப்பட்டுள்ளது. வங்கிகளில் இருந்து பெறப்படும் ஓடிபி மற்றும் பாஸ்வேர்ட் போன்றவற்றை, பிற நபர்களுக்கு தெரிவிக்காமல் இருக்க வேண்டும். வங்கியில் இருந்து தொடர்பு கொள்வதாக, பொதுமக்களை ஏமாற்றி வங்கி கணக்கில் இருந்து பணம் திருடப்பட வாய்ப்புள்ளது. எனவே பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

News September 16, 2025

திருப்பூரில் வட மாநில வாலிபர்கள் கைது

image

திருப்பூர் வடக்கு காவல்நிலையை எல்லைக்கட்பட்ட கள்ளம்பாளையம் பகுதியில் பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது‌. சந்தேகத்தின் அடிப்படையில் அங்கு சோதனை செய்த போலீசார் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த பிரோஸ், சுசில் குமார் முக்கியா உள்ளிட்ட மூன்று பேரை கைது செய்து சீட்டு கட்டு மற்றும் ரூ.2500 பணத்தை பறிமுதல் செய்துள்ளனர்.

News September 15, 2025

திருப்பூர் மாவட்டத்தில் இரவு நேர ரோந்து பணி

image

திருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பாக பொதுமக்களின் பயன்பாட்டிற்காக இன்று இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகளின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று 15.09.2025 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள திருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.

News September 15, 2025

திருப்பூர்: நாளை உங்களுடன் ஸ்டாலின் முகாம்

image

திருப்பூர் மாவட்டத்தில் நாளை செப்.16:உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள் விபரம் :-குண்டடம் -பழனி ஆண்டவர் பாதயாத்திரை குழுமண்டபம், ஊதியூர்
காங்கயம்-மாரியம்மன் கோவில் மண்டபம், படியூர்.பல்லடம்-
ராஜம்மாள் கந்தசாமி கவுண்டர் திருமண மண்டபம், வேலம்பாளையம். உடுமலை -சிவா மண்டபம்,ஊத்துக்குளி பெரிய நாயகி அம்மன் திருமண மண்டபம், சாமியார்பாளையம், பொங்கலூர்-ஏஜி திருமண மண்டபம், புத்தரச்சல்.

News September 15, 2025

திருப்பூர்: அக்.5ம் தேதி தடகள போட்டி!

image

திருப்பூர் மூத்தோர் தடகள சங்கம் சார்பில், மாவட்ட அளவிலான மூத்தோர் தடகளப் போட்டிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வரும் அக்டோபர் 5-ம் தேதி, கே.செட்டிபாளையம் விவேகானந்தா வித்யாலயா பள்ளி மைதானத்தில் நடைபெறும் இப்போட்டிகளில், 30 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் பங்கேற்கலாம். போட்டியாளர்களுக்கான நுழைவுக் கட்டணம் ரூ.200. பதிவு செய்ய கடைசி தேதி செப்டம்பர் 20.

error: Content is protected !!