India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருப்பூர் மாவட்டத்திலும் அதன் சுற்றியுள்ள பகுதிகளிலும் குறுந்தொழில் நிறுவனங்கள், 12 கிலோவாட்டுக்கு கீழ் மின்சாரம் பயன்படுத்தும்போது, ‘3ஏ1’ கட்டண விகிதத்தை நிர்ணயிப்பதற்கு பதில், மின்வாரியம் வார்த்தைகளால் விளையாடுவதாக, குறுந்தொழில் முனைவோர் வேதனை தெரிவித்துள்ளனர். இவ்விவகாரத்தில் அரசு தலையிட்டு, குறுந்தொழில் நிறுவனங்களுக்கு உரிய சலுகையை கிடைக்கச் செய்ய வேண்டும் என கோரிக்கை வலுத்துள்ளது.
திருப்பூர் சிறுபூலுவப்பட்டி அம்மன் நகரை அடுத்த தாய் மூகாம்பிகை நகர் குப்பைமேட்டில் குழந்தையின் அழுகுரல் கேட்டுள்ளது. தொடர்ந்து அப்பகுதி பொதுமக்கள் சென்று பார்த்தபோது பிறந்த சில மணி நேரமே ஆன உடலில் ரத்தங்களுடன் கூடிய ஆண் குழந்தை இருந்துள்ளது. உடனடியாக வேலம்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து போலீசார் குழந்தையை மீட்டு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்.
திருப்பூர் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக திருப்பூர் மாவட்டத்தில் இயங்கும் அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும் என திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் இன்று தெரிவித்துள்ளார். பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் திருப்பூர் மாவட்டத்தில் மழை இல்லாத காரணத்தால் பள்ளி மற்றும் கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும் என தெரிவித்தார்.
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் நகர பகுதிகளில் அதிகாலை 4 மணி முதல் கன மழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் பொதுமக்களும் பள்ளி மாணவர்களும் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி உள்ளனர். திருப்பூர் மாவட்ட கலெக்டர் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பாரா என்று பள்ளி மாணவர்கள் எதிர்பார்த்துள்ளனர். சற்று நேரத்தில் கன மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
திருப்பூர் மாவட்டத்தில் இன்று மாலை பல்லடம் வட்டத்திலுள்ள கள்ளிபாளையம் அருகில் சாலையில் மோட்டர் பைக்கில் சென்ற போது கோவையிலிருந்து பல்லடம் வழியாக குமுளி வரை சென்ற பெரியகுளம் போக்குவரத்து கழகத்தை சேர்ந்த அரசு பேருந்து மின்ஊழியர் வசந்தபாபு மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்து பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
திருப்பூர் மாவட்டம், காரணம்பேட்டை சேர்ந்தவர் துளசிமணி, இவர் பழைய இரும்பு வியாபாரம் செய்து வருகிறார். இவர் கோவை சென்று விட்டு, அவிநாசி சாலை வழியாக காரணம்பேட்டை நோக்கி சென்று கொண்டிருந்தார். சூலூர் பிரிவு அருகே வந்து கொண்டிருந்தபோது கார் இன்ஜினிலிருந்து திடீரென புகை கிளம்பியதுடன், தீப்பிடித்து எரிய தொடங்கியது. இஞ்சினில் பற்றிய தீ கார் முழுவதும் மளமளவென பரவி கொழுந்து விட்டு எரிந்தது.
திருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பில் தினமும் ஏரியா வாரியாக திருப்பூர் மாவட்டம் முழுவதும் இரவு ரோத்து பணியில் ஈடுபடும் போலீசாரின் பெயர் மற்றும் செல்போன் எண்கள் சமூக வலை தளங்களில் வெளியிடப்பட்டு வருகின்றன. அதன்படி இன்று செவ்வாய் கிழமை இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விபரத்தை மாவட்ட காவல்துறை வெளியிட்டு உள்ளது அதனை பயன்படுத்தி பொதுமக்கள் தங்கள் பகுதியில் நடைபெறும் குற்ற செயல்களை தெரிவிக்கலாம்
ட்ரம்ப் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, இந்தியா அமெரிக்காவுடன் நட்புறவு தொடர்வதால், புதிய வர்த்தக வாய்ப்புகள் பெருகி, திருப்பூர் ஏற்றுமதி, 10 சதவீதம் அதிகரிக்கவும் தொழில்துறையினர் நம்பிக்கையுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகத்தில், பெரிய மாற்றம் உருவாகும் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. இது தொடர்பாக வரும் காலங்களில் உற்பத்தி உயர வாய்ப்புள்ளதாக தெரிவித்தனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் நேற்று பூதப்பாண்டி வழக்கறிஞர் கிறிஸ்தவ ஜோதி படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும் வக்கீல் பாதுகாப்பு சட்டத்தை ஏற்றக்கோரி திருப்பூர் பாரஸ்ட் ஸ்டேஷன் அட்வகேட் அசோசியேசன் திருப்பூர் மாவட்ட கோர்ட் வக்கீல் சங்கம் ஆகியவை சார்பில் நேற்று கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டம் நடைபெற்றது. இதன் காரணமாக உடுமலையில் உள்ள நீதிமன்றங்களில் வழக்கு விசாரணை பாதிக்கப்பட்டது.
திருப்பூர் மாவட்ட தனித்தேர்வு மையங்களில் கடந்த 2017-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் 2022-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் வரையிலான பருவங்களில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு எழுதிய தனித்தேர்வர்களின் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு மதிப்பெண் சான்றிதழ்கள் அந்த தேர்வு மையங்கள் மூலம் தேர்வர்களுக்கு நேரடியாக வினியோகிக்கப்பட்டது.
Sorry, no posts matched your criteria.