Tiruppur

News September 19, 2025

திருப்பூர்: தீரா நோயால் தூக்கிட்டு தற்கொலை!

image

திருப்பூர்: பல்லடம் அருகே உள்ள சுக்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சின்னான்(71). இவர் கடந்த சில வாரங்களாக நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். அரசு மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்று குணமாகாததால் மன வருத்தத்தில் இருந்தவர் நேற்று(செப்.18) வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News September 19, 2025

திருப்பூர்: டிகிரி முடித்தால் சூப்பர் அரசு வேலை!

image

திருப்பூர் மக்களே.., தமிழ்நாடு குழந்தைகள் நலத்துறையில் காலியாக உள்ள 12 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த வேலைக்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.45,000 வரை சம்பளம் வழங்கப்படும். வருகிற அக்.3ஆம் தேதியே விண்ணப்பிக்க கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக்<<>> பண்ணுங்க. இதை உடனே அமைவருக்கும் SHARE பண்ணுங்க!

News September 19, 2025

திருப்பூர்: ரயிலில் அடிபட்டு ஒருவர் பலி!

image

திருப்பூர்: வஞ்சிபாளையம் சோமனூர் பகுதியைச் சேர்ந்த 45 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்து கிடப்பதாக திருப்பூர் ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற ரயில்வே சப் இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி தலைமையிலான போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து உயிரிழந்தவர் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News September 19, 2025

திருப்பூர்: BE/B.Tech படித்தால் மத்திய அரசு வேலை!

image

திருப்பூர் மக்களே.., மத்திய அரசின் மின்னனு கழகமான ECIL நிறுவனத்தில் காலியாக உள்ள 160 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு B.E, B.Tech படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு ரூ.31,000 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க <>இங்கே<<>> கிளிக் பண்ணுங்க. இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News September 19, 2025

திருப்பூரில் லஞ்சம் கேட்டால் உடனே Call!

image

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்கும் அதிகாரிகள் குறித்து பொதுமக்கள் எந்தவித தயக்கமும் இன்றி புகார் அளிக்கலாம். லஞ்சம் தொடர்பான புகார்களை dsptprdvac.tnpol@nic.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விரிவாக எழுதி அனுப்பலாம். அல்லது என்ற 0421-2482816 எண்ணுக்கு தொடர்பு கொண்டு உங்கள் புகாரைப் பதிவு செய்யலாம். ஊழலற்ற நிர்வாகத்தை உறுதி செய்ய அனைவருக்கும் இதை ஷேர் பண்ணுங்க!

News September 19, 2025

திருப்பூர்: 12ஆவது படித்தால் விமான நிலையத்தில் வேலை!

image

திருப்பூர் மக்களே.., IGI விமான சேவை நிறுவனத்தில் காலியாக உள்ள 1446 பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்தப் பணிக்கு 12th முடித்தால் போதுமானது. இதற்கு மாதம் ரூ.35,000 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வருகிற செப்.21ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க <>இங்கே<<>> கிளிக் பண்ணுங்க. இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News September 19, 2025

திருப்பூர்: ரயில் டிக்கெட் எடுப்பது இனி ஈசி!

image

திருப்பூர் மக்களே.., ரயிலில் டிக்கெட் புக் செய்ய ஏற்கனவே பல செயலிகள் உண்டு. இந்நிலையில், முன்பதிவில்லா ரயில் டிக்கெட், ரயிலில் உணவு உட்பட அனைத்து இதர சேவைகளுக்கும் <>‘ரயில் ஒன்’<<>> எனும் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆகையால், இனி தினசரி ரயில் பயணிகள் கவுண்டரில் நிற்க வேண்டிய அவசியம் இல்லை. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க. அப்புறம்.., தீபாவளிக்கு டிக்கெட் போட்டாச்சா..?

News September 19, 2025

திருப்பூர் அருகே ஆற்றில் வந்த பெண் சடலம்!

image

திருப்பூர்: மடத்துக்குளம் அருகே சர்க்கார் கண்ணாடிப்புத்தூர் பகுதியில் அமராவதி ஆற்றில் அழுகிய நிலையில் பெண்ணின் சடலம் கிடப்பதாக அப்பகுதி பொதுமக்கள் மடத்துக்குளம் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தீயணைப்பு துறை மற்றும் பொதுமக்கள் உதவியுடன் பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

News September 19, 2025

உடுமலையில் வேலை தேடுவோர் கவனத்திற்கு!

image

திருப்பூர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் வாயிலாக சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை காலை 10 மணி முதல் 2 மணி வரை திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் நடைபெற உள்ளது எனவே உடுமலை பகுதியில் வேலை தேடுவோர் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News September 19, 2025

திருப்பூர் தபால் நிலையத்தில் ரயில்வே முன்பதிவு சேவை

image

இந்திய தபால்துறை சார்பில் பல்வேறு சேவைகள் பொது மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருப்பூர் அஞ்சல் கோட்டத்திற்குட்பட்ட காந்திநகர் தபால் அலுவலகத்தில் ரயில்வே பயணிகள் தங்கள் ரயில் பயணத்தின் முன்பதிவு மற்றும் தட்கல் முன் பதிவுகளை செய்து கொள்ள சேவை தொடங்கப்பட்டிருப்பதாக திருப்பூர் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!