Tiruppur

News September 24, 2025

திருப்பூர்: லாட்டரி சீட்டு விற்ற நபர் கைது

image

திருப்பூர் வீரபாண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, குப்பாண்டம்பாளையம் பகுதியில், லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுவதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் சோதனை மேற்கொண்ட போலீசார், லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட வேலுச்சாமி(46) என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்துள்ளனர்.

News September 23, 2025

திருப்பூர் இரவு ரோந்து போலீசார் விபரம்

image

திருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பில், தினமும் திருப்பூர் மாவட்டம் முழுவதும், இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் பெயர் மற்றும் செல்போன் எண்கள் சமூக வலை தளங்களில் வெளியிடப்பட்டு வருகின்றன. அதன்படி இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விபரத்தை மாவட்ட காவல்துறை வெளியிட்டு உள்ளது, அதனை பயன்படுத்தி பொதுமக்கள் தங்கள் பகுதியில் நடைபெறும் குற்ற செயல்களை போலீசாருக்கு தெரிவிக்கலாம்.

News September 23, 2025

திருப்பூரில் கஞ்சா வைத்திருந்த நபர் கைது

image

திருப்பூர் ரயில் நிலையம் அருகே வடக்கு போலீசார் சோதனை பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்று கொண்டிருந்த கலகண்ஹு கனார்(33) என்பவரை சோதனை செய்தபோது, அவரிடம் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா 2 கிலோ இருந்தது கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

News September 23, 2025

திருப்பூரில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்!

image

திருப்பூரில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (செப்.24) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை, பி.என்.ரோடு, ராமமூர்த்தி நகர், ராமையா காலனி, ரங்கநாதபுரம், அப்பாச்சி நகர், பவானி நகர், திருநீலகண்டபுரம், எஸ்.வி.காலனி, பண்டிட் நகர், கொங்கு மெயின் ரோடு, குத்தூஸ்புரம், வெங்கடேசபுரம், குமாரந்தனபுரம், நெசவாளர் காலனி, எம்.எஸ்.நகர், புது பஸ்டாண்ட், மற்றும் லட்சுமி நகர் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

News September 23, 2025

திருப்பூர்: இனி எளிதாக லைன்மேனை அழைக்கலாம்!

image

திருப்பூர் மக்களே, உங்கள் வீடு அல்லது தெருவில் திடீரென மின்தடை ஏற்பட்டால், இனி லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய அவசியமில்லை. தற்போது, பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, உங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் போதும், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் உங்கள் வீடு தேடி வருவார். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News September 23, 2025

திருப்பூர்: வங்கியில் வேலை அரிய வாய்ப்பு!

image

திருப்பூர் மக்களே, பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா வங்கியில் உதவி பொது மேலாளர், டேட்டா அனலிஸ்ட், ஐடி செக்யூரிட்டி, ஐடி இன்பிராஸ்ட்ரக்சர் என 41 வகையான பதவிகளில் 349 பணியிடங்கள் உள்ளன. B.E/B.Tech, MCA, M.Sc உள்ளிட்ட படிப்புகள் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். குறைந்தது ரூ.1.40 லட்சம் சம்பளம் வழங்கப்படும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு<> கிளிக்<<>> பண்ணுங்க. வரும் 30.09.2025 கடைசி நாளாகும். SHARE IT!

News September 23, 2025

திருப்பூர்: கிராம வங்கி வேலை.. கடைசி வாய்ப்பு!

image

திருப்பூர் மக்களே, இந்திய வங்கிப் பணியாளர் தேர்வாணையம், காலியாக உள்ள கிராம வங்கி உதவியாளர் பணிக்காக வரும் செப்.28 வரை விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ளது. இதற்கு மாதம் ரூ.35,000 முதல் சம்பளம் வழங்கப்படும். ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதுமானது. இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க இங்கே <>கிளிக்<<>> பண்ணுங்க. இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க. ஒருவருக்காவது உதவும்!

News September 23, 2025

திருப்பூர்: 12th போதும் 7267 அரசு வேலைகள்! உடனே APPLY

image

திருப்பூர் மக்களே, மத்திய அரசின் கீழ் செயல்படும் EMRS பள்ளிகளில் பல்வேறு பணிகளுக்கு 7267 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு, 12th, டிப்ளமோ, டிகிரி, நர்சிங் என அந்தந்த பணிகளுக்கு ஏற்ப கல்வித்தகுதியில் வேண்டும். சம்பளம் – ரூ.18,000 முதல் ரூ.2,09,200 வரை வழங்கப்படும். கடைசி தேதி – செப். 23 ஆகும். விவரங்களுக்கு இங்கு<> கிளிக்<<>> செய்யவும். அனைவருக்கும் SHARE பண்ணுங்க. கண்டிப்பாக ஓருவருக்காவது உதவும்!

News September 23, 2025

திருப்பூரில் மனைவியை கொன்ற கணவர் கைது!

image

மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர்கள் ரிங்கு மண்டேல் (35) மற்றும் கெளரா மண்டேல் (42). தம்பதி இருவரும் கடந்த 15ம் தேதி காங்கேயம், படியாண்டிபாளையம் பகுதியில் உள்ள கட்டுமான நிறுவனத்திற்கு வேலைக்கு வந்துள்ளனர். பின் 17ம் தேதி கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட தகராறில் ரிங்குவை கணவர் கொலை செய்து விட்டு தப்பினார்.
பின் எஸ். ஐ கபில்தேவ் தலைமையில் போலீசார் மேற்கு வங்கத்தில் கெளரா மண்டேலை கைது செய்தனர்.

News September 23, 2025

திருப்பூர்: இரவு ரோந்து பணியில் காவல் அதிகாரிகள் விவரம்

image

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில், ஊதியூர், காங்கேயம், ஊத்துக்குளி, அலங்கியம், குண்டடம், தாராபுரம், மூலனூர், உடுமலைப்பேட்டை, பல்லடம், அவிநாசி ஆகிய பகுதிகளில் இன்று இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகளின் விவரங்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அவசர உதவிக்கு 100 ஐ அழைக்கவும்.

error: Content is protected !!