Tiruppur

News March 19, 2025

திருப்பூர்: காரில் 500 மீ இழுத்து செல்லப்பட்ட பெண் பரிதாப பலி

image

கோவை அருகே சரவணம்பட்டியை சேர்ந்த சுப்புலட்சுமி (40) ஸ்கூட்டரில் சென்றபோது, பல்லடம் அருகே ஒரு கார் மோதியது. இதில், அவர் காரின் முன்பகுதியில் சிக்கி, அரை கிலோமீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார். அருகில் பைக்கில் வந்த கிருஷ்ணகுமார் (34) லேசான காயமடைந்தார். பொதுமக்கள் காரை பிடித்து நேற்று போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் காரை ஓட்டிய சதீஷ்குமாரை (40) விசாரித்து வருகின்றனர்.

News March 18, 2025

இரவு நேர ரோந்து பணி காவல் அதிகாரிகளின் விவரம்

image

திருப்பூர் மாவட்டத்தில், தங்களது பகுதியில் இன்று, 18.03.2025 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை, பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். அவிநாசி, பல்லடம், உடுமலைப்பேட்டை, தாராபுரம், காங்கயம், சேவூர், மடத்துக்குளம், குண்டடம் ஆகிய பகுதிகளில் இரவு நேர ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகளின் பெயர்கள் மற்றும் தொலைபேசி எண்கள் திருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.

News March 18, 2025

திருப்பூர் விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

image

திருப்பூரில் கால்நடை வளர்க்கும் விவசாயிகள் பெருமளவில் உள்ளனர். அவர்களுக்காக வரும் 20ம் தேதி வெள்ளாடு வளர்ப்பு பயிற்சி நடைபெற உள்ளது. திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் காலை 10 மணிக்கு இந்த பயிற்சி வகுப்பு தொடங்குகிறது. மேலும், இது தொடர்பான சந்தேகங்களுக்கு 04212248524 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்

News March 18, 2025

திருப்பூர்: கிராம சபை கூட்டம் 23ஆம் தேதி நடைபெறுகிறது

image

உலக தண்ணீர் தினம் மாலை வருகின்ற 23ஆம் தேதி திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 265 ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் அந்தந்த ஊராட்சியில் உள்ள பொது இடத்தில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் உலக தண்ணீர் தினத்தை பற்றி விவாதித்தல், சுத்தமான குடிநீர் விநியோகத்தை உறுதி செய்தல், ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது செலவினம் தொடர்பாக விவாதிக்கப்படுகிறது

News March 18, 2025

திருப்பூரில் வேலை வாய்ப்பு முகாம்

image

திருப்பூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலை வாய்ப்புதுறை (ம) தொழில் நெறி வழிகாட்டுதல் மையம் சார்பில் வரும் 29ஆம் தேதி மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இந்த வேலை வாய்ப்பு முகாம் பல்லடம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் நடைபெறவுள்ளது. இதில் 8, 10, 12, ஐடிஐ, டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள் பங்கேற்றலாம். வேலை இல்லாதவர்கள் இந்த வேலை வாய்ப்பு முகாமை மிஸ் பண்ணிடாதீங்க. அப்புறம் Share பண்ணுங்க.

News March 18, 2025

ஆர்ப்பாட்டம் நடத்திய பாஜக; 272 பேர் கைது

image

டாஸ்மாக்கில் ஆயிரம் கோடி ஊழல் நடந்ததைக் கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்தார். இதனையடுத்து போலீசார் அவரை நேற்று கைது செய்தனர். இதனைக் கண்டித்து திருப்பூர் வடக்கு மாவட்ட பாரதி ஜனதா கட்சியின் சார்பில் அங்கேரிபாளையத்தில் உள்ள டாஸ்மாக் குடோனை முற்றுகையிட்டு பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 272 பேரை போலீசார் கைது செய்தனர்.

News March 17, 2025

திருப்பூர் அருகே விபத்து; சம்பவ இடத்தில் மரணம்

image

பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் சத்ரன் குமார் (21). இவர் அம்மாபாளையம் பகுதியில் தங்கி கூலி வேலை செய்து வந்தார். திருப்பூர் கோட் செட் அருகே நேற்று மாலை தண்டவாளத்தைக் கடக்கும்போது எதிர்பாராதவிதமாக ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற திருப்பூர் போலீசார் இறந்த உடலை கைப்பற்றி திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

News March 17, 2025

உங்க வீட்டுல குழந்தைகள் இருக்கா! மிஸ் பண்ணிடாதீங்க

image

திருப்பூரில் இன்று (மார்ச்.17) முதல் 22ஆம் தேதி வரை அங்கன்வாடி மையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்களில், வைட்டமின் ‘ஏ’ திரவம் வழங்கும் முகாம் நடைபெற உள்ளது. இதில், மாவட்டம் முழுவதும் 5 வயதுக்குட்பட்ட 1,30,956 குழந்தைகளுக்கு வைட்டமின் ‘ஏ’ திரவம் வழங்கப்பட உள்ளது. மேலும், குழந்தைகள் வைத்திருப்பவர்களுக்கு Share பண்ணுங்க.

News March 17, 2025

திருப்பூர்: 1100 பேருக்கு புதிய பாஸ்போர்ட்

image

ஒவ்வொரு மக்களவைத் தொகுதியிலும் ஒரு பாஸ்போர்ட் சேவா கேந்திர அலுவலகம் என்ற மத்திய அரசின் திட்டத்தின் கீழ், திருப்பூர் தலைமை தபால் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில், கடந்த ஜனவரி 24ஆம் தேதி திறக்கப்பட்டது. திருப்பூரில் துவங்கப்பட்ட பாஸ்போர்ட் சேவா கேந்திர அலுவலகம் மூலம் கடந்த ஜனவரி 24 முதல் மார்ச் 14 வரை 1,400 பேர் விண்ணப்பித்துள்ள நிலையில் 1,100க்கும் மேற்பட்டோருக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளது.

News March 17, 2025

சர்வதேச போட்டியில் கலந்து கொள்ளும் மாணவிக்கு உதவி

image

திருப்பூரை சேர்ந்த கார்த்திகேயன் என்பவரது மகளான 5ஆம் வகுப்பு பயிலும் மாணவி தியாக்ஷ்மி நேபாள நாட்டில் நடைபெறும் சர்வதேச கராத்தே மற்றும் கால்பந்து போட்டிகளில் பங்கேற்பதற்காக செல்கிறார். இதையறிந்த இந்திரா சுந்தரம் தொண்டு நிறுவனத்தின் நிறுவனத் தலைவர் இந்திரா சுந்தரம் மாணவியின் பயணச்செலவை ஏற்றுக்கொண்டு கலெக்டர் கிறிஸ்துராஜ் முன்னிலையில் நேற்று தியாக்ஷ்மியிடம் ரூ.60 ஆயிரம் வழங்கினார்.

error: Content is protected !!