India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் நாளைய தினம் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்பட உள்ளன. திருப்பூர் மாநகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஊர்வலமாக எடுத்து செல்லப்பட உள்ளது. இதற்காக 1500 போலீசார் சிறப்பு கமாண்டர் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக மாநகர போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கலூர் ராம் நகரைச் சேர்ந்தவர் கே.ஜி.பழனிசாமி (75), ஓய்வுபெற்ற ஆசிரியர். இவர் நேற்று பல்லடம் வடுகபாளையம் சென்றுவிட்டு கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையிலிருந்து ராம் நகர் செல்ல வீட்டுக்கு மொபட்டில் திரும்பியுள்ளார். கார் மோதியதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தார். சிகிச்சை பலனின்றி தனது ஐம்பதாவது திருமண நாளில் பரிதாபமாக உயிரிழந்தார்.
பெருமாநல்லூர் அருகே வள்ளிபுரம் வணங்காமுடியனூரில் ஆதி குன்னத்தூர் மகா பெரியசாமி கோவில் உள்ளது. இந்த கோவில் தெலங்கானா முன்னாள் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனின் குல தெய்வ கோவிலாகும். இந்த கோவிலுக்கு தமிழிசை சவுந்தரராஜன் குடும்பத்துடன் வந்தார். அவரை பா.ஜனதா கட்சியினர் சால்வை அணிவித்து வரவேற்றனர். இதைத்தொடர்ந்து தமிழிசை சவுந்தரராஜன் குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார்.
அகில இந்திய தொழிற்தேர்வில் தனித்தேர்வர்களாக தேர்வு எழுதுவதற்கு விண்ணப்பிக்க திருப்பூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் பிரபு செய்தி வெளியிட்டுள்ளார். விண்ணப்பப் படிவம் மற்றும் நிலையான வழிகாட்டுதல்களை www.skilltraining.tn.gov.in- என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இதன் மூலம் விண்ணப்பதாரர்கள் திருப்பூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்துக்கு நேரில் வந்து செப்-18க்குள் விண்ணப்பிக்கலாம்.
திருப்பூர் காலேஜ் ரோடு வசந்தம் நகரை சேர்ந்த பாலசுந்தரம் என்பவர் கடந்த 2 ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் தாய் வீட்டுக்கு சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 2 பவுன் சங்கிலி மற்றும் ரூ.13,000 பணம் திருடுபோயிருந்தது. இதுகுறித்து காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு 3 வட மாநிலத்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மடத்துக்குளம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா சாக்லேட் விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் விசாரணை நடத்திய மதுவிலக்கு காவல் ஆய்வாளர் சாந்தி தலைமையிலான போலீசார், செங்கம் பழனி புதூர் பஸ் நிறுத்தம் பகுதிகள் சட்டவிரோதமாக கஞ்சா சாக்லேட் விற்பனை செய்த வட மாநில வாலிபரை நேற்று கைது செய்தனர்.
தாராபுரம் டவுன் குளத்து புஞ்சை தெரு பாப்பம்மாள் திருமண மண்டபம் அருகே வசித்து வருபவர் செந்தில்குமார் (வயது 54 ). இவர் தனியார் நிறுவனத்தில் டிரைவராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி லட்சுமி(வயது48). தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் செடிகளுக்கு தண்ணீர் விட்டுக் கொண்டிருக்கும் போது எதிர்பாராதமாக மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
தாராபுரம் பொள்ளாச்சி ரோடு தனியார் கல்லூரி அருகே ஈரோடு வீட்டு வசதி வாரியம் சார்பில் தாராபுரம் மனை மேம்பட்டு திட்டத்தின் கீழ் 150-க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆன பின்பும் பயனர்களிடம் முறையாக ஒப்படைக்காவிட்டால் இருந்து வருகிறது. இதனால் பாழடைந்து கிடக்கும் இந்த வீடுகளில் இரவு நேரங்களில் நடைபெறும் சமூக விரோத செயல்கள் அப்பகுதி பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூர் மாவட்டம்
உடுமலை அருகே குடிமங்கலம் ஒன்றியத்துக்கு உட்பட்ட சிக்கனுத்து கிராமத்தில் ஊருக்கு நடுவில் சஞ்சீவிராய பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான 6 ஏக்கர் நிலம் தனியார் ஆக்கிரமிப்பில் உள்ளதாக கூறப்படுகின்றது. இந்த நிலையில் இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் நேற்று வந்தபோது விவசாயிகள் முற்றுகையிட்டு எதிர்ப்பு தெரிவித்ததால் கிளம்பிச் சென்றனர்.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திருப்பூர் பூ மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்வு. மல்லி கிலோ 720 ரூபாய், முல்லை 480 ரூபாய், ஜாதி மல்லி 480 ரூபாய், அரளி 150 ரூபாய், செவ்வந்தி 160 ரூபாய் முதல் 280 ரூபாய் வரை, சம்பங்கி 280 ரூபாய், பெங்களூர் கலர் ரோஸ் வகைகள் 320 ரூபாய், தாமரைப்பூ 20 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை விற்கபடுகிறது. இருப்பினும் வியாபாரம் எதிர்பார்த்த அளவு இல்லை என வியாபாரிகள் வேதனை அடைந்தனர்.
Sorry, no posts matched your criteria.