India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பல்லடம் காரணம்பேட்டை பகுதியில் உள்ள தனியார் நூற்பாலையில் கடந்த 3 ஆண்டுகளாக தனது 6 வயது மகனுடன் தங்கி பணிபுரிந்து வரும் ஒடிசாவை சேர்ந்த அனிதா நாயக், அதே நிறுவனத்தில் பணியாற்றி வந்த ஒடிசாவை சேர்ந்த கணுதாஸ் சரியாக வேலை செய்யவில்லை என உரிமையாளரிடம் புகாரளித்தார். இதில் ஆத்திரமடைந்த கணுதாஸ் அப்பெண்ணை பழி வாங்குவதற்காக அவரது 6 வயது மகனை கழுத்தை நெரித்து கொலை செய்தார். போலீசார் அவரை கைதுசெய்தனர்.
திருப்பூர் ஆட்சியர் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலரான கிறிஸ்துராஜா, வார விடுமுறை தினமான இன்றும், நாளையும் (நவ.16, 17) சிறப்பு முகாமை அமைத்து புதிய வாக்காளர் பெயர் சேர்ப்பு, இடமாற்றம், தொகுதி மாற்றம் உள்ளிட்ட திருத்தங்களை மேற்கொள்ள அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு சென்று பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர். இச்சிறப்பு முகாம் இம்மாதம் 23, 24ஆம் தேதிகளிலும் நடைபெறும்.
திருப்பூர் தெற்கு மின் உபகோட்டம் முதலிபாளையம் பிரிவு அலுவலகத்திற்குட்பட்ட வி.ஜி.பாளையம், புதுப்பாளையம் ஆகிய பகிர்மான பகுதிகளில் மின் கட்டண கணக்கீட்டு மாதம் சில நிர்வாக காரணங்களுக்காக இரட்டைப்படை மாதத்தில் இருந்து ஒற்றைப்படை மாதத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மின் நுகர்வோர்களுக்கு 11-ம் மாதம், 1, 3, 5, 7, 9, 11 ஆகிய ஒற்றைப்படை மாதங்களில் மின் கட்டண கணக்கீடு செய்யப்படும் என்று தெரிவித்தனர்.
திருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பில் தினமும் ஏரியா வாரியாக திருப்பூர் மாவட்டம் முழுவதும் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் பெயர் மற்றும் செல்போன் எண்கள் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டு வருகின்றன. அதன்படி இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விபரத்தை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. அதனை பயன்படுத்தி பொதுமக்கள் குற்ற செயல்களை போலீசாருக்கு உடனே தொலைபேசி மூலம் தெரிவிக்கலாம்.
திருப்பூர் மாவட்டத்தில் பொது தேர்வு எழுத உள்ளோர், தேர்வு மைய விபரம், தேர்வெழுத உள்ள மாணவ, மாணவியர் தங்கள் இணைப்புடன் வழங்கிய சுய விவரங்களில் ஏதேனும் மாற்றம் இருந்தால், தலைமை ஆசிரியர் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, மாணவரிடம் வழங்க வேண்டும். இன்று முதல் வரும், 22ஆம் தேதி வரை மாணவர் ஒப்புதலுடன் மாற்றம், திருத்தம் செய்து கொள்ளலாம் என தேர்வுகள் துறை மற்றும் மாவட்ட கல்வித்துறை தெரிவித்துள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தமிழ் வளர்ச்சிக்கு பாடுபட்ட தமிழ் அறிஞர்கள், கவிஞர்கள், சான்றோர்கள் 2024-25ம் ஆண்டிற்கான டாக்டர் அம்பேத்கர் தமிழ்நாடு அரசு விருதுக்கு திருப்பூர் கலெக்டர் அலுவலத்தில் அறை எண் 113இல் விண்ணப்பம் பெற்று இந்த மாத இறுதிக்குள் நேரடியாகவோ அஞ்சல் மூலமாகவோ அனுப்பி வைக்கலாம் என கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்தார்.
பல்லடத்தை சேர்ந்தவர் செல்வமணி (46). பனியன் கட்டிங் வேஸ்ட் வியாபாரம் செய்து வந்தார். பல்லடம் வணிகவரித்துறை அலுவலகத்தில், கடந்த 2010ல், செல்வமணி புதிய ஜி.எஸ்.டி எண் வாங்க விண்ணப்பித்தார். வணிகவரி உதவி அதிகாரி சேமகுமார் (55), லஞ்சம் கேட்டதாக புகாரளிக்கப்பட்டது. இவ்வழக்கில் திருப்பூர் தலைமை குற்றவியல் கோர்ட்டில் 3 ஆண்டு சிறை தண்டனை, 4,000 ரூபாய் அபராதம் விதித்து, நீதிபதி செல்லதுரை தீர்ப்பு வழங்கினார்.
திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், திருப்பூர் மாவட்டத்தில் நிலத்தடி நீர் மேம்படுத்தும் பொருட்டு மழை நீரை குளம், குட்டைகள், பொதுக்கிணறுகள் மற்றும் ஆழ்குழாய் கிணறுகளில் நீர் செறிவூட்டும் திட்ட குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதற்கு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமை தாங்கினார். கலெக்டர் கிறிஸ்துராஜ் முன்னிலை வகித்தார். இதில் பலர் கலந்து கொண்டனர்.
திருப்பூர் பின்னலாடை சாம்ராஜ்யம் ஆண்டுக்கு சுமார் பல்லாயிரம் கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி ஆகி வருகிறது. கடின உழைப்பாலும் பொருட்களை விட முயற்சிகளும் கட்டமைக்கப்பட்டுள்ளது. இதில் குழந்தை தொழிலாளர்கள் இல்லாத நகரம் என்ற சாதனை புரிந்துள்ளது. திருப்பூரில் முதல் முறையாக குழந்தை தொழிலாளர் ஒழிப்பு சட்டத்தை செயல்படுத்திய நகரம் என்ற பெருமையும் வரலாறும் இருக்கிறது.
திருப்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு வாரமாகவே அவ்வப்போது மழை பெய்து வருகிறது. மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். திருப்பூர் குமரன் ரோடு 6 மி.மீ, கலெக்டர் அலுவலக பகுதியில் 3 மி.மீ, ஊத்துக்குளியில் 10.80 மி.மீ, மூலனுரில் 19 மி.மீ, நல்லதங்காள் ஓடை பகுதியில் 12 மி.மீ, காங்கேயம் பகுதியில் 5 மி.மீ, வெள்ளகோவிலில் 6 மி.மீ என மாவட்டம் முழுவதும் 81.மி.மீ மழை பதிவானது.
Sorry, no posts matched your criteria.