Tiruppur

News September 24, 2024

திருப்பூரில் தொழில் தொடங்க கடன் ஆட்சியர் அழைப்பு

image

முதல்வரின் காக்கும் கரங்கள் என்ற திட்டம் மூலம் முன்னாள் படைவீரர்களுக்கு தொழில் தொடங்க கடன் வழங்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள முன்னாள் படை வீரர்கள் நல உதவி இயக்குநர் அலுவலகம் அல்லது 2971127 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.  மேலும்  exweltup@tn.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தெரிந்து கொள்ளலாம் என ஆட்சியர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

News September 24, 2024

மாவட்ட கண்காணிப்பு அதிகாரி நியமனம்

image

தமிழக அரசின் ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசியல் திட்ட பயன்களை கண்காணிப்பு பட்டியல் ஐஏஎஸ் அதிகாரிகள் மாவட்ட கண்காணிப்பு அதிகாரியாக நியமிக்கப்படுவார்கள் தமிழக அளவில் கண்காணிப்பு அதிகாரிகள் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் புதிதாக நியமிக்கப்பட்டு உள்ளனர். அந்த வகையில் திருப்பூர் மாவட்ட கண்காணிப்பு அதிகாரியாக சென்னை தொழிற்சாலைகள் மற்றும் வணிக துறை இயக்குனர் நிர்மல்ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.

News September 24, 2024

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை

image

திருப்பூர் அணைக்கட்டு பகுதியில் குடியிருப்பு ஒன்றில் குடியிருந்து வந்த நாகசுரேஸ், அவரது மனைவி விஜயலட்சுமி மகள் முத்தீஸ்வரி ஆகியோர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட நிலையில் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இறந்து 4 நாட்கள் ஆன நிலையில் அழுகிய நிலையில், அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில் போலீசார் வீட்டின் கதவை உடைத்து சடலங்களை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News September 23, 2024

லஞ்சம் பெற்ற விஏஒக்கு சிறை தண்டனை

image

திருப்பூர் மாவட்டம் கோவிந்தாபுரம் பகுதி சேர்ந்த தேவராஜ் என்பவர் பட்டா மாறுதல் பெறுவதற்காக கடந்த 2009 ஆம் ஆண்டு கோவிந்தபுரம் கிராம நிர்வாக அலுவலர் திருமலைச்சாமி என்பவருக்கு 5000 ரூபாய் லஞ்சம் வழங்கியுள்ளார். இந்த வழக்கு விசாரணை திருப்பூர் முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் நிறைவடைந்து குற்றம் சாட்டப்பட்ட திருமலைச்சாமிக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

News September 23, 2024

“மக்களே அச்சமடைய வேண்டாம்”

image

திருப்பூர், தாராபுரம் பைபாஸ் சாலையில் இன்று இரண்டாவது நாளாக சிறுத்தை நடமாட்டம் உள்ளதா என வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். இந்நிலையில் வன சரக அலுவலர் மௌனிகா தலைமையில் சம்பவ இடத்திற்கு வந்து வனத்துறையினர் ஆய்வு செய்தபோது சிறுத்தை வந்ததற்கான எந்தவிதமான தடயங்களும் இல்லாததால், பொதுமக்கள் அச்சமடைய வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர்.

News September 23, 2024

கலெக்டர் அலுவலகத்தில் குவிந்த மனுக்கள்

image

திருப்பூர் கலெக்டர்அலுவலக கூட்டரங்கில் கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டமானது இன்று நடைபெற்றது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் இலவச வீட்டு மனை பட்டா, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை சார்பாக 516 மனுக்களை அளித்துள்ளனர்.

News September 23, 2024

திருப்பூர் மாநகராட்சி மாமன்ற கூட்டம்

image

திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள மாமன்ற உறுப்பினர்கள் கூட்ட அரங்கில், மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் தலைமையில் மாமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநகராட்சி கமிஷனர் பவன்குமார், துணை மேயர் பாலசுப்பிரமணியம், மாமன்ற உறுப்பினர்கள், மண்டல தலைவர்கள், மாநகராட்சி அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

News September 23, 2024

தாராபுரத்தில் சிறுத்தை நடமாட்டம்: பீதியில் மக்கள்

image

தாராபுரம்- ஒட்டன்சத்திரம் பைபாஸ் சாலையில் தனியார்க்கு சொந்தமான கேஸ் பங்க் உள்ளது. இந்த கேஸ் பங்கின் அருகே சிறுத்தை ஒன்று இருப்பதை தாராபுரம் பகுதியைச் சேர்ந்த சிவக்குமார் (40) என்பவர் பார்த்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து அவர் காங்கேயம் வனச்சரக அலுவலருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

News September 22, 2024

திருப்பூர்: திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது

image

வெள்ளகோவில் அடுத்த எல்.கே.சி நகரை சேர்ந்தவர் சோமசுந்தரம். இவருக்கு சொந்தமான ஸ்டுடியோவில் நேற்று முன் தினம் 2 கேமிராக்கள் திருடு போனது. இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த தனுஷ்கரன் (22), சேலம் அம்மாபேட்டையை சேர்ந்த முகமது யூனிஸ் (22) ஆகிய 2 பேரை நேற்று கைது செய்தனர்.

News September 22, 2024

திருப்பூரில் 3 பேருக்கு ‘குண்டாஸ்’

image

திருப்பூர்: பெருமாநல்லுார் அருகே கணக்கம்பாளையத்தை சேர்ந்தவர் புவனேஸ்வரன். இவர் தனது தோழியின் போட்டோவை செல்போனில் பதிவு செய்து வைத்திருந்தார். இவருக்கு தெரியாமல், நண்பர்கள் போட்டோவை பகிர்ந்து கொண்டு, பணம் கேட்டு மிரட்டினர். இந்த பிரச்சனையில் புவனேஸ்வரன் கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட 3 பேரை குண்டாசில் கைது செய்ய கமிஷனர் உத்தரவிட்டார். 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.