India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருப்பூர் ரயில் நிலையம் அருகே வடக்கு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக நின்ற இருவரை பிடித்து விசாரணை செய்தனர். இதில் அவர்கள் கடலூரைச் சேர்ந்த விக்ரம்(24), ஜெயசீலன்(20) என்பதும் இவர்கள் அணைப்பாளையம் பகுதியில் நிறுவனத்தில் வேலை செய்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்த போலீசார் 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
உடுமலை அருகே திருமூர்த்தி மலையில் உள்ள அமணலிங்கேஸ்வரர் கோவில் பகுதியில் ஏராளமான குரங்குகள் தற்பொழுது நடமாடி வருகின்றன. தற்சமயம் சில தினங்களாகவே குரங்குகள் மர்மமான முறையில் உயிரிழந்து வருவதாக கூறப்படுகின்றது இந்த நிலையில் வனத்துறையினர் இன்று ஆய்வு செய்தனர். குரங்குகள் நோய்வாய்ப்பட்டு நடக்க முடியாமல் உயிரிழந்துள்ளதால் ரத்த மாதிரி சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிவித்தனர்.
உடுமலை அருகே திருமூர்த்தி மலையில் உள்ள அமணலிங்கேஸ்வரர் கோவில் பகுதியில் ஏராளமான குரங்குகள் தற்பொழுது நடமாடி வருகின்றன. தற்சமயம் சில தினங்களாகவே குரங்குகள் மர்மமான முறையில் உயிரிழந்து வருவதாக கூறப்படுகின்றது இந்த நிலையில் வனத்துறையினர் இன்று ஆய்வு செய்தனர். குரங்குகள் நோய்வாய்ப்பட்டு நடக்க முடியாமல் உயிரிழந்துள்ளதால் ரத்த மாதிரி சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிவித்தனர்.
திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று 25.02.2025 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு, திருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிப்பு வெளியானது. அவிநாசி, பல்லடம், உடுமலைப்பேட்டை, காங்கேயம், தாராபுரம் ஆகிய பகுதிகளில் இரவு நேர ரோந்து பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் பெயர்கள் மற்றும் தொலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.
சிவன்மலையில் உள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ஆண்டவர் உத்தரவு பெட்டியில் ஒவ்வொரு முறையும் பக்தர் கனவில் தோன்றும் ஒரு பொருள் வைத்து பூஜிக்கப்பட்டு வருகிறது. அந்த அடிப்படையில் இன்றைய தினம் உத்தரவு போட்டியில் வைக்கோல் வைத்து பூஜை நடத்தப்பட்டு வருகிறது. உத்தரவு பெட்டியில் வைக்கப்படும் பொருளானது ஒருவித தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது ஐதீகம்
பொதுத்துறை வங்கியான பரோடா வங்கியில் தொழிற்பயிற்சிக்கான 4,000 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் திருப்பூரில் உள்ள காலியிடங்கள் உள்ளன. இதற்கு ஊதியமாக ரூ.12,000 முதல் ரூ.15,000 வழங்கப்படுகிறது. விண்ணப்பிக்க கடைசி நாள் மார்ச்.11 ஆகும். <
திருப்பூர் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் 17 முதல்வர் மருந்தகங்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஊத்துக்குளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் அமைந்துள்ள முதல்வர் மருந்தகம் நேற்று திறந்து வைக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் ஆயிரம் முதல்வர் மருந்தகங்களை முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி வழியாக திறந்து வைத்தார்.
உடுமலைப்பேட்டை புறவழிச்சாலையில் நின்ற லாரியின் பின்னால் கேரளா மாநிலம் மலப்புரத்தில் இருந்து பழனிக்குச் சென்ற கார் மோதி விபத்துக்குள்ளானது. காரை ஓட்டி வந்தவரும், அவரது இரண்டு வயது ஆண் குழந்தையும் உயிரிழந்தனர்.காருக்குள் சிக்கியிருந்த பெண்ணையும், குழந்தையும் மீட்ட போலீசார், அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
திருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு 24-02-2025 திங்கட்கிழமை இரவு நேர ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகளின் பெயர்கள் மற்றும் தொலைபேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. அவிநாசி, பல்லடம், உடுமலைப்பேட்டை, தாராபுரம், காங்கயம் ஆகிய பகுதிகளில் இரவு நேர ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகளை இரவு நேரங்களில் பொதுமக்கள் தங்களுக்கு ஏற்படும் இடர்பாடுகளை தெரிவித்து பயன்பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்எல்ஏ தலையில் நடந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி முன்பு அலங்கரித்து வைக்கப்பட்ட ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதில் முன்னாள் எம்எல்ஏ குணசேகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பொதுமக்களுக்கு இனிப்புகளும் வழங்கினர்.
Sorry, no posts matched your criteria.