Tiruppur

News February 28, 2025

நதிநீர் இணைப்பை நிறைவேற்ற வழக்கு

image

திருப்பூரில் பாண்டியாறு – மாயாறு இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழக பொதுப்பணித்துறை மூத்த பொறியாளர்கள் சங்கத்தினர் சென்னை ஹை கோர்ட்டில் பொது நல வழக்கு கொடுத்துள்ளனர். தடுப்பணை பல இடங்களில் அமைத்து கான்கிரீட் குழாய் மார்க்கமாக நீரை திருப்பி விடுவதன் வாயிலாக கூடுதலாக தண்ணீர் கிடைக்கும் என தெரிவித்தனர்.

News February 28, 2025

ரூ.550 பிரிமியம் தொகைக்கு ரூ.10 லட்சம் காப்பீடு

image

இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் பேங்க் (ம) தனியார் இன்சூரன்ஸ் இணைந்து காப்பீடு திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் பயனாளிகளை சேர்ப்பது (ம) விழிப்புணர்வு முகாம் திருப்பூரில் நேற்று நடைபெற்றது. இதில் ரூ.350 பிரிமியம்க்கு ரூ.5 லட்சமும், ரூ.550 பிரிமியம்க்கு ரூ.10 லட்சம் வரை காப்பீடு அளிக்கப்படுகிறது. இக்காப்பீடு திட்டம் குறித்து விவரங்களுக்கு 155299, 033 22029000 என்ற எண்ணை அழைக்கலாம்.

News February 27, 2025

திருப்பூர் பள்ளி மாணவி உலக சாதனை

image

தமிழ்நாடு ஸ்போர்ட்ஸ் யோகா பவுண்டேஷன் சார்பில் பதசன் ஜாலா கோனசனா யோகாசன போட்டி கரூரில் நடந்தது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 125 மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் அன்னை மெட்ரிக்குலேசன் பள்ளி சார்பில் மாணவி ஆர்.யாசினி கலந்து கொண்டார். இவர், தொடர்ந்து 10 நிமிடம் பாதசன ஜாலா கோனசனா ஆசனத்தில் நின்று , சோழன் புக் ஆப் வேர்ல்டு ரெக்கார்ட் என்ற புதிய உலக சாதனை படைத்தார்.

News February 27, 2025

திருப்பூர்: அஞ்சல் விபத்து காப்பீடு முகாம்

image

திருப்பூரில், அஞ்சல் துறை சார்பில் விபத்து காப்பீட்டு திட்ட சிறப்பு முகாம் இன்று நடைபெற்றது. இதில் இறப்பு, நிரந்தர மொத்த ஊனம், நிரந்தர பகுதி ஊனம், இறுதிச் சடங்கு செலவுகள், ஒரு நபர் போக்குவரத்து செலவு, இரண்டு குழந்தைகள் கல்விச் செலவு, உள்நோயாளி உள்ளிட்டவைகளுக்கு காப்பீடு திட்ட முகாம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

News February 27, 2025

இருகூர் – பாலக்காடு ரயில் மார்ச்-1ல் ரத்து

image

இருகூர் ரயில் பாதையில் பராமரிப்புப்பணி மேற்கொள்ள இருப்பதால் திருச்சியில் மதியம் 1:00 மணிக்கு புறப்பட்டு பாலக்காடு செல்லும் பாலக்காடு டவுன் எக்ஸ்பிரஸ் ரயில், வரும் 1ம் தேதி ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த ரயில் ஈரோடு, திருப்பூர், கோவை வழியாக பாலக்காடு டவுன் ரயில் நிலையம் வரை செல்லும் என்பது குறிப்பிடதக்கது.

News February 27, 2025

யூனியன் வங்கியில் வேலை: அப்ளை பண்ணுங்க

image

பொதுத்துறையை சேர்ந்த யூனியன் வங்கியில் உள்ள காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ‘அப்ரென்டிஸ்’ பிரிவில் தமிழகம் முழுவதும் 122 காலிப் பணியிடங்கள் உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க எதாவது ஒரு பட்டப்படிப்பு படித்திருந்தால் போதும். 20 -28 வயது உடையவராக இருக்க வேண்டும். மாதம் ரூ.15,000 வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் வரும் மார்ச் 5ம் தேதிக்குள்<> விண்ணப்பிக்க வேண்டும்<<>>. ஷேர் பண்ணுங்க

News February 27, 2025

குரங்குகள் திடீரென உயிரிழப்பு! நடந்தது என்ன

image

திருப்பூரில் மேற்குதொடர்ச்சி மலை அடிவாரத்தில் திருமூர்த்தி மலை உள்ளது. இங்கு பஞ்சலிங்க அருவி உள்ளதால் திரளான பக்தர்கள் (ம) சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு கடந்த 10 நாள்களாக குரங்குகள் ஒன்றன் பின் ஒன்றாக உயிரிழந்தன. இதனையடுத்து வனத்துறையினர், குரங்குகளின் ரத்த மாதிரி, சளி மாதிரிகளை ஆய்வகத்து அனுப்பினர். குரங்குகளின் மாதிரியின் முடிவுகள் பின் அடுத்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

News February 27, 2025

போக்சோ வழக்கில் 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை

image

திருப்பூர், மடத்துக்குளம் வேடப்பட்டி பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் கூலித் தொழிலாளி. இவர் 2023ஆம் ஆண்டு ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவியை தனியாக அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்த வழக்கு விசாரணை திருப்பூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்ட மணிகண்டனுக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை வழங்கி இன்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

News February 26, 2025

வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து கூட்டம்

image

திருப்பூர் கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறையில் செயல்படுத்தப்படும் வளர்ச்சித்திட்டப்பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் கோ.மலர்விழி, ஊரக வளர்ச்சித்துறை செயற்பொரியாளர் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

News February 26, 2025

திருப்பூரில் நாளை மின்தடை அறிவிப்பு

image

திருப்பூரில், மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை, கீழ்கண்ட ராமமூர்த்தி நகர், பிஎன் சாலை, ராமையா காலனி, ரங்கநாதபுரம், கொங்கு நகர், ஈ.ஆர்.பி. நகர், அப்பாச்சி நகர், கோல்டன் நகர், திருநீலகண்டபுரம், எஸ்வி காலனி, கொங்கு பிரதான சாலை, பண்டிட் நகர், வ.உ.சி. நகர், டி.எஸ்.ஆர். லேஅவுட், முத்துநகர் ஆகிய இடங்களில் மின்தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!