Tiruppur

News October 9, 2024

வெடி விபத்து தொடர்பாக 2 பேரிடம் விசாரணை

image

திருப்பூர் பாண்டியன் நகர் பொன்னம்மாள் வீதியில் நேற்று மதியம் ஏற்பட்ட வெடி விபத்தில் மூன்று பேர் உயிரிழந்த நிலையில், 14 பேர் காயம் அடைந்தனர். இந்த வடிவத்திற்கு காரணமான கோவில் திருவிழாவிற்கான பட்டாசுகள் உற்பத்தி செய்யும் நம்பியூரை சேர்ந்த சரவணகுமார் மற்றும் பாண்டிய நகர் பகுதியில் வீட்டின் உரிமையாளரான கார்த்திக் ஆகியோரிடம் போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News October 9, 2024

நள்ளிரவில் கோர விபத்து: 4 பேர் உயிரிழப்பு

image

திருப்பூர், மடத்துக்குளம் அருகே கருப்புசாமி புதூர் பகுதியில் புதிய நான்கு வழிச்சாலையில், நேற்று இரவு பொலிரோ வாகனம், டெம்போ ட்ராவலர் மோதிய விபத்தில் திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த தியாகராஜன் மனைவி பிரீத்தி, மகன் ஜெயப்பிரியன், தாயார் மனோன்மணி ஆகியோர் உயிரிழந்தனர். மேலும் அப்பா நாட்ராயன் மற்றொரு மகன் ஜீவப்பிரியன் உடுமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

News October 9, 2024

திருப்பூர் அருகே விபத்து 4 பேர் உயிரிழப்பு

image

திருப்பூர் அருகே ஜீப்பும் சுற்றுலா வேனும் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் சேகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை கிணத்துக்கடவில் துக்க நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு பழனிக்கு திரும்பிய போது விபத்து ஏற்பட்டுள்ளது. இவ்விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சிறுவன் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

News October 9, 2024

நாட்டு வெடிகுண்டு விபத்து: இபிஎஸ் கண்டனம்

image

திருப்பூரில் நாட்டு வெடிகுண்டு விபத்தில் 3 பேர் உயிரிழந்த நிலையில், அதற்கு எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது X தளத்தில் பதிவிட்டுள்ள அவர், நாட்டு வெடிகுண்டு விபத்தில் 3 பேர் உயிரிழப்பு செய்தி அதிர்ச்சியளிக்கிறது. மக்கள் பாதுகாப்பு குறித்த விஷயங்களில் திமுக அரசு, அலட்சியத்துடன் செயல்படுவது கண்டனத்திற்குரியது. விபத்திற்கான காரணத்தை உரிய விசாரணை கண்டறியுமாறு கூறியுள்ளார்.

News October 8, 2024

காங்கேயம் அமைச்சருக்கு கூடுதல் பொறுப்பு

image

காங்கேயம் தொகுதி எம்எல்ஏவும், தமிழக செய்தி மற்றும் தமிழ் வளர்ச்சி துறை அமைச்சராக இருப்பவர் மு.பெ. சாமிநாதன். இவர் திருப்பூர் மாவட்ட பொறுப்பு அமைச்சராக இருந்து வந்த நிலையில், இன்று நீலகிரி மாவட்டத்திற்கு கூடுதல் பொறுப்பாக முதல்வரால் நியமிக்கப்பட்டார். இதனால் திருப்பூர் மாவட்ட திமுகவினர் அமைச்சர் சாமிநாதனை சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

News October 8, 2024

தீபாவளி: திருப்பூர் மாவட்ட நிர்வாகம் முக்கிய அறிவிப்பு

image

திருப்பூர் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்காலிக பட்டாசு கடைகள் நடத்திட விருப்பம் உள்ளவர்கள் வருகிற 19ஆம் தேதிக்குள் இ-சேவை மையங்கள் service center வழியாக இணையவழியில் விண்ணப்பிக்கலாம். நிர்வாக காரணங்களை முன்னிட்டு வருகின்ற 19ஆம் தேதிக்குள் தற்காலிக பட்டாசு உரிமம் கோரி வரப்பெறும் விண்ணப்பங்கள் மட்டும் பரிசீலனை எடுத்துக் கொள்ளப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News October 8, 2024

அதிமுக சார்பில் நாளை ஆர்ப்பாட்டம்

image

திருப்பூர், தாராபுரம் பகுதியில் உள்ள பழைய நகராட்சி அலுவலகம் அருகில் அதிமுக நகரக் கழகத்தின் சார்பில் நாளை மின்கட்டண உயர்வை கண்டித்தும் சொத்து வரி உயர்வை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அதிமுக நகர செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற உள்ளது. இதில் அதிமுக நிர்வாகிகள் கலந்து கொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.

News October 8, 2024

திருப்பூரில் ஆசிரியர்களுக்கு பாராட்டு

image

திருப்பூர், மடத்துக்குளம் அருகே குப்பம்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் நடப்பு கல்வி ஆண்டில் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ், ஆங்கிலம் பாடத்தில் 100% பெற்றுக் கொடுத்த ராஜேந்திரன் மற்றும் வினோத் ஆசிரியர்களுக்கு அமைச்சர் சாமிநாதன் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் மற்றும் முதன்மை அலுவலர் பாராட்டி சான்றிதழ் வழங்கப்பட்டது.

News October 7, 2024

புதிய காவல் ஆணையர் அலுவலகம் திறப்பு

image

திருப்பூர், சிறுபூலுவபட்டியில் செயல்பட்டு வந்த மாநகர காவல் ஆணையர் அலுவலகம் குமார் நகர் பகுதியில் 2.24 ஏக்கர் பரப்பளவில் 5 மாடி கட்டடமாக கட்டப்பட்டது. பணிகள் முடிவடைந்த நிலையில் இன்று காலை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக புதிய மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தை திறந்து வைத்தார். திருப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் சாமிநாதன் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி வைத்தார்.

News October 7, 2024

திருப்பூரில் மக்கள் குறைதீர் கூட்டம்

image

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் வாரம் தோறும் திங்கட்கிழமை மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறுவது வழக்கம். இந்த வாரம் நடைபெற்ற மக்கள் குறைதீர்க் கூட்டத்தில் திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் இலவச வீட்டு மனை பட்டா, குடிநீர் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 541 மனுக்களை அளித்துள்ளனர்.