Tiruppur

News March 8, 2025

திருப்பூர்: ரேஷன் கார்டு குறைதீர்க்கும் முகாம்

image

திருப்பூரில் இன்று மார்ச்.8ம் தேதி ரேஷன் கார்டுகள் குறை தீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது. ரேஷன் கார்டுகளில் பெயர் சேர்த்தல், திருத்தம், விலாசம் மாற்றம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளலாம். உணவு சப்ளை மற்றும் நுகர்பொருள் பாதுகாப்பு உதவி ஆணையர் அலுவலகங்களில் இந்த குறை தீர்க்கும் முகாம் நடைபெறும். இந்த முகாமை பயன்படுத்தி பயன்பெற்று, பிறருக்கும். Share பண்ணுங்க

News March 7, 2025

திருப்பூர் மாவட்டத்தில் இரவு நேர ரோந்து பணி விவரம்

image

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். அவிநாசி, பல்லடம், உடுமலைப்பேட்டை, தாராபுரம், காங்கேயம் ஆகிய திருப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட பொதுமக்கள் தங்களது பகுதியில் ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால் இரவு நேர ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகளிடம் தெரிவிக்கலாம்.

News March 7, 2025

பொள்ளாச்சி எம்பி ஆதரவு இல்லை?

image

திருப்பூர், உடுமலை மற்றும் மடத்துக்குளம் தொகுதிகளை புதியதாக பழனி மாவட்டத்துடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து உடுமலை மடத்துக்குளம் மக்கள் பாதுகாப்பு பேரவை சார்பில் பொள்ளாச்சி எம்.பி ஈஸ்வரசாமியிடம் கோரிக்கை மனு அளித்தனர். மேற்கண்ட மனுவிற்கு ஆதரவு அளிக்க வேண்டுமென தெரிவித்த நிலையில் தமிழக முதல்வர் தான் முடிவு எடுப்பார் என தெரிவித்த நிலையில் மனு கொடுக்க வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

News March 7, 2025

திருப்பூரில் வேலைவாய்ப்பு முகாம்: மிஸ் பண்ணிடாதீங்க!

image

தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் சார்பில் முன்னணி நிறுவனங்களில் ஊக்கத்தொகையுடன் கூடிய வேலைவாய்ப்பு பயிற்சி அளிக்கும் பிரதம மந்திரி இன்டர்ன்ஷிப் திட்டத்தின் கீழ் மாணவர்கள் பதிவு செய்யும் முகாம் நாளை 08.03.2025 (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. பயிற்சி அளிப்பதுடன் மாதம் ரூ.5000 ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.

News March 7, 2025

வேலை வாய்ப்பு முகாம்! மிஸ் பண்ணிடாதீங்க 

image

திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு (ம) தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலம் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று (7.3.25) தேதி காலை 10 மணி முதல் மதியம் 1.30 மணி வரை நடைபெறவுள்ளது. இது கலெக்டர் அலுவலக வளாகம், 4வது தளத்தில் அறை எண்: 439ல் மாவட்ட வேலைவாய்ப்பு (ம) தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் நடைக்கவுள்ளது. 8, 10, 12, டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள்  பங்கேற்று பயன்பெறலாம். Share பண்ணுங்க 

News March 7, 2025

திருப்பூர் அருகே விபத்து; சம்பவ இடத்தில் மரணம் 

image

திண்டுக்கல் மாவட்டம் நாயுடுபுரம் பகுதியை சேர்ந்தவர் தினேஷ். இவர் கடந்த சில வருடங்களாக திருப்பூரில் தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் உறவினர் வீட்டிற்கு திருப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த லாரி தினேஷ் மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளான. இந்த விபத்தில் தினேஷ் சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

News March 7, 2025

ஹோலி பண்டிகையை முன்னிட்டு நிஜாமுதீன் சிறப்பு ரயில்

image

திருப்பூரில் ஹோலி பண்டிகையை முன்னிட்டு திருவனந்தபுரம் போத்தனூரில் இருந்து நிஜாமுதீன் மற்றும் பாரூனிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் மார்ச் 13-ஆம் தேதி ஹோலி பண்டிகை கொண்டாடப்படுகிறது. சொந்த ஊர் சென்று திரும்பும் வட மாநிலத்தவர் வசதிக்காக இந்த ரயில் இயக்கப்படுகிறது என சேலம் கோட்டை அதிகாரிகள் தெரிவித்தனர்.

News March 6, 2025

அனுவாவி சுப்பிரமணிய சுவாமி கோவில் சிறப்புகள்

image

கோவை அனுவாவியில் மலையின் மையப் பகுதியில், இயற்கை எழிலுடன் சுப்பிரமணியர் கோவில் உள்ளது. இக்கோயிலில் முருகப்பெருமான், சுயம்பு மூர்த்தியாக வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். இங்கு திருமணத் தடை உள்ளவர்கள் சாமிக்கு தாலி, வஸ்திரம் காணிக்கை செலுத்தி கல்யாண உற்சவம் நடத்தினால் விரைவில் திருமணம் நடக்கும் என்பது ஐதீகம். குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் 5 செவ்வாய்களில் வழிபாடு செய்கிறார்கள்.

News March 6, 2025

திருப்பூர் போலீசின் இரவு ரோந்து பணி விவரம்

image

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று (06.03.2025) இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். காங்கேயம், அவினாசி, பல்லடம், தாராபுரம், உடுமலை ஆகிய பகுதிகளில் உள்ள காவல்துறையின் இரவு ரோந்து பணி விவரம் திருப்பூர் மாவட்ட காவல்துறையால் வெளியிடப்பட்டுள்ளது. அவசர அழைப்புக்கு 108 ஐ அழைக்கவும்.

News March 6, 2025

மாவட்ட தபால் நிலையத்தில் பாஸ்போர்ட் சேவை

image

திருப்பூர் மாவட்ட பொதுமக்கள் தங்கள் பாஸ்போர்ட் தொடர்பான பணிக்காக கோவையில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகம் சென்று வந்தனர். இந்த நிலையில், இதனை தவிர்க்கும் வகையில் புதிய பாஸ்போர்ட் விண்ணப்பித்தல், பாஸ்போர்ட் புதுப்பித்தல் உள்ளிட்ட அனைத்து சேவைகளும் திருப்பூர் ரயில் நிலையம் உள்ள மாவட்ட தலைமை தபால் நிலையத்தில் பாஸ்போர்ட் சேவா கேந்திரா மையத்தில் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!