India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருப்பூர் மாநகரப் பகுதி முழுவதும் கடந்த சில நாட்களாக டெங்கு காய்ச்சல் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் , கடந்த ஒரு வாரத்தில் ஏழு பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் தங்கள் வீடு மற்றும் சுற்றுப்புறங்களில் கொசு உற்பத்தி ஆகாத வகையில் தூய்மையாக பராமரிக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
ஈரோட்டில் நடந்த மாநில தடகளப் போட்டியில், திருப்பூர் மாவட்ட வீரர், வீராங்கனைகள் இரண்டு தங்கம் உள்பட 14 பதக்கங்களைக் கைப்பற்றி அசத்தியுள்ளனர். நவ 6 முதல் 8ஆம் தேதி மாணவருக்கும், 9 முதல் 11ஆம் தேதி வரை மாணவியருக்கும் மாநில தடகளப் போட்டி நடந்தது. மாவட்ட தடகள போட்டியில் அசத்திய 70க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் மாநில போட்டியில் பங்கேற்றனர்.வெற்றி பெற்ற வீரர்களுக்கு பாராட்டுகள் குவிந்தன.
ஈரோட்டில் நடந்த மாநில தடகளப் போட்டியில், திருப்பூர் மாவட்ட வீரர், வீராங்கனைகள் இரண்டு தங்கம் உள்பட 14 பதக்கங்களைக் கைப்பற்றி அசத்தியுள்ளனர். நவ 6 முதல் 8ஆம் தேதி மாணவருக்கும், 9 முதல் 11ஆம் தேதி வரை மாணவியருக்கும் மாநில தடகளப் போட்டி நடந்தது. மாவட்ட தடகள போட்டியில் அசத்திய 70க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் மாநில போட்டியில் பங்கேற்றனர்.வெற்றி பெற்ற வீரர்களுக்கு பாராட்டுகள் குவிந்தன.
தாராபுரம் பகுதியில் அவ்வப்போது மழை விட்டுவிட்டு பெய்து வருகிறது. இதனால் மனிதர்கள் ரெயின் கோட் போன்ற உடைகளை அணிந்து தங்களை நனையாமல் பாதுகாத்துக் கொள்கின்றனர். ஆனால் மேய்ச்சலுக்கு செல்லும் கால்நடைகள் மழையில் நனைந்தபடி மேய்கிறது. இந்த நிலையில் தனது மாட்டிற்கு விவசாயி ஒருவர் பிளாஸ்டிக் பைகளை கவச உடையாக அணிவித்து மழையிலிருந்து மாட்டை பாதுகாத்து தனது அன்பை வெளிப்படுத்தி உள்ளார்.
திருப்பூர் மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளன.
➤உடுமலை பஞ்சலிங்க அருவியில் குளிக்க தடை ➤திருப்பூரில்: கடன் தவணை பைனான்ஸ் நிறுவனம் அட்டூழியம் ➤எம்.பி தலைமையில் ஆய்வுக் கூட்டம் ➤தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் ➤திருப்பூரில் அதிகாலை முதல் சாரல் மழை ➤சபரி மலைக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு ➤பல்லடத்தில் 6 வயது சிறுவன் கொலை ➤மின்கட்டண கணக்கீட்டு முறையில் மாற்றம் ➤மாலையிட்டுக் கொள்ளும் ஐயப்ப பக்தர்கள்.
திருப்பூர், அவிநாசி அருகே வீட்டுக்கடன் தவணையை கடந்த 3 மாதமாக செலுத்தாததால் ஆத்திரமடைந்த தனியார் பைனான்ஸ் ஊழியர்கள் வீட்டு சுவற்றில் இந்த வீடு கடனில் உள்ளது என பெயிண்டால் எழுதியுள்ளனர். திருப்பூரில் நடந்த இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் பரவி வருகிறது. மேலும் கடனை வசூலிக்க இது சரியான முறையல்ல என்றும் விமர்சனங்கள் எழுந்து வருகிறது.
திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் தாலுகாவிற்கு உட்பட்ட கணியூர்,மடத்துக்குளம் ,சங்கரமநல்லூர்,குமரலிங்கம் ஆகிய பேரூராட்சிகளின் திட்டங்கள் மற்றும் பணிகள் குறித்து பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வர சாமி தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் பேரூராட்சி மன்ற தலைவர்கள், துணைத் தலைவர்கள், செயல் அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதை வேலை வாய்ப்பு அலுவலர் சுரேஷ் துவக்கி வைத்தார். ஆடை உற்பத்தி, ஜவுளி விற்பனை, நகைக்கடை உள்ளிட்ட பல்வேறு வகையான நிறுவனங்கள் பங்கேற்று நேர்முகத் தேர்வில் பணியாளர்களை தேர்வு செய்தனர். இதில் சுமார் 48 பேர் தேர்வு செய்யப்பட்டு பணி நியமன ஆணையை பெற்றனர்.
கார்த்திகை முதல் தேதி இன்று பிறந்துள்ளது. இந்நிலையில் சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் வசதிக்காக சிறப்பு ரயில்கள் தொடர்ந்து அறிவிக்கப்பட்டுவருகின்றன. அந்த வகையில் சென்னை-கொல்லம் சிறப்பு ரயில் வரும் 19ம் தேதிமுதல் 2025 ஜன.15ம் தேதி செவ்வாய் வரை இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் இரவு 11:20 மணிக்கு புறப்பட்டு திருப்பூர் வழியாக மறுநாள் மதியம் 12:30 மணிக்கு கொல்லம் சென்று சேரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.