India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருப்பூர் மாநகராட்சியுடன் பழங்கரை ஊராட்சியை இணைக்க எதிர்ப்புத் தெரிவித்து அனைத்துக் கட்சி சார்பில் பழங்கரை ஊராட்சிக்குட்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் கடை அடைப்பு, கருப்புக்கொடி கட்டுதல் உள்ளிட்ட போராட்டங்கள் நடந்துவருகின்றன. முன்னதாக அவிநாசிலிங்கம்பாளையம் இ.கம்யூனிஸ் கட்சி அலுவலகத்தில் அக்டோபர் 7 அன்று நடைபெற்ற கூட்டத்தில் கடையடைப்பு, வேலை நிறுத்தம் நடத்த முடிவெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
திருப்பூர், அவிநாசி, பல்லடம் சுற்றுப்பகுதி மக்கள், தீபாவளி, பொங்கல் பண்டிகைக்கு, ஜவுளி எடுக்க திருப்பூரை தேர்வு செய்கின்றனர். பின்னலாடை நிறுவனங்கள், போனஸ் பட்டுவாடாவை இன்னும் துவங்கவில்லை; வரும் 19 மற்றும் 26ம் தேதிகளில், சம்பளத்துடன் போனஸ் வழங்க உரிமையாளர்கள் தயாராகிவிட்டனர். இருப்பினும், தீபாவளிக்கு புத்தாடை எடுக்க, போனஸை எதிர்பார்க்காமல், முன்கூட்டியே தொழிலாளர்கள் ஜவுளி எடுத்துவருகின்றனர்.
தமிழகத்தில் உள் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அடுத்த 3 மணி நேரம் (இரவு 7 மணி வரை) திருப்பூர் மாவட்டத்தில் கனமழை பெய்ய (ஆரஞ்சு அலார்ட்) வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் மனித வள மேலாண்மைத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர், திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் வட்டம், கிருஷ்ணாபுரம் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை வடிப்பாலை பிரிவில் எரிசாராய உற்பத்தியை துவக்கி வைத்தனர். இதில் மாவட்ட ஆட்சித்தலைவர் கிறிஸ்துராஜ் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
திருப்பூர், வேலம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில், 7ம் வகுப்பு படிக்கும் மாணவியான அபர்ணா ஸ்ரீ சென்னையில் நடந்த மாநில கவிதை எழுதும் போட்டியில் ‘அன்பு’ என்ற தலைப்பில் கவிதை எழுதி முதலிடம் பெற்றதால் பள்ளி கல்வித்துறை சார்பில் திருப்பூர் மாவட்டத்தில் இருந்து சிங்கப்பூர் அழைத்துச்செல்லப்படும் வாய்ப்பை பெற்றார். மாணவிக்கு பெற்றோர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் ஆயுத பூஜை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தொடர் மழை காரணமாக ஆயுத பூஜை கொண்டாடுவதற்கு சிரமம் ஏற்பட்டடுள்ளது. இந்நிலையில் தொடர் மழையால் பூக்களின் விற்பனை மந்தமடைந்தது. மேலும் பூக்களை வாங்குவதற்கு பொதுமக்கள் வருகை தராததால் விற்பனை இன்றி விற்பனையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
காங்கேயம் அருகே சம்பந்தம்பாளையம் பகுதியில் நேற்று விபத்தில் படுகாயமடைந்த முதியவரை மீட்டு, மருத்துவமனையில் சேர்க்க தனியார் ஆம்புலன்ஸ் சென்றுள்ளது. அப்போது காடையூர் பகுதியில் கரூர் நோக்கி சென்ற அரசு பேருந்து ஒன்று வழிவிடாமல் நின்றுள்ளது. அப்பகுதியில் லாரி ஓட்டுநருடன், பேருந்து ஓட்டுநர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால், நீண்ட நேரம் காத்திருந்ததாக ஆம்புலன்ஸ் ஓட்டுநர் புகார் தெரிவித்தார்.
திருப்பூர் மாவட்ட கூட்டுறவு பணியாளர் சங்க மாவட்ட தலைவர் கௌதமன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: திருப்பூர் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையில் துணைப்பதிவாளர் இல்லாததால் எந்த பணிகளும் சரிவர நடைபெறுவதில்லை. பண்டகசாலை நடத்தும் 120 நியாய விலை கடைகள், சுயசேவை பிரிவுகளின் நலன் கருதி உடனடியாக முழுநேரதுணைப் பதிவாளரை நியமிக்க வேண்டும் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே திருமூர்த்தி மலையில் உள்ள பஞ்சலிங்க அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான குருமலை குளிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருகின்றது. இந்த நிலையில் இன்று காலை மழை இல்லாத காரணத்தால் அருவியில் நீர்வரத்து சீராக உள்ளது. இதனால் இன்று சுற்றுலா பயணிகள் குளிக்க கோவில் நிர்வாகம் தரப்பில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
திருப்பூரில் மாவட்ட அளவிலான முதல்வர் கோப்பைக்கான மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான தடகள போட்டிகள் நடைபெற்றன. பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாற்றுத்திறன் மாணவர்கள் கலந்துகொண்டனர். சோமவாரபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியைச் சேர்ந்த 7ம் வகுப்பு மாணவன் குண்டு எறிதல் போட்டிகளில் இரண்டாம் இடமும் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 3ம் இடமும் பெற்றார். அவருக்கு பாராட்டுகள் குவிகின்றன.
Sorry, no posts matched your criteria.