Tiruppur

News July 10, 2024

நல் ஆளுமை விருது விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்

image

அரசின் திட்டங்கள் மற்றும் சேவைகள் பொதுமக்களுக்கு முறையாக கிடைக்க பணியாற்றியோருக்கு ஒவ்வொரு ஆண்டும் நல் ஆளுமைக்கான விருது வழங்கப்படுகிறது. அதன்படி, அரசு ஊழியர்கள், தனிநபர், குழு, அமைப்பு, நிறுவனம், அலுவலகத்தைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்டோர் இந்த விருதுக்கு விண்ணப்பிக்கலாம் எனவும், நாளையே (ஜூலை 11) விண்ணப்பிக்க கடைசி நாள் என்றும் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் நேற்று தெரிவித்துள்ளார்.

News July 9, 2024

திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் மாற்றம்

image

திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனராக பிரவீன் குமார் அபிநபு பணியாற்றி வந்தார். இந்நிலையில் அவர் சேலம் மாநகர போலீஸ் கமிஷனராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக சென்னை ஆயுதப்படை ஐஜியாக பணிபுரிந்து வந்த லட்சுமியை திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனராக மாற்றி தமிழக அரசின் முதன்மைச் செயலர் அமுதா சற்றுமுன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

News July 9, 2024

 சர்க்கரை ஆலைக்கு கரும்பு பதிவு செய்ய அழைப்பு

image

திருப்பூர் மாவட்டம்
உடுமலை அடுத்துள்ள அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கடந்தாண்டு கரும்பு பதிவு செய்யப்பட்டு பிற ஆலைகளுக்கு அனுப்பப்பட்டன. இதே போல நடப்பாண்டும் கரும்பு விவசாயிகளின் கோரிக்கை ஏற்று பிற ஆலைகளுக்கு கரும்புகள் அனுப்பவிருப்பதால் கரும்பு விவசாயிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்களது கரும்பு பயிரை ஆலையுடன் பதிவு ஒப்பந்தம் செய்து கொள்ளலாம் என மாவட்ட இன்று ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News July 9, 2024

நம்மாழ்வார் விருது பெற விண்ணப்பிக்க அழைப்பு

image

திருப்பூர் மாவட்டத்தில் உயிர்ம வேளாண்மை நடைமுறைகளை பின்பற்றி சிறப்பாக செயல்படும் தன்னார்வ விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் அங்கக உயிர்ம விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருது தமிழக அரசு சார்பில் வழங்கப்படுகிறது. இந்த விருதை பெற விரும்பும் விவசாயிகள் அக்ரிஸ் நெட் வலைத்தளத்தில் செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் பதிவு கட்டணம் ரூ.100 செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News July 8, 2024

திருப்பூர் மாவட்டத்தையே திரும்பி பார்க்க வைத்த பெண்கள்

image

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வழக்கறிஞர் குமார் பூங்கொடி ஆகியோரின் உறவினர் இந்திராணி கடந்த 5ஆம் தேதி உயிரிழந்தார். இவருக்கான இறுதி மரியாதை தாராபுரம் மின் மயானத்தில் எவ்வித சாதி மத சடங்குகளும் இன்றி நடந்தது. அதற்கு முன்னதாக வீட்டிலிருந்து அவரது உடலை பெண்கள் மட்டுமே சுமந்து சென்றனர். மின் மயானத்திற்கு செல்லாத பெண்கள் தற்போது சடலத்தையேசுமந்து சென்றது மாவட்டம் முழுவதும் பேசுபொருளாக மாறியுள்ளது.

News July 8, 2024

திருப்பூரில் கலந்தாய்வு: பெற்றோருடன் வருவது கட்டாயம்

image

திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரியில் 3ம் கட்ட கலந்தாய்வு நாளை நடைபெற உள்ளது. வணிகவியல் தரவரிசை 3025 முதல் 4000 வரை உள்ளவர்கள், ஏற்கெனவே விண்ணப்பித்து இடம் கிடைக்காதவர்கள் இதில் பங்கேற்கலாம். மாணவர்கள் கட்டாயம் பெற்றோருடன் வர வேண்டும். மேலும் +1 மற்றும் +2 மதிப்பெண், மாற்று, சாதி சான்றிதழ்களின் அசல், இவற்றின் 2 நகல்கள், 6 பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, கட்டணத் தொகையுடன் கலந்தாய்வில் பங்கேற்கலாம்.

News July 7, 2024

ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

image

திருப்பூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்படும் தொடக்க நடுநிலை, உயர்நிலைப் பள்ளிகளில் 5 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
தகுதி உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து உரிய சான்றுகளுடன் திருப்பூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்திற்கு ஜூலை 8 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது

News July 7, 2024

சீர்மரபினர் நலவாரியத்தில் விண்ணப்பிக்க அழைப்பு

image

தமிழ்நாடு சீர்மரபினர் நலவாரியத்தில் பதிவுபெற்ற உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வரும் நிலையில் வாரியத்தின் உறுப்பினராக பதிவு செய்தவர்கள் நலத்திட்ட உதவிகள் பெற விண்ணப்பிக்கலாம். ஏற்கனவே உறுப்பினராக பதிவுசெய்தவர்கள் தங்கள் உறுப்பினர் பதிவை ஆட்சியர் அலுவலகத்தில் புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 6, 2024

சீர்மரபினர் நலவாரியத்தில் விண்ணப்பிக்க அழைப்பு

image

தமிழ்நாடு சீர்மரபினர்
நலவாரியத்தில்
பதிவுபெற்ற உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வரும் நிலையில் வாரியத்தின் உறுப்பினராக பதிவு செய்தவர்கள் நலத்திட்ட உதவிகள் பெற விண்ணப்பிக்கலாம். ஏற்கனவே உறுப்பினராக பதிவுசெய்தவர்கள் தங்கள் உறுப்பினர் பதிவை ஆட்சியர் அலுவலகத்தில் புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 6, 2024

திருப்பூர்: முதல்வர் திறனாய்வு தேர்வு தேதி மாற்றம்

image

திருப்பூர் மாவட்டத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் 10ம் வகுப்பு பயின்று தற்போது +1 செல்லும் அரசுப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு முதல்வர் திறனாய்வு தேர்வு ஜூலை 21ஆம் தேதி நடக்க இருந்தது. இந்த நிலையில் தற்போது ஆகஸ்ட் 4ம் தேதி முதல்வர் திறனாய்வு தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு தேதி மாற்றப்பட்டுள்ளதால் விண்ணப்பிக்க கால அவகாசம் ஜூலை 10 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!