India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பல்லடம் அருகே செம்மலை கவுண்டன் பாளையம் ஒரே குடும்பத்தில் 3 பேர் கொலை வழக்கில், தற்போது போலிசார் 14 தனி படைகள் அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். சுற்றியுள்ள பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் இல்லாததால் கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, வாய்க்கால் வழியாக வந்து கொள்ளையடிக்கும் கும்பல் இதில் ஈடுபட்டிருக்கக்கூடும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் புதிய கோணத்தில் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டத்தில் இன்று (03.12.2024) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

திருப்பூர் பழைய பேருந்து நிலையம் எதிரில் உள்ள கால்நடை மருத்துவமனை வளாகத்தில் கால்நடை பல்கலைக்கழகப் பயிற்சி, ஆராய்ச்சி மையத்தில் கறவை மாடு வளர்ப்பு பயிற்சி வரும் (டிசம்பர் 5) காலை 10 மணி அளவில் நடைபெறுகிறது. ஆகவே, ஆர்வமுள்ள விவசாயிகள் கலந்து கொண்டு கறவை மாடு வளர்ப்பு தொடர்பான சந்தேகங்களைத் தெளிவுபடுத்திக் கொள்ளலாம். கூடுதல் விவரங்களுக்கு 0421- 2248524 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் உயர்த்தப்பட்டுள்ள சொத்து வரி , தொழில்வரி , காலி இட வரி, பாதாள சாக்கடை இணைப்பு கட்டணம் உள்ளிட்ட வரி உயர்வுகளை கண்டித்து, அதிமுக சார்பில் மாநகராட்சி அலுவலகம் எதிரே உண்ணாவிரத போராட்டம் துவங்கி நடைபெற்று வருகிறது. இதில் முன்னாள் அமைச்சர்கள் எம்எஸ்எம் ஆனந்தன், உடுமலை ராதாகிருஷ்ணன், முன்னாள் துணை சபாநாயகர், பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்ட 24வது மாநாடு, கடந்த 2 நாட்களாக அவிநாசியில் நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்ட செயலாளராக மீண்டும் முத்துக்கண்ணன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவரோடு 40 பேர் கொண்ட மாவட்ட குழுவும் தேர்வு செய்யப்பட்டு ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

திருப்பூர் ஊத்துக்குளி சாலை கருமாரம்பாளையம் பகுதியைச் சேர்ந்த சரவணகுமார் என்பவரது மனைவி தேவசேனா. இவர் தனது வீட்டிலிருந்து எஸ்.பெரியபாளையம் செல்வதற்காக இருசக்கர வாகனத்தில் மன்னரைப் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த தனியார் பள்ளி வாகனம் மோதியதில் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தமிழகத்தில் வடகடலோர மாவட்டங்களை புரட்டி போட்ட ஃபெஞ்சல் புயல் கரையைக் கடந்து, காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறி மேற்கு நோக்கி மெதுவாக நகர்ந்து வருகிறது. அதன் காரணமாக திருப்பூர் மாவட்டத்திற்கு தற்போது அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 2 நாள் மழை பெய்துவரும் நிலையில், மக்களை பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்து முன்னணி அமைப்பின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், தாராபுரம் சாலையில் உள்ள இந்து முன்னணி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், சட்டம் ஒழுங்கை காப்பாற்ற வலுவற்ற அரசாங்கமாக திமுக அரசு இருப்பதாகவும், தமிழகத்தில் உளவுத்துறை சரியாக செயல்படுவதில்லை என குற்றம் சாட்டினார். குற்றவாளிகள் குறித்து புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுக்க தாமதப்படுத்துவதாக தெரிவித்தார்.

திருப்பூர் மாவட்டத்தில் இன்று (02.12.2024) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் தலைமையில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் இலவச வீட்டு மனை பட்டா, சாலை வசதி, புதிய ரேஷன் கார்டு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 425 மனுக்கள் அளித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.