India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேலம் ரயில்வேயில் பராமரிப்பு பணி காரணமாக திருப்பூர் வழியாக செல்லும் சில ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ஆலப்புழா-தன்பாத் தினசரி ரயில், எர்ணாகுளம்-கே.எஸ்.ஆர். பெங்களூரு தினசரி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ஜூலை 16 (நாளை), 18, 20, 23, 25, 27, 30 தேதிகளில் கோவை வழியாக இயக்காமல் போத்தனூர் வழியாக இயக்கப்படும். கோவையில் நிறுத்துவதற்கு பதிலாக போத்தனூர் ரயில் நிலையத்தில் நின்று செல்லும்.
பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் 2024-25ஆம் ஆண்டு காரீப் பருவ பயிர்களுக்கு விவசாயிகள் அனைவரும் காப்பீடு செய்யலாம் என திருப்பூர் மாவட்ட ஆட்சியர் நேற்று தெரிவித்துள்ளார். இதில் நிலக்கடலைக்கு 636 ரூபாயும், சோளத்திற்கு 100 ரூபாயும் செலுத்தி ஆகஸ்ட் 30ஆம் தேதிக்குள் காப்பீடு செய்ய வேண்டும். இதுகுறித்த விவரங்களுக்கு அருகில் உள்ள வேளாண்மை அலுவலகத்தை அணுகலாம் என்று அவர் கூறியுள்ளார்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடந்த சில நாட்களுக்கு முன்பு காங்கிரஸ் கமிட்டியின் தமிழ் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை குறித்து தெரிவித்த கருத்திற்கு காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என திருப்பூர் குமரன் நினைவகம் முன்பாக இன்று இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் மாவட்டத்தில் முதல் தலைமுறை தொழில்முனைவோர் தொழில் தொடங்க மானியத்துடன் கூடிய வங்கிக்கடன் வழங்கப்படுகிறது. உற்பத்தி மற்றும் சேவை தொழில்களுக்கு 10 லட்சம் முதல் அதிகபட்ச 5 கோடி வரை வங்கிகள் மற்றும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் மூலம் 25 சதவீத மானியத்துடன் கடன் உதவி வழங்கப்படுவதால் தகுதி உள்ளோர் msmeonline.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் அறிவித்து உள்ளார்.
திருப்பூர் மாவட்டத்தில் பிளஸ் டூ பொதுத்தேர்வில் தேர்ச்சி அடைந்து இதுவரை தனியார் கல்லூரிகள் விண்ணப்பிக்காத மற்றும் தனியார் கல்லூரிக்கு விண்ணப்பித்து சேர்க்கை கிடைக்காத மாணவ மாணவிகள் இன்று முதல் வருகின்ற 16ஆம் தேதி வரை
4 நாட்கள் திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் அறை எண்
705ல் உயர்கல்வி உதவி வழிகாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளதால் மாணவ மாணவிகள் பயன்பெறுமாறு ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்ட பிராணிகள் வதை தடுப்புச் சங்கத்தின் நிர்வாக குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான பொதுக்குழு கூட்டம் திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் வருகின்ற 25ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு நடைபெற உள்ளது. உறுப்பினர்கள் அனைவரும் இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள மாவட்ட ஆட்சித் தலைவர் கிறிஸ்துராஜ் அறிவுறுத்தி உள்ளார்.
தமிழகத்தில் 90 பணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வு இன்று அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற உள்ளது. அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் காலை 9 மணிக்குள் தேர்வுக் கூடத்திற்குள் வருகை தருபவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். தேர்வு கூடங்களில் தேர்வு பணியில் தனிப்படைகள், கண்காணிப்புக் குழுக்கள் ஈடுபடுகின்றன. இதற்காக மாவட்டம் முழுவதும் சிறப்பு பேருந்து வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
வேளாண்மை விரிவாக சேவைகளில் இடுபொருள் விற்பனையாளர்களுக்கான பட்டய படிப்பு நடைபெற்று வந்தது. இந்த படிப்பில் தேர்ச்சி பெற்ற 34 மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சியானது திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துவராஜ் கலந்துகொண்டு பட்டய படிப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ்களை வழங்கினார்.
சர்வதேச அளவில் உலக மக்கள் தொகை தினம் நேற்று கொண்டாடப்பட்டது. மக்கள் தொகை பெருக்கத்தால் ஏற்படும் விளைவுகள் மற்றும் மக்கள் தொகையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதை ஆட்சியர் கிறிஸ்துராஜ் துவக்கி வைத்தார்.
திருப்பூர் மாவட்டத்தில் இந்திய விமான படையால் நடத்தப்படும் அக்னிவீர் வாயு தேர்வு வரும் அக்டோபர் 18ஆம் தேதி இணைய வழியாக நடைபெற உள்ளது. தேர்வில் கலந்து கொள்ள https://agnipathvayu.cdac.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். தேர்வுக்கு விண்ணப்பிக்க வரும் 28ஆம் தேதி கடைசி தேதியாகும். எனவே இந்திய விமானப்படையில் பணியாற்ற ஆர்வமுள்ளோர் தேர்வில் கலந்து கொள்ள மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.