India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருப்பூர் காவல் ஆணையராக பணியாற்றி வந்த பிரவீன்குமார் அபினவ் பணியிட மாறுதல் பெற்று சென்ற நிலையில் திருப்பூர் மாநகர காவல் ஆணையராக ஆயுதப்படை ஐஜி லட்சுமி திருப்பூர் மாநகர காவல் ஆணையராக அறிவிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து இன்று திருப்பூர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக்கொண்டு லட்சுமி தனது பொறுப்பினை ஏற்றுக்கொண்டார்.
திருப்பூர் மாநகரின் பல்வேறு சாலையோரங்களில் தற்போது பொம்மை விற்பனை சூடு பிடித்துள்ளது. கார்ட்டூன் நட்சத்திரங்களான டோரிமான் டோரா புஜ்ஜி, குரங்கு நாய் கரடி உள்ளிட்ட பொம்மைகளின் விற்பனை அதிகரித்துள்ளது. பெங்களூரில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொம்மைகள் சாலை ஓரங்களில் 100 ரூபாய்க்கு குறைவாக விற்பனை செய்யப்படுவதால் பொம்மைகள் வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மக்களே ஷேர் பண்ணுங்க!
திருப்பூர் மாவட்ட வருவாய் அலுவலராக ஜெய்பீம் கடந்த சில வருடங்களாக பணியாற்றிவந்தார். இந்த நிலையில் சென்னை அரசு விருந்தினர் இல்லத்திற்கு வரவேற்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கு பதிலாக சென்னை தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனத்தில் பொது மேலாளராக இருந்த கார்த்திகேயன் திருப்பூர் மாவட்ட வருவாய் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். தலைமை செயலாளர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் போயம்பாளையம் பகுதியில் உள்ள மூன்று மாடி கட்டடத்தில் மூன்றாவது மாடியில் ஏராளமான வட மாநில வாலிபர்கள் தங்கி உள்ளனர். நேற்று விடுமுறை தினம் என்பதால் உணவு வேலைகளை முடித்து இரவு மாடிப்படி அருகில் அமர்ந்து பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சிவக்குமார் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்த நிலையில் எதிர்பாராதவிதமாக முதல் மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
திருப்பூர் மாவட்டத்தில் பணிபுரியும் அரசு பணியாளர்கள், அரசு பணியிலிருந்து ஓய்வுபெற்ற ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று மருத்துவ செலவின தொகை மீளப்பெறுவதற்கான விண்ணப்பத்துடன் கூடிய அசல் மருத்துவ செலவின பட்டியல்களை சம்பந்தப்பட்ட அலுவலகம் மற்றும் கருவூலம் மூலம் ஆகஸ்ட் 16ஆம் தேதிக்கு முன்னர் சமர்ப்பிக்க வேண்டும் என கலெக்டர் கிறிஸ்துராஜ் அறிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க!
கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட மக்களின் 70 ஆண்டு கால கோரிக்கை அத்திக்கடவு-அவிநாசி திட்டம். அதிமுக ஆட்சியில் ரூ.1,652 கோடியில் கொண்டுவரப்பட்ட இத்திட்டத்தின் மூலம் 1,045 குளங்களும், 24,468 ஏக்கர் நிலங்களும் பயன்பெறும். ஆனால், தற்போது வரை இத்திட்டம் 93% பணிகள் மட்டுமே முடிந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இத்திட்டம் எப்போது முழுமை பெறும் என கொங்கு மக்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
தமிழ்நாடு முதலமைச்சரின் கல்வி உதவித்தொகை பெறுவதற்கான திறனாய்வு தேர்வுகள் திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் நடைபெற்றது. அரசு பள்ளிகளில் மேல்நிலை முதலாம் ஆண்டு கல்வி கற்கும் மாணவ, மாணவியர்களுக்கு இத்தேர்வு நடத்தப்பட்டது. திருப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தேர்வினை மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் உதயகுமார் நேரில் ஆய்வு செய்தார்.
ஜூலை மாதத்தில் துவரம் பருப்பு, பாமாயில் பெற முடியாத ரேஷன் அட்டை தாரர்கள், இம்மாதத்தில் பெற்றுக் கொள்ளலாம். ஜூன் மாதம் துவரம் பருப்பு, பாமாயில் பெற இயலாதவர்கள், ஜூலை மாதத்தில் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. இதனால், ஜூலை மாதத்துக்கான துவரம் பருப்பு, பாமாயிலை சிலரால் பெற முடியவில்லை. எனவே, திருப்பூரில் உள்ள 7,95,88 ரேஷன் அட்டை தாரர்கள் ஜூலை மாதத்துக்கான பொருட்களை இம்மாதம் பெற்றுக் கொள்ளலாம்.
இன்று சர்வதேச நண்பர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. இவ்வுலகில் நண்பர்கள் இல்லாமல் எவரும் இல்லை. கிணற்றில் குளித்தது, கிரிக்கெட் ஆடியது, பள்ளிக்கு செல்வதாக கூறி படத்துக்கு போவது என சினிமாவை மிஞ்சும் அளவுக்கு நண்பர்களுடன் செய்த சேட்டைகளுன்டு. அந்த வகையில், திருப்பூர் நண்பர்களே நீங்க உங்க நண்பனை பற்றி கீழே கமெண்ட் பண்ணுங்க, நண்பனுக்கு சேர் செய்யுங்க.
திருப்பூர் பின்னலாடை உற்பத்தி நிறுவனங்களில் திறன்மிகு தொழிலாளர்களை பணி அமர்த்தும் வகையில் ஆடை உற்பத்தி சார்ந்த பல்வேறு பயிற்சிகளை அளித்து வருகிறது. இதன்தொடர்ச்சியாக வரும் 18ம் தேதி முதல் இலவச தையல் பயிற்சிகளும், 2ம் கட்ட பேட்டர்ன் மேக்கிங் பயிற்சி வகுப்புகள் துவங்க உள்ளது. இதற்கான மாணவர் சேர்க்கை தற்போது நடைபெற்று வருகிறது. மேலும், கூடுதல் விவரங்களுக்கு 95979-14182 என்ற எண்ணை தொர்பு கொள்ளலாம்.
Sorry, no posts matched your criteria.