India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருப்பூர் அரிசி கடை வீதியில் உள்ள அதிமுக அலுவலகத்தில், அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. பொள்ளாச்சி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், திருப்பூர் மாநகர மாவட்ட அதிமுக செயலாளருமான பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் உறுப்பினர் அடையாள அட்டைகளை விநியோகிப்பது தொடர்பாக ஆலோசனை வழங்கப்பட்டது.
திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் போட்டித்தேர்வு மையம் செயல்பட்டுவருகிறது. தேர்வு தொடர்பாக வகுப்புகள் மற்றும் பயிற்சிகள் வழங்கப்பட்டுவருகின்றன. குரூப் 2 (ஏ) நடத்திய தேர்வில் முதல்கட்ட தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் உள்ள போட்டித்தேர்வு மையத்தில் படித்த 9 பெண்கள் உள்பட 13 பேர் குரூப் 2 தேர்வில் தேர்ச்சிபெற்று நேற்று பணியில் சேர்ந்தனர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுகாவிற்குட்பட்ட கரையான்புதூர் பகுதியில் இன்று காலை மர்ம நபர்களால் துரத்திச் செல்லப்பட்ட வாலிபர் கூர்மையான ஆயுதங்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். தகவல் அறிந்த சம்பவ இடத்திற்குச் சென்ற டிஎஸ்பி விஜிகுமார் தலைமையிலான போலீசார் உடலை கைப்பற்றி உயிரிழந்தவர் யார்? கொலை செய்யப்பட்டதற்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பூர் ஊரக வளர்ச்சித்துறை திருப்பூர் உட்கோட்டம் உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் நேற்றிரவு சோதனை மேற்கொண்டனர். உதவி செயற்பொறியாளர், உதவி பொறியாளர் அலுவலக அறைகளில் சோதனை மேற்கொண்ட அவர்கள் கணக்கில் வராத 1 லட்சத்து 2 ஆயிரத்து 300 ரூபாயை பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக உதவி செயற்பொறியாளர் தர்மலிங்கம், உதவி பொறியாளர் சிவராஜ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில், கம்பளி, பெட்ஷீட், ஆடைகள் என ரூ.5 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் இணைந்தெழு தமிழ்நாடு அமைப்பு சார்பில் திருப்பூரில் இருந்து அனுப்பி இன்று வைக்கப்பட்டது.
திருப்பூர் மாவட்டத்தில் இன்று இரவு 7 மணி வரை இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த சில நாட்களாகவே இம்மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
உலக தாய்ப்பால் வார விழா திருப்பூர் மாவட்டத்தில் 1 வாரம் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணிகள் சார்பில் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் இன்று வழங்கப்பட்டது. இதனை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் கிறிஸ்துராஜ் வழங்கினார். மேலும், தாய்ப்பால் தானம் கொடுத்த தன்னார்வலர்களுக்கு சாண்றிதறழ்களும் வழங்கப்பட்டது.
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், பொது நூலகத்துறை மற்றும் ஆறுமுகம் அறக்கட்டளை அனிதா டெக்ஸ்கார்ட் சார்பில் நூலகங்கள், பள்ளி மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இதில் ஆட்சியர் கிறிஸ்துராஜ், அயலக தமிழர் நல வாரிய தலைவர் கார்த்திகேய சிவசேனாதிபதி, புத்தக ஆசிரியர் பாலகிருஷ்ணன், மேயர் தினேஷ்குமார் மற்றும் கமிஷனர் பவன் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
பொங்கலூர் சமுதாயக்கூடத்தில் காட்டூர், பொங்கலூர் ஆகிய ஊராட்சிகளுக்கும், வெள்ளகோவில் நாட்ராயன்கோவில் மண்டபத்தில் மேட்டுப்பாளையம் ஊராட்சிக்கும், கண்டியகவுண்டன்புதூர் ரமணா கல்யாண மண்டபத்தில் கண்ணமநாயக்கனூர், குரல்குட்டை ஆகிய ஊராட்சிகளுக்கும், அவிநாசி நடுவச்சேரி கே.டி.பி. கலையரங்கில் சின்னேரிபாளையம், வடுகபாளையம் பகுதியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நாளை நடக்கிறது என கலெக்டர் கூறினார்.
திருப்பூரில் ரோட்டரி கிளப் ஆப் செலிப்ரேஷன் சார்பில் உலக தாய்ப்பால் வார விழாவை முன்னிட்டு, தாய்ப்பாலின் அவசியம் குறித்த விழிப்புணர்வு பேரணி இன்று நடந்தது. இதனை, மாநகராட்சி ஆணையர் பவன்குமார், துணை மேயர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர். இந்த பேரணியில் கலந்து கொண்ட 300-க்கும் மேற்பட்ட மாணவிகள் தாய்ப்பால் ஊட்டுவதின் அவசியம் குறித்து விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி சென்றனர்.
Sorry, no posts matched your criteria.