Tiruppur

News August 13, 2024

ஜூன் மாத மின்கட்டணத்தை தற்போது செலுத்தவும்

image

கொடுவாய் மின்வாரிய அலுவலகத்திற்குட்பட்ட மின்நுகர்வோர் ஜூன் மாதம் செலுத்திய மின் கட்டணத்தை இம்மாதம் செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொடுவாய் பிரிவு அலுவலகத்தில் தவிர்க்க இயலாத காரணத்தால் ஆகஸ்ட் மாதம் மின் கணக்கீடு செய்ய இயலவில்லை. எனவே, கொடுவாய் பிரிவு அலுவலகத்துக்கு உள்பட்ட மின்நுகர்வோர், ஜூன் மாத கட்டணத்தை செலுத்தவும். கட்டணம் கூடுதல், குறைவோ இருந்தால் அக். மின் கட்டணத்தில் ஈடு செய்யப்படும்.

News August 13, 2024

திருப்பூரில் உயர்கல்வி வழிகாட்டி ஆலோசனை முகாம்

image

திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 2023-24ம் கல்வியாண்டு பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி அடைந்த அனைத்து மாணவ, மாணவிகளும் உயர்கல்விக்கு செல்வதை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கல்லூரிக்கு விண்ணப்பிக்காத மற்றும் பெற்றோர் இல்லாத மாணவர்கள், கல்வி கட்டணம் செலுத்த இயலாத நிலையில் இரண்டு நாட்கள் பயிற்சி வகுப்புகள் நேற்று முதல் நடைபெறுகிறது.

News August 13, 2024

உடுமலையில் தேசியக்கொடி ஏற்ற அனுமதி மறுப்பு

image

உடுமலை வனச்சரக பகுதியில் உள்ள மலைவாழ் கிராமங்களில் பிரதமர் மோடி அறிவுறுத்தல்படி ஒவ்வொரு இந்திய குடிமகனும் அவரவர் வீட்டில் கொடி ஏற்ற வேண்டுமென தெரிவித்த நிலையில், தற்போது கொடி ஏற்றுவதற்கு உடுமலை வனச்சரகர் மணிகண்டன் அனுமதி மறுத்துள்ளார். இதனால் தேசிய கொடிக்கு மரியாதை செலுத்த முடியாத நிலை உள்ளதால் ஆளுநருக்கு பாஜக பழங்குடியின துணைத் தலைவர் நடராஜ் நேற்று
மனு அனுப்பியுள்ளார்.

News August 13, 2024

திருப்பூரில் கனமழைக்கு வாய்ப்பு

image

திருப்பூர் மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்த கனமழையால் பல இடங்களில் மழை நீர் தேங்கும் எனவும், போக்குவரத்து பாதிக்கப்படலாம் எனவும் தெரிகிறது. எனவே பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது. மக்களே ஷேர் பண்ணுங்க!

News August 13, 2024

திருப்பூரில் வேலைவாய்ப்பு.. மிஸ் பண்ணிடாதீங்க

image

திருப்பூரில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 16-ம் தேதி காலை 10.30 மணிக்கு திருப்பூர் பல்லடம் சாலையில் அமைந்துள்ள மாவட்ட கலெக்டர் வளாகம், 4வது தளத்தில் அறை எண் 439 ல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறுகிறது. ஐடிஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு முடித்தவர்கள் இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறாலம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News August 13, 2024

கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம்

image

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் மாநில தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் சுவாமிநாதன் தலைமையில் பல்வேறு அரசுத்துறை சார்பில் மாவட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இதில் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

News August 12, 2024

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

image

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் தலைமையில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 492 மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர். மனுக்களை பெற்ற மாவட்ட ஆட்சியர் மனுதாரர்கள் முன்னிலையில் துறை அதிகாரிகளிடம் பரிந்துரை செய்தார்.

News August 12, 2024

அதிக நாள்கள் வேலைக்கு வருவோருக்கு பரிசுகள்

image

பின்னலாடைக்கு பெயர் பெற்ற திருப்பூரில் அதிகமான நாட்கள் வேலைக்கு வருவோருக்கு பரிசு வழங்கப்படும் என்ற போஸ்டர் வைரல் ஆகி வருகிறது. ஓவர்லாக், பேட்லாக்-கு தற்போது வேலைக்கு ஆட்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால், ஆட்கள் வேண்டி போஸ்ட், நோட்டீஸ் கொடுத்து ஆட்களை வேலைக்கு எடுக்கின்றனர். அந்தவகையில், வேலைக்கு அதிக நாள் வரும் நபர்களுக்கு பிரிட்ஜ், பீரோ முதலிய பரிசு வழங்கப்படும் என்பது கவனம் பெற்றுள்ளது.

News August 12, 2024

கேரளாவுக்கு பள்ளி மாணவிகள் நிதி உதவி

image

திருப்பூர் திருக்குமரன் நகர் பகுதியை சேர்ந்தவர் நபிஷா. இவர் வாவிபாளையம் அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். இதுபோல அதே பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வரும் மாணவி அபிக்ஷா (6). இவர்கள் இருவரும் கேரள மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய முடிவு செய்தனர். இதற்காக உண்டியலில் சேர்த்த பணத்தை கலெக்டர் கிறிஸ்துராஜிடம் இன்று வழங்கினர்.

News August 12, 2024

மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழப்பு

image

திருப்பூர், அவிநாசியை அடுத்த சேவூர் கரியாம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கௌதம். இவர் முறியாண்டிபாளையம் பகுதியில் உள்ள தோட்டத்தில் நண்பர்களுடன் வேலை செய்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக தோட்டத்திற்கு வேலி அமைத்துள்ள கம்பியை கையில் பிடித்துள்ளார். அப்போது மின்சாரம் தாக்கியதில் கௌதம் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

error: Content is protected !!