India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் மாதத்தின் கடைசி வேலை நாளில், விற்பனை விவரங்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் இருப்பு விவரங்கள் சரிபார்ப்பு போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும். இந்நிலையில் இன்று (ஆகஸ்ட் 31) சனிக்கிழமை பணி நாளன்று அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் முழுமையாக ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் திருமுருகன்பூண்டியில் உள்ள ஐ.கே.எப். வளாகத்தில் வருகிற 4 ம் தேதி முதல் 6 ம் தேதி வரை 51 வது சர்வதேச பின்னலாடை கண்காட்சி நடைபெறுகிறது. இதில் 70 அரங்குகளில் நவீன காலத்திற்கு ஏற்ற வகையிலான ஆடைகள் ,ஆடை தயாரிப்பு சார்ந்த தொழில் நுட்பங்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளன. திருப்பூர் தொழில் துறையினர் கலந்துகொள்ள ஐ.கே.எப். நிறுவனர் சக்திவேல் இன்று செய்தியாளர்கள் சந்திப்பு மூலம் அழைப்பு விடுத்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம், பல்லடம் அரசு பேருந்து படிக்கட்டு உடைந்து உள்ளது. திருப்பூர் டு மானசி பாளையம் செல்லும் பேருந்து 52 என் உள்ள டவுன் பஸ் பயணிகள் ஏறும் படிக்கட்டு உடைந்து ஆபத்தான நிலையில் பேருந்து இயங்கிக் கொண்டிருக்கிறது. அரசு போக்குவரத்து கழகம் விபத்துகள் ஏற்படும் முன்னே மாற்றி அமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
தாராபுரம் பகுதியில் நேற்று நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் கரையூர் ஸ்ரீ சக்தி முருகன் திருமண மண்டபத்தில் தாராபுரம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவரும், திமுக ஒன்றிய செயலாளருமான எஸ்.வி.செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் திருப்பூர் மாநகராட்சி நான்காவது மண்டல குழு தலைவர் இல.பத்மநாபன் முன்னிலையில் நடைபெற்றது. முகாமில் 1050 மனுக்கள் பெறப்பட்டன.
திருப்பூர் மாவட்டத்தில் 8 சட்டமன்ற தொகுதிகளில், 1,500 வாக்காளர்களுக்கும் அதிகமாக உள்ள வாக்குச்சாவடிகளை பிரித்து புதிய வாக்குச்சாவடிகள் அமைப்பதற்காக உத்தேசிக்கப்பட்டுள்ளது. அந்த வாக்குச்சாவடிகளை உள்ளடக்கிய வரைவு வாக்குச்சாவடிகள் பட்டியல் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டார். இதில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சியினரும் பங்கேற்றனர்.
திருப்பூர் பகுதியில் கடந்த சில மாதங்களாகவே தெரு நாய்கள் சுற்றி வருகின்றன. இந்த நிலையில் ஒரு சில பகுதிகளில் வாகன ஓட்டிகளையும் பொதுமக்களையும் துரத்திச் சென்று தெரு நாய்கள் கடித்து வருகின்றன. ஒரு சில வாகன விபத்துகளும் தெருநாய்களால் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் கடந்த மே மாத முதல் ஜூலை மாதம் வரை திருப்பூர் அரசு மருத்துவமணையில் 3692 பேர் நாய் கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட திமுக நிர்வாகிகள் கூட்டம் நாளை முதல் மாவட்ட செயலாளர் இல.பத்மநாபன் தலைமையில் நடைபெறுகிறது. இதில் சிறப்பு விருந்தினராக செய்தித்துறை மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் சிறப்புரையாற்றுகிறார்கள். தாராபுரம், காங்கேயம், மடத்துக்குளம், உடுமலை தொகுதி நிர்வாகிகள் பங்கேற்க வேண்டும் என இல.பத்மநாபன் அழைப்பு விடுத்துள்ளார்.
ஊத்துக்குளியில் வசித்து வந்தவர் அருள்குமார். இவர் பெருமாநல்லூர் போலீஸ் ஸ்டேஷனில் போலீசாக பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த ஜனவரி மாதம் விபத்தில் உயிரிழந்தார். இவ கடந்த 2009ஆம் ஆண்டு போலீஸ் பணியில் சேர்ந்த காவல்துறை சார்ந்த நண்பர்கள் ஒருங்கிணைந்து விபத்தில் இறந்து போன அருள்குமாரின் குடும்பத்தினருக்கு ரூ.23,85,000 நிதி அளித்துள்ளனர். மக்களே உங்கள் கருத்து என்ன?
திருப்பூரில் சட்டவிரோதமாக மது தயாரிப்பவர்கள், வன்முறையாளர்கள், போதைப்பொருள் கடத்தல்காரர்கள், சட்டவிரோத பொருள்கள் என பல்வேறு வழக்குகளில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் தொடர்ந்து செய்பவர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த எட்டு மாதங்களில் மட்டும் 85 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக திருப்பூர் சிக்கண்ணா அரசு கலை (ம) அறிவியல் கல்லூரியில் உள்ள உள் விளையாட்டு அரங்கில் விளையாட்டு போட்டிகள் இன்று தொடங்கியது. பள்ளி விளையாட்டு வீரர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளை கலெக்டர் கிறிஸ்துராஜ் இன்று காலை துவக்கி வைத்து வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.