India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருப்பூர்: உடுமலை அண்ணா குடியிருப்பு சேர்ந்த அதிமுக பிரமுகர் சாமி என்கிற சிவராஜ் மகன் கோகுல்நாத் இன்று அந்தியூர் பகுதியில் சொகுசு காரில் சென்ற போது கட்டுபாட்டை இழந்த கார் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. சீட் பெல்ட் போடத காரணத்தில் சம்பவ இடத்திலேயே கோகுல்நாத் உயிரிழந்தார். இவருக்கு வரும் நவம்பர் மாதம் திருமணம் நடைபெற உள்ள நிலையில் உயிரிழந்த சம்பவம் வரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
உடுமலை எக்ஸ்டன்சன் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் வருகிற 7ம் தேதி காலை 10.30 மணியளவில் குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ முதன்மை தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளது. மேலும் மாணவர்களுக்கு இலவசமாக பாடக் குறிப்புகள் வழங்குதல் மாதிரி தேர்வுகள் நடத்துதல் தொடர்ந்து நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள 94990 55944 எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.
மகாத்மா காந்தியின் 156வது பிறந்தநாள் விழா காந்தி ஜெயந்தி விழாவாக இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு திருப்பூர் அவிநாசி சாலை குமார் நகர் பகுதியில் உள்ள கதர் அங்காடியில் காந்தியின் உருவப்படத்திற்கு மலர் தூவி மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து சிறப்பு விற்பனையையும் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் தொடங்கி வைத்தார்.
திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று இடியுடன் கூடிய கனமழை பெய்தது. அதன் ஒரு பகுதியாக திருப்பூர் வடக்கு பகுதியில் 67.4 மில்லி மீட்டர், திருப்பூர் தெற்கு பகுதியில் 40 மில்லி மீட்டர், அவிநாசியில் 17 மில்லி மீட்டர், தாராபுரத்தில் 72 மில்லி மீட்டர் என மாவட்டம் முழுவதும் 291.80 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடுமலையில் குடிநீர் விநியோகம் செய்யும் முதலாவது திட்டத்தின் பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட இருப்பதாலும் நாளை 02.10.2024 (ம) 03.10.2024 இரண்டு நாட்களுக்கு நகர்பகுதி வார்டு 12, 15, 16, 17, 19, 20, 21, 22, 23, 25 மற்றும் குடிநீர் விநியோகம் செய்ய இயலாத நிலையில் உள்ளது. எனவே பொதுமக்கள் தண்ணீரை சேமித்து வைத்துக் கொள்ளுமாறும் நகராட்சி ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் தாராபுரம் சாலையில் உள்ள அரண்மனை புதூர் அரசு பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாணவர்களுக்கான ஆதார் கார்டு திருத்த சிறப்பு முகாம் என்று நடைபெற்றது. 5 முதல் 17வயது வரையிலான மாணவர்களுக்கு நடைபெற்ற இந்த சிறப்பு முகாமில் இன்று 60பேர் கலந்து கொண்டு தங்கள் கண் கருவிழி, கைரேகை மற்றும் புகைப்படம் ஆகியவற்றை மாற்றிக் கொண்டனர்.
திருப்பூர், நெருப்பெரிச்சல் பகுதியைச் சேர்ந்த பனியன் தொழிலாளர் ராம்குமார். கடந்த 2021ஆம் ஆண்டு சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட இவருக்கு மகிளா நீதிமன்றத்தில் 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கோவை மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
தமிழகத்தின் துணை முதல் அமைச்சராக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதவி ஏற்றதை தொடர்ந்து அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக இளைஞர் அணி அமைப்பாளர் ஈ.தங்கராஜ் சென்னை குறிஞ்சி இல்லத்தில் சந்தித்து மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நாளை (அக்.2) திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள், அவற்றுடன் சார்ந்த மதுபான கூடங்கள், பார்கள் மற்றும் மன மகிழ் மன்றங்கள் ஆகியவற்றை மூட வேண்டும். மது விற்பனை நடைபெறக் கூடாது. இதனையும் மீறி மது விற்பனை செய்கிறவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் அறிவித்துள்ளார்.
புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரனை திருப்பூர் வடக்கு மாநகர திமுக செயலாளரும், மாநகர மேயரும் தினேஷ் சென்னையில் உள்ள அமைச்சரின் அலுவலகத்தில் இன்று நேரில் சந்தித்து சால்வை அணிவித்து பூங்கொத்து வழங்கி புகைப்படம் எடுத்துக்கொண்டனர். உடன் திருப்பூர் மாநகர திமுக முக்கிய நிர்வாகிகள் & பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டு புகைப்படம் எடுத்து மகிழ்ந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.