India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி நேற்று முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. வெள்ளகோவில் சுற்றுவட்டார பகுதிகளில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் தேர்தல் பறக்கும் படையினர் நேற்று இரவு அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19இல் நடைபெறவுள்ள நிலையில், முதியோர்கள் (85 வயதிற்கு மேற்பட்ட) / மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்தே வாக்களிக்கும் வகையில் தபால் வாக்கு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, பகுதி வாக்குச்சாவடி அலுவலரிடம் படிவம் 12D-ஐ பெற்று பூர்த்திசெய்து மார்ச் 24ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டத்திற்கு திமுக சார்பில் 4 எம்பி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, நீலகிரி மக்களவை வேட்பாளர் ஆ.ராசா அவிநாசி சட்டமன்ற தொகுதியிலும், பொள்ளாச்சி மக்களவை வேட்பாளர் ஈஸ்வரசாமி உடுமலை, மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதிகளிலும், கோவை மக்களவை தொகுதி வேட்பாளர் கணபதி ராஜ்குமார் பல்லடம் தொகுதியிலும், ஈரோடு மக்களவை வேட்பாளர் பிரகாஷ் தாராபுரம், காங்கேயம் தொகுதிகளிலும் களமிறங்குகின்றனர்.
எம்பி தேர்தலை பொருத்தமட்டில் திருப்பூர் வடக்கு, மேற்கு சட்டமன்ற தொகுதிகள் திருப்பூர் எம்பி தொகுதியிலும் – திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவிநாசி சட்டமன்ற தொகுதி நீலகிரி எம்பி தொகுதியிலும் – உடுமலை, மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதிகள் பொள்ளாச்சி எம்பி தொகுதியிலும் – பல்லடம் சட்டமன்ற தொகுதி கோவை எம்பி தொகுதியிலும் – தாராபுரம், காங்கேயம் சட்டமன்ற தொகுதிகள் ஈரோடு எம்பி தொகுதியிலும் அடங்கும்.
மாணவர்களிடம் விண்வெளி அறிவியல் குறித்த ஆர்வத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் ‘யுவிகா’ இளம் விஞ்ஞானிகள் திட்டத்தை 2019ல் இஸ்ரோ அறிமுகம் செய்தது. இதன்கீழ் மாணவர்கள் விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடல், செய்முறை விளக்கப் பயிற்சி அளிக்கப்படும். இந்தாண்டுக்கான பயிற்சிக் காலம்: மே 13 – 24. விண்ணப்பிக்க இன்றே(மார்ச் 20) கடைசி நாள். தகுதி: 9ம் வகுப்பு மாணவர்கள் மட்டுமே. விண்ணப்பிக்க: jigyasa.iirs.gov.in/yuvika
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள சூழ்நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் 64 குழுக்கள் தேர்தல் விதிமுறைகள் தொடர்பான கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்பட்ட ரூ.2,10,310-ஐ இன்று தேர்தல் கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்தனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் அனைத்து பகுதிகளிலும் 15 வயதுக்கு மேற்பட்ட கல்வி அறிவு இல்லாதவர்களுக்கு அவரவர் இடத்திற்கு சென்று அடிப்படைக் கல்வி அறிவு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் உடுமலையில் இன்று 109 மையங்களில் 1200-க்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதினார். தேர்வில் வாசித்துக் காட்டுதல், எழுதுதல், கணிதம் உள்ளிட்ட பாடங்களில் 150-க்கும் மேற்பட்டவர்கள் தேர்வு எழுதினர்.
திருப்பூர் பட்டுக்கோட்டையார் நகர் பகுதியில் கடந்த 2021ஆம் ஆண்டு அப்பாஸ் அலி என்பவர் அதே பகுதியை சேர்ந்த சிறுமி மற்றும் அவரது அக்காவை அடித்து காயப்படுத்தினார். இது தொடர்பான வழக்கு விசாரணை திருப்பூர் கூடுதல் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் நேற்று (மார்ச் 18) குற்றஞ்சாட்டப்பட்ட அப்பாஸ் அலிக்கு 6 மாதம் சிறை தண்டனை, 20,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டது.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் 19 ம் தேதி மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திருப்பூர் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கே.சுப்பராயன் மறுபடியும் அந்த தொகுதியின் வேட்பாளராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளார்.
வெள்ளகோவிலில் ஞாயிற்றுக்கிழமை தோறும் முருங்கைக்காய் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த கொள்முதல் நிலையத்திற்கு வெள்ளகோவில் சுற்று வட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் தங்களது தோட்டங்களில் அறுவடை செய்யும் முருங்கைக்காய்களை விற்பனைக்கு கொண்டு வருவார்கள். அதன்படி நேற்று வெள்ளகோவில் கொள்முதல் நிலையம் செயல்பட்டது. ஒரு கிலோ முருங்கைகாய் 12 ரூபாயுக்கு கொள்முதல் செய்யப்பட்டது.
Sorry, no posts matched your criteria.