Tiruppur

News February 12, 2026

திருப்பூர் இரவு ரோந்து காவலர் விபரம்!

image

திருப்பூர் மாவட்டத்தில் இன்று (11.02.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News February 11, 2026

திருப்பூரில் இப்படி ஒரு அற்புத கோயிலா?

image

திருப்பூர், பல்லடம் அருகே சேமலைக்கவுண்டம்பாளையத்தில், பழமைவாய்ந்த வலுப்பூர் அம்மன் கோயில் உள்ளது. இங்கு சர்வ நோய்களை தீர்க்கும் சக்திவாய்ந்த பத்ரகாளியம்மன் குடிகொண்டிருக்கிறாள். மன்னர் விக்ரமாத்த சோழனின் மகளுக்கு ஏற்பட்ட வலிப்பு நோய், அம்மனை வணங்கியதால் குணமானது. இதனால் வலுப்பூர் அம்மன் என்று அழைக்கப்படுகிறாள். நோய் பாதிப்பு உள்ளவர்கள், அம்மனை சென்று வழிபட்டால், நிச்சயம் குணமாகுமாம்.

News February 11, 2026

திருப்பூர்: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

image

திருப்பூர் மக்களே மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம்
1. விண்ணப்பிக்க்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம்
2.அல்ல<>து pmjay.gov.in<<>> இணையதளத்தில் ரேஷன்&ஆதார் கார்டு, உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்
3.விண்ணப்பித்த 10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

News February 11, 2026

திருப்பூர்: கேஸ் சிலிண்டர் யூஸ் பண்றீங்களா..?

image

திருப்பூர் மக்களே; எதிர்பாராத நேரங்களில் வீட்டின் சமையல் கேஸ் சிலிண்டரில் LPG கசிவு ஏற்பட்டால், 1906 என்ற அவசர உதவி எண்ணுக்கு அழைக்கவும். இது இந்தியன் ஆயில், HP மற்றும் பிபிசிஎல் போன்ற அனைத்து எல்பிஜி நிறுவனங்களுக்கும் பொதுவான அவசர உதவி எண் ஆகும். இந்த எண் 24 மணி நேரமும் கிடைக்கும். மேலும், 1800 233 3555 என்ற எண்ணையும் தொடர்பு கொள்ளலாம். *எல்லாரும் தெரிஞ்சுகட்டும், மறக்காம ஷேர் பண்ணுங்க.

News February 11, 2026

திருப்பூரில் இறுதி வாக்காளர் பட்டியல் குறித்த ஆய்வு கூட்டம்

image

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு மாவட்ட சிறப்பு வரைவு வாக்காளர் பட்டியல் பார்வையாளரும், தமிழ்நாடு மின் உற்பத்தி கழக மேலாண்மை இயக்குநருமான கோவிந்தராவ் தலைமையில், மாவட்ட தேர்தல் அதிகாரி மனிஷ் நாரணவரே முன்னிலையில் வாக்காளர் பதிவு அதிகாரிகள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அதிகாரிகளுடன் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

News February 11, 2026

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாதிரியார் கைது

image

திருப்பூர் பெருமாநல்லூர் அருகே மரியபுரத்தைச் சேர்ந்தவர் ராபர்ட்(55). பாதிரியாரான இவர் தங்கியிருக்கும் இல்லத்துக்கு பள்ளியில் படிக்கும் குழந்தைகளை வேலைக்காக அழைப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில் வீட்டிற்கு வந்த 5-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பெற்றோர் அளித்த புகாரின் பேரில் அவிநாசி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் பாதிரியார் ராபர்ட்டை கைது செய்தனர் .

News February 11, 2026

திருப்பூர்: G Pay / PhonePe / Paytm பயன்படுத்துவோர் கவனத்திற்கு!

image

திருப்பூர் மக்களே, இன்றைய டிஜிட்டல் காலத்தில் செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!

News February 11, 2026

திருப்பூர்: FREE-யாக புதிய VOTER ID டவுன்லோட் செய்வது எப்படி?

image

திருப்பூர் மக்களே உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில் இங்கே <>கிளிக் <<>>செய்து இணையதளம் சென்று உங்க VOTER ID எண்னை உள்ளீடு செய்யவும். பின் மொபைலுக்கு வரும் OTP-ஐ பதிவிட்டால் புதிய கார்டை உடனே பதிவிறக்கம் செய்யலாம். மொபைல் எண் இணைக்கப்பட்டுள்ளதை மட்டும் உறுதி செய்து கொள்ளுங்கள். (SHARE)

News February 11, 2026

அறிவித்தார் திருப்பூர் கலெக்டர்!

image

திருப்பூர், தாராபுரம் அரசு ஐ.டி.ஐ-யில் பிப்ரவரி 12 காலை 10 மணிக்கு தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் நடக்கிறது. கோவை மண்டலத்தைச் சேர்ந்த ஐ.டி.ஐ முடித்தவர்கள் மற்றும் 8, 10, 12, பட்டப்படிப்பு முடித்தவர்கள் அசல் சான்றிதழ்களுடன் பங்கேற்கலாம். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு உதவித்தொகை மற்றும் மத்திய அரசின் சான்றிதழ் வழங்கப்படும். விவரங்களுக்கு: 9499055695, என திருப்பூர் கலெக்டர் தெரிவித்துள்ளார்.

News February 11, 2026

திருப்பூர்: கஞ்சா வைத்திருந்த வாலிபர்கள் 5 பேர் கைது

image

திருப்பூர் பலவஞ்சிபாளையம் பகுதியில் போலீசார் சோதனைப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வந்த வாலிபர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் இவர்கள் வீரபாண்டி பகுதியைச் சேர்ந்த சஞ்சய்(22) , விஷால் (18), ஆகாஷ் (24), உதயநிதி (18), ஜனார்த்தனன் (18) என்பது தெரியவந்தது. இவர்களை கைது செய்த போலீசார் இவர்களிடம் இருந்து சுமார் 22.200 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

error: Content is protected !!