India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருப்பூர் மாவட்டம் அவிநாசி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பழங்கரை அருகே அதிகாலையில் கோவையில் இருந்து வந்த கார் ஒன்று, பெங்களூர் இருந்து கோவை நோக்கி சென்று கொண்டிருந்த சரக்கு லாரி மீது மோதியது. இதில் காரில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அப்பர்ணா, ஹேமா மற்றும் இவர்களின் தோழி மோனிஷ் ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இவ்விபத்துகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
1.பல்லடத்தில் சந்தன மரம் வெட்டி கடத்தப்பட்டது.
2.அவிநாசி: சார்பதிவாளர் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
3.திருப்பூர் மாநகராட்சி பொறியாளராக வாசுகுமார் மாற்றம்
4.அவிநாசியில் ரூ.6.50 லட்சத்திற்கு பருத்தி ஏலம் போனது.
5.உடுமலை: பூளவாடி சாலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
6.திருப்பூரில் விஜய் கட்சியின் பேனர் கிழிப்பு -அப்பகுதியில் பரபரப்பு
வெள்ளகோவிலில் ரூபாய் 10 கோடி மதிப்பிலான நலத்திட்ட பணிகளை அமைச்சர் சாமிநாதன் நாளை தொடங்கி வைக்கிறார். அதன்படி 15ஆவது நிதிக்குழு மானியம், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி, வருமுன் காப்போம் ஆகிய திட்டங்களின் கீழ் 6 பணிகளை அமைச்சர் தொடங்கி வைக்கிறார். இதில் நகராட்சி அதிகாரிகள், நகராட்சி தலைவர், துணைத்தலைவர், வார்டு உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொள்ள உள்ளனர்.
வெள்ளகோவிலில் ரூபாய் 10 கோடி மதிப்பிலான நலத்திட்ட பணிகளை அமைச்சர் சாமிநாதன் நாளை தொடங்கி வைக்கிறார். அதன்படி 15ஆவது நிதிக்குழு மானியம், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி, வருமுன் காப்போம் ஆகிய திட்டங்களின் கீழ் 6 பணிகளை அமைச்சர் தொடங்கி வைக்கிறார். இதில் நகராட்சி அதிகாரிகள், நகராட்சி தலைவர், துணைத்தலைவர், வார்டு உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொள்ள உள்ளனர்.
இன்று காலை முதல் வெயிலின் தாக்கம் இருந்து வந்த நிலையில், பிற்பகல் திடீரென மேகமூட்டம் காணப்பட்டது. தொடர்ந்து, அவிநாசி, பழங்கரை, வேலாயுதம்பாளையம், ஆட்டையம்பாளையம், பெருமாநல்லூர் உள்ளிட்ட சுற்றுப் பகுதிகளில் பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. கனமழையின் காரணமாக விவசாயிகள் மட்டும் போதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
திருப்பூர் தெற்கு மாவட்ட அவைத்தலைவரும், மடத்துக்குளம் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ஜெயராமகிருஷ்ணன் தனது இல்ல திருமண விழா அழைப்பிதழை தமிழக முதல்வருக்கு நேரில் வழங்கினார். உடன் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் ஈஸ்வரசாமி இருந்தனர்.
தீபாவளி பண்டிகையை ஒட்டி பயணிகளின் வசதிக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னை சென்ட்ரல் மங்களூர் சிறப்பு ரயில் வருகின்ற இரண்டாம் தேதி இரவு 11:50 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 4 மணிக்கு மங்களூர் சென்றடையும். இந்த ரயில் மூன்றாம் தேதி காலை திருப்பூருக்கு 6.40 மணிக்கு வந்து சேரும் என சேலம் ரயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உலக மாற்றுத் திறனாளிகள் தினம் டிசம்பர் மாதம் 3ம் தேதி ஆண்டுதோறும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக சேவைபுரிந்தவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு தமிழக அரசு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி டிசம்பர் மாதம் 3ம் தேதி நடைபெற உள்ள மாற்றுத்திறனாளிகள் தின விழாவில் விருது வழங்கப்படுகிறது என திருப்பூர் ஆட்சியர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மற்றும் கோவை சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் திருப்பூரில் பாயும் நொய்யல் ஆற்றில் தண்ணீரின் அளவு அதிகரித்து வருகிறது. நேற்று அணை மேடு பகுதியில் உள்ள தடுப்பணையில் மழை வெள்ளம் ஆர்ப்பரித்து சென்றது.
திருப்பூர் மாவட்டத்தில் செயல்படும் முதியோர் இல்லங்கள், பெண்கள், குழந்தைகளுக்கான விடுதிகள் வரும் நவ., 20ம் தேதிக் குள் பதிவுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.முதியோர் இல்லங்கள் https://www. seniorcitizenhomes. tnsocialwelfare.tn.gov. / என்கிற தளத்திலும், பெண்கள் மற்றும் குழந்தை களுக்கான விடுதிகள், https://tnswp.com என்கிற தளத்திலும் விண்ணப்பிக்க வேண்டும் என கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.