India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தாராபுரத்தில் இருந்து வெள்ளகோவில் செல்லும் சாலையில் சங்கரன்டாம்பாளையம் அருகே சாலையின் நடுவில் சுமார் 10 cm அளவில் 30 அடி நீளத்திற்கு வெடிப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் இரவு நேரங்களில் சாலையில் செல்லும் இருசக்கர வாகனங்கள் அந்த வெடிப்பில் சிக்கி விபத்துக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இந்த சாலையை சரி செய்ய வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தீபாவளிக்கு புத்தாடை உள்ளிட்ட பொருட்களை வாங்க மக்கள் படையெடுத்ததால், நேற்று போக்குவரத்து நெரிசலில் திருப்பூர் திக்குமுக்காடியது. திருப்பூரில் பின்னலாடை நிறுவனங்கள் உள்பட பல்வேறு தொழிலகங்கள், நேற்றுமுன்தினம் தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்கிவிட்டன. இதனால் பொதுமக்கள் தீபாவளிக்கு தேவையான பொருட்களை வாங்க கடைவீதி, புது மார்க்கெட் வீதி, குமரன் வீதியில் ஏராளமானோர் குவிந்ததால் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
முருகனுக்கு வழிபாடு நடத்தக்கூடிய கந்தசஷ்டி விழாவானது வரும் 2ம் தேதி தொடங்கி 8ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்காக திருப்பூர் மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அழகுமலை முத்துக்குமாரசாமி கோவிலில் சூரசம்ஹாரத்திற்கு பயன்படுத்தக்கூடிய சூரன் அவதார பொம்மைகளுக்கு வர்ணம் தீட்டும் பணி நடைபெற்றது.
காங்கேயம் அருகே பகவதிபாளையத்திலிருந்து டாஸ்மாக் கடைகளுக்கு விநியோகிக்க மதுபாட்டில்களை ஏற்றிக்கொண்டு ஈச்சர் வேன் நேற்று மதியம் காங்கேயம்-கரூர் சாலையில் சென்றுகொண்டு இருந்தபோது எதிரே வந்த கார் மோதியது. இதில் வேன் கவிழ்ந்து ரூ.10 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் உடைந்தன. அதேசமயம் காரில் வந்த உ.பி.யைச் சேர்ந்த நசீம் (38) என்பவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.
திருப்பூர், மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் நேற்று தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோர் தலைமையில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. உடன் மாவட்ட கண்காணிப்பு அலுவலர், மாவட்ட ஆட்சியர், மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் பங்கேற்றனர்.
உடுமலை அடுத்த திருமூர்த்தி மலையில் அம்ணலிங்கேஸ்வரர், பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய கோவில்கள் இடம் பெற்றும், 950 மீ உயரமுள்ள பஞ்சலிங்க அருவியும் உள்ளது. இந்த அருவியில் கடந்த வாரமாக பெய்த பருவமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. எனவே இங்கு சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை 22ம் தேதி விதிக்கப்பட்டது. இப்போது அருவியில் தண்ணீரின் சீற்றம் குறையாததால் குளிப்பதற்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம் முழுவதும் முதியோர் இல்லங்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த விடுதிகள் அனைத்தும் சட்டங்களின்படி பதிவுசெய்யப்பட்டு செயல்பட வேண்டும், அவ்வாறு பதிவு செய்யாதவர்கள் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள சமூக நலத்துறை அலுவலகத்தை தொடர்பு கொண்டு நவம்பர் 20ஆம் தேதிக்குள் பதிவுசெய்ய கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது என கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்தார்.
கடந்த 20-ம் தேதி பல்லடம், காரணம்பேட்டை வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி கொலை செய்த சம்பவம் தொடர்பாக, வீட்டின் அருகே உணவகத்தில் வேலை பார்த்தவர்கள் உட்பட 5 பேரை பல்லடம் போலீசார் நேற்று கைது செய்து நகையை மீட்டனர். அம்பாசமுத்திரம் ஊர்க்காட்டைச் சேர்ந்த பாஸ்கர் (25), அதே பகுதி தெற்கு தெருவை சேர்ந்த மாடசாமி (24) ஆகியோர் கைதுசெய்து விசாரித்து வருவதாக எஸ்பி அபிஷேக் குப்தா தெரிவித்தார். தெரிவித்தார்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, இன்று ரேஷன் கடைகள் வழக்கம்போல் இயங்கும் என்று அமைச்சர் பெரிய கருப்பன் அறிவித்துள்ளார். எனவே, திருப்பூர் மாவட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் ரேஷன் கடைகள் விடுமுறை இல்லை என்பதை நினைவில் கொண்டு, நியாய விலைப் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம். பண்டிகை கால கூட்ட நெரிசலை குறைப்பதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க!
அவிநாசி ஒன்றியத்தை சேர்ந்த அவிநாசிலிங்கம்பளையம் அரசுப்பள்ளி மாற்றுத்திறனாளி மாணவன் சபரி ஆனந்த், தேசிய அளவிலான நீச்சல் போட்டியில் 3 தங்கப் பதக்கம் வென்றார். இந்நிலையில் மாவட்ட ஆட்சியர், முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட திட்ட அலுவலர், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் அனைவரும் நேற்று அவருக்கு பாராட்டு தெரிவித்தனர். அப்போது ஆசிரியர்கள் மற்றும் நீச்சல் பயற்சியளர்கள் உடனிருந்தனர்.
Sorry, no posts matched your criteria.