India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடக்கூடிய பாஜக வேட்பாளர் ஏ பி முருகானந்தம் மீது தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினரை மிரட்டியதாக மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இன்று மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான கிறிஸ்துராஜுவை நேரில் சந்தித்து சோதனைச் சாவடியில் பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் தன்னிடம் தரக்குறைவாக நடந்து கொண்டதாகவும் புகார் மனு அளித்தார்
திருப்பூர் மாவட்டத்திற்குட்பட்ட மக்களவைத் தொகுதியில் பதற்றமான வாக்குச்சாவடிகள், மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, திருப்பூர் தொகுதியில் 293, கோவை தொகுதியில் 224, நீலகிரி தொகுதியில் 179, ஈரோடு தொகுதியில் 172, பொள்ளாச்சி தொகுதியில் 140 ஆகியவை பதற்றமான வாக்குச்சாவடிகள் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மக்களவைத் தொகுதியின் பாஜக வேட்பாளரான ஏ.பி. முருகானந்தம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். பவானி அருகே அய்யம்பாளையம் மாரப்பன் பாளையம் கவுந்தப்பாடி சலங்கபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர பரப்புரை மேற்கொண்டார். அப்போது கரும்பு ஏற்றி சென்ற டிராக்டரை ஓட்டி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
திருப்பூர் மற்றும் நீலகிரி நாடாளுமன்ற திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வருகின்ற 13ஆம் தேதி அவிநாசி அருகே பலமுறை பகுதியில் நடைபெற உள்ள பொதுக் கூட்டத்தில் முதல்வரும் திமுக தலைவருமான மு க ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளார். இதற்கான மேடை அமைப்பதற்கான கால்கோல் விழா இன்று நடைபெற்றது. இதில் மேயர் தினேஷ்குமார் , எம்எல்ஏ செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. வாக்குப்பதிவை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் ஏப்ரல் 17 முதல் ஏப்ரல் 19ஆம் தேதி வரை மூடப்படுகிறது. அதேபோல் வாக்கு எண்ணிக்கை நாளான ஜூன் 4ஆம் தேதியும் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு கருதி இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம் மங்கலத்தில் 2024 நாடாளுமன்றத் தேர்தல் புறக்கணிப்பு என பிளக்ஸ் வைக்கப்பட்டிருந்தது. மங்கலம் ஊராட்சிக்குட்பட்ட மங்கலம் காசா எண் 347b உள்ளிட்ட பல்வேறு நிலங்களின் மீது பத்திரப்பதிவுத்துறை பரிவர்த்தனை நடவடிக்கைக்கு தடை விதிக்க கோரி பலமுறை அரசு நிர்வாகத்திடம் மனு அளித்தனர். நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் தேர்தல் புறக்கணிப்பு பேனர் நேற்று (ஏப்ரல் 4) வைத்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்குட்பட்ட வஉசி வீதி, சீனிவாச வீதி, பி.வி.கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் வசந்த ராஜனுக்கு நகர தலைவர் கண்ணாயிரம் தலைமையில் தாமரை சின்னத்தில் வாக்குகள் சேகரிக்கப்பட்டது. உடுமலை நகர பாஜக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
தனியார் பள்ளி பேருந்தில் மாணவர்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லையை தடுக்க வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதில், பள்ளியில் ‘மாணவர் மனசு’ பெட்டி வைக்கப்பட்டு அதில் பெறப்படும் குறைகளை 24 மணி நேரத்தில் தீர்க்க வேண்டும். ஓட்டுநருக்கு போக்சோ சட்டம் குறித்து பயிற்சி வழங்க வேண்டும். ஓட்டுநர், உதவியாளர்கள் குறித்த விவரங்களை EMIS Portalஇல் பதிவேற்ற வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.
தாராபுரத்தில் இருந்து தேங்காய் நார் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. திருப்பூர் தாராபுரம் சாலை தூத்தாரி பாளையத்திற்கு வந்தபோது அங்கு இருந்த மின் கம்பியில் உரசியதால் திடீரென தீப்பிடித்தது. இதனால் லாரியில் இருந்த தேங்காய் நார் முழுவதும் தீ பரவியது. அங்கிருந்தோர் விரைந்து செயல்பட்டு தேங்காய் நார்களை இறக்கியதால் லாரி சேதமின்றி தப்பியது.
வெள்ளகோவில் பகுதியில் 10 பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளன. அவற்றை தேர்தல் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டுவந்துள்ளனர். நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும் இரண்டு வாரங்கள் உள்ள நிலையில் வெள்ளகோவில் பகுதியில் தேர்தலை சமூகமாக நடத்த தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.