Tiruppur

News May 3, 2024

வனவிலங்குகளுக்கு தண்ணீர் நிரப்பல்

image

சுமார் 387 ஏக்கர் வெக்டர் பரப்பளவு கொண்ட காங்கேயம் அருகே உள்ள ஊதியூர் மலைப்பகுதியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட மான் வகைகள், குரங்குகள், முயல்கள், சிறுத்தை மற்றும் பலவகை அரிய உயிரினங்களும் வாழ்ந்து வருகின்றன. கடும் வறட்சியை காரணமாக வனவிலங்கு நடமாட்டம் அதிகரித்துள்ள ஒரு சில இடங்களில் தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டு தண்ணீர் நிரப்பப்பட்டுள்ளது.

News May 2, 2024

திருப்பூர் மாவட்டத்திற்கு மஞ்சள் அலர்ட்!

image

திருப்பூர் மாவட்டத்திற்கு இன்று (மே.02) மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இன்றும் நாளையும் வெப்ப அலை வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் மக்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றனர். தமிழகத்தில் ஆங்காங்கு வெப்ப அலைக்கான ஆரஞ்சு அலர்ட்-உம் முதன்முதலாக விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

News May 2, 2024

திருப்பூரில் உண்ணாவிரத போராட்டம்

image

திருப்பூர் மாவட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இவைகளில் பெரும்பாலானவை உரிய அனுமதி இல்லாமலும், அரசின் விதிமுறைகளை கடைபிடிக்காமலும் செயல்பட்டு வருவதாகவும் அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

News May 2, 2024

ரேஷன் கடைகளில் கருவிழிப்பதிவு மே 13 முதல் துவக்கம்

image

திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை பகுதிகளில் ஆதார் இணைக்கப்பட்டு மக்களுக்கு ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்கப்பட்டு இருந்தது. ரேஷன் கடையில் கைரேகை பதிவு கார்டுதாரின் உண்மை தன்மை பதிவு செய்யப்பட்டு உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சுமார் 810 ரேஷன் கடைகளுக்கு வரும் 13ஆம் தேதி கண் கருவிழிப்பதிவு செய்து உணவு பொருட்கள் வழங்க மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

News May 2, 2024

சிறை தண்டனை பெற்று தலைமறைவான 2 பேர் கைது

image

திருப்பூர் லிங்கேகவுண்டர் வீதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (30), பனியன் நிறுவனத் தொழிலாளி. 2018ஆம் ஆண்டு செல்போன் பேசியபடி நடந்து சென்றபோது மர்ம நபர்கள் அவரது செல்போனை பறித்துச் சென்றனர். இந்த வழக்கு தொடர்பாக அருணாச்சலம் (20) மற்றும் விஜயராம் (21) ஆகியோரை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர். கடந்த பிப்ரவரி மாதம் ஜாமீனில் வெளியே வந்த இருவரும் தலைமறைவான நிலையில் நேற்று போலீசார் கைது செய்தனர்.

News May 2, 2024

அரசு மருத்துவமனை பகுதியில் பகலில் எரியும் விளக்குகள்

image

உடுமலை அரசு மருத்துவமனை பிரசவ வார்டு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள விளக்குகள் கடந்து சில தினங்களாகவே பகலில் எரிந்து வருகின்றன. இதுகுறித்து பொதுமக்கள் தலைமை மருத்துவரிடம் தெரிவித்தும் விளக்குகள் அணைக்கப்படவில்லை.  அலட்சியம் காட்டாமல் ஊழியர்கள் சரியான நேரத்தில் விளக்குகளை அணைக்க வேண்டும் பொதுமக்கள் தரப்பில் வலியுறுத்தி உள்ளனர்.

News May 1, 2024

வெள்ளகோவில் நகராட்சி ஆணையர் எச்சரிக்கை

image

திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் நகராட்சி கமிஷனர் வெங்கடேஷ்வரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது; வெள்ளகோவில் நகராட்சியில் 15 ஆயிரத்திற்கும் அதிகமான குடிநீர் இணைப்புகள் உள்ளன. முறைகேடாக குடிநீர் இணைப்பு பெற்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி ஆணையர் இன்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

News May 1, 2024

ரூ.30 லட்சம் மோசடி செய்தவர் கைது

image

வெள்ளகோவிலில் அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.30 லட்சம் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர். மொடக்குறிச்சி, கரட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் பாலமுருகன் (37). இவரிடம் வெள்ளகோவில், தாசவநாயக்கன்பட்டியை சேர்ந்த ஹரிஹரன் என்பவர் மின்சார வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ.30 லட்சம் மோசடி செய்துள்ளார். இது குறித்த புகாரில் ஹரிஹரனை வெள்ளகோவில் போலீசார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.

News May 1, 2024

9,900 குடும்பத்தினர் புதிய ரேஷன் கார்டின்றி தவிப்பு

image

திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை மற்றும் பல்வேறு பகுதிகளில் புதிய ரேஷன் கார்டுகளுக்கு 9,900 விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யாமல் தேங்கியுள்ளது. தற்போது அனைத்து தரப்பு மக்களுக்கும் ரேஷன் கார்டு இன்றியமையாததாக உள்ளது. பல்வேறு நலத்திட்டங்கள் பெறுவதற்கு கார்டு தேவைப்படுகிறது. எனவே புதிய ரேஷன் கார்டுகளை விரைந்து வழங்க பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு இன்று மனு அனுப்பி உள்ளனர்.

News May 1, 2024

வியாபாரிகள் சங்கம் போராட்டம் அறிவிப்பு

image

திருப்பூர் மாவட்டம் உடுமலை தளி ரோட்டில் உள்ள அரசு மதுபான கடை, பஸ் ஸ்டாண்ட் வணிக நிறுவனங்கள் கோவில் பள்ளியில் என மக்கள் நெரிசல் மிகுந்த பைபாஸ் ரோட்டில் அமைந்துள்ள அரசு மதுபான கடையை மே 5ஆம் தேதிக்குள் இடமாற்றம் செய்யப்படவில்லை என்றால் 18ஆம் தேதி வியாபாரிகள் சங்கம் சார்பில் கடைகள் முன் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என வியாபாரிகள் சங்கம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.