India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை குறித்த மாதாந்திர ஆய்வு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை குறித்து துறைவாரியாக ஆய்வு நடந்தது. மேலும் தடுப்பு நடவடிக்கை மற்றும் கண்காணிப்பை தொடர்ந்து மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். போதைப் பொருள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் கிறிஸ்துராஜ் எச்சரிக்கை விடுத்தார்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 265 ஊராட்சிகளில் உள்ள உள்ளாட்சி தினமான கடந்த ஒன்றாம் தேதி நடைபெற இருந்த கிராம சபை கூட்டம் நிர்வாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் கிராம சபை கூட்டம் வருகின்ற 23ஆம் தேதி காலை 11 மணிக்கு அந்தந்த ஊராட்சிகளில் உள்ள பொது இடங்களில் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
காங்கேயம் அடுத்துள்ள சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோவில் அரண்மனைத் துறை கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. இந்த கோவிலில் நிரந்தர பணியாளர்கள் மற்றும் தற்காலிக பணியாளர்கள் என பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் கோவிலில் 13 பணியிடங்களுக்கு 6200 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் சங்கத்தின் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம், “இந்தியா முழுவதும் ஒரே நேரத்தில் படத்தைத் திரையிட வேண்டும். இரண்டு வாரக் காலத்திற்குப் படத்தை யாரும் விமர்சனம் செய்யக் கூடாது” என கருத்து கூறிய நிலையில், திரைப்பட இயக்குநர் வசந்த பாலன், திருப்பூர் சுப்ரமணியன் கருத்துக்கு ஆதரவு தெரிவித்து முகநூலில் பதிவிட்டுள்ளார்.
தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள மேலடுக்கு சுழற்சியின் காரணமாக டெல்டா மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் இன்று (நவ.19) இரவு 7 மணி வரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில், திருமுருகன் பூண்டி திரு முருக நாதர் சுவாமி கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்கள் திருப்பூர் மாவட்டத்தில் சிறப்பு வாய்ந்த கோவில்களாக விளங்குகின்றன. மேலும் மாவட்டத்தில் உள்ள கோவில்களுக்கு 5 லட்சம் பேர் வந்து சென்றுள்ளனர் என சுற்றுலாத்துறை கணக்கெடுப்பு கூறுகிறது. அதன்படி அவிநாசியில் லிங்கேஸ்வரர் கோவிலுக்கு 31,000 பக்தர்கள் வந்து சென்றுள்ளனர்.
பெருமாநல்லூர் நால் ரோட்டில் அதிமுகவின் 53ஆம் ஆண்டு விழா பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. பொதுக்கூட்டத்திற்கு வருபவர்களுக்கு புதிதாக பிளாஸ்டிக் நாற்காலி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. வழக்கமாக அரசியல் கட்சி கூட்டங்களில் மட்டன் பிரியாணி, சிக்கன் பிரியாணி, இட்லி, தோசை, சப்பாத்தி, குருமா வழங்கப்படும். ஆனால் நாற்காலி இலவசமாக வழங்கப்பட்டது அரசியலில் பேசுபொருளாகியுள்ளது.
திருப்பூர் வீரபாண்டியில் பொன்ராஜ் என்பவருக்கு சொந்தமான பேக்கரியில் நேற்று நள்ளிரவு டீ இல்லை என்று கூறியதால் போதை கும்பல் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, கடை ஊழியர்கள் மீது சரமாரியாக தாக்குதலில் ஈடுபட்ட சிசிடிவி வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், அதனை ஆதாரமாகக் கொண்டு போலீசார் சிவா (36), கனகராஜ் (38), கார்த்திக் (29), மணிகண்டன் (34) ஆகியோரை கைது செய்தனர்.
திருப்பூர் ராஜபாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளிக்கு நேற்று ஈமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக நேற்று விடுமுறை அளிக்கப்பட்டு பள்ளி வளாகம் முழுவதும் வெடிகுண்டு நிபுணர்கள் மூலம் சோதனை மேற்கொள்ளப்பட்டது. மிரட்டல் வதந்தி என தெரிய வந்த நிலையில் இன்றும் (நவ.19) பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்படுவதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
திருப்பூர் ராஜபாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளிக்கு இன்று ஈமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக இன்று விடுமுறை அளிக்கப்பட்டு பள்ளி வளாகம் முழுவதும் வெடிகுண்டு நிபுணர்கள் மூலம் சோதனை மேற்கொள்ளப்பட்டது. மிரட்டல் வதந்தி என தெரிய வந்த நிலையில் நாளையும் பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்படுவதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.