India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா அறிவுறுத்தலின் பெயரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் இன்று சனிக்கிழமை வெளியிட்டுள்ள விழிப்புணர்வு பேனரில், பங்கு சந்தையில் முதலீடு செய்து இரட்டிப்பு லாபம் பெறலாம் என உங்கள் தொலைபேசிக்கு வரும் அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம் என மாவட்ட காவல்துறை பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் தர்மராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: மாவட்டம் முழுவதும் தனி நபர் இல்லங்களில் சிறப்பாக பராமரிக்கப்படும் நூலகத்திற்கு 3,000 ரூபாய் மதிப்புள்ள கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். இதற்கு அடுத்த மாதம் 7ஆம் தேதி வரை நேரடியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. சேர் செய்யவும்.
திருப்பத்தூர் தாலுக்கா ஆதியூர் பொதிகை பொறியியல் கல்லூரியில் இன்று காலை 9 மணியளவில் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெறும் ஆட்சியர் அறிவித்துள்ளார். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் 10,000 மேற்பட்ட காலி பணியிடங்கள் நிரப்ப உள்ளன. இளைஞர்கள் முகாமினை பயன்படுத்திக் கொள்ள கேட்டுக்கொல்லப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க
ஆம்பூர் நகரில் சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு இன்று காலை இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிந்து வந்த வாகன ஓட்டிகளுக்கு பூங்கொத்து கொடுத்து துணை காவல் கண்காணிப்பாளர் அறிவழகன் வாழ்த்துக்கள் தெரிவித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அப்போது போக்குவரத்துக் காவலர்கள் மற்றும் காவல்துறையினர் மற்றும் பலர் உடனிருந்தனர்.
ஜோலார்பேட்டை ஜங்ஷன் பஸ் நிலையத்தில் இன்று பஸ் பயணிகள் தங்களது சொந்த ஊருக்கு செல்ல பஸ் வருகைக்கு காத்துக் கொண்டு இருந்தனர். அப்போது திடிரென வாலிபர் ஒருவர் அங்கு நின்று கொண்டு இருந்த வாலிபருக்கு முத்தம் கொடுக்க முயன்றார். அப்போது பொது மக்கள் அந்த வாலிபரை பிடித்து சரமாரியாக தாக்கினர். போலிசார் விசாரணை செய்ததில் அவர் சற்று மன நிலை பாதிக்கப்பட்டவர் என தெரியவந்தது.
திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெயரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் தனது முகநூல் பக்கத்தில் இன்று வெளியிட்டுள்ள விழிப்புணர்வு பேனரில், உங்கள் தனிப்பட்ட தகவலை பயன்படுத்தி சமூக ஊடகத்தில் உங்கள் பெயரில் போலியான கணக்கு உருவாக்கப்பட்டுள்ளதை அறிந்தால் உடனே www.cybercrime.gov.in மற்றும் 1930 என்ற எண் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஸ்பா என்கிற பெயரில் பாலியல் தொழில் செய்து வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தாவிற்கு கிடைத்த ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் போலீசார் மாவட்டம் முழுவதும் கண்காணிப்பில் ஈடுபட்டனர். இதில், தூய நெஞ்ச கல்லூரி எதிரே உள்ள ஸ்பா சென்டர் பெயரில் பாலியல் தொழில் செய்து வந்த தமிழ்ச்செல்வன் என்பவரை கைது செய்து அங்குள்ள பெண்களை மீட்டனர்.
ஜோலார்பேட்டை அருகே பால்னாங்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல் இவரது மனைவி சந்தியா (வயது 30) இவர் தனது வீட்டின் வெளியே நின்றபோது திடீரென விஷ பாம்பு ஒன்று கடித்தது. இதனால், வலியால் துடிதுடித்து கூச்சலிட்டார். அருகில் இருந்தவர்கள் சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவக் மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து ஜோலார்பேட்டை போலிசார் விசாரணை மேற்கொண்டனர்.
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியரக அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் மாவட்ட அளவிளான மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கான சிறுதானியங்கள் மற்றும் பராம்பரிய உணவுத்திருவிழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் அரசுத்துறை அதிகாரிகள் இருந்தனர்.
ஜோலார்பேட்டை ஒன்றியம் சந்திரபுரம் ஊராட்சியில் நேற்று மாதாந்திர மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. இம்முகாமில் 91 பேருக்கு ரூ.53 லட்சத்து 4 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கி சிறப்புரையாற்றினார். அதில், மழைக்காலம் என்பதால் உரிய அங்கீகாரம் பெறாத நபர்களிடத்தில் எவ்வித சிகிச்சையும் மேற்கொள்ளக்கூடாது. மருந்து கடைகளில் ஊசி போடக்கூடாது என்று கூறினார்.
Sorry, no posts matched your criteria.