India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஜோலார்பேட்டை அடுத்த புள்ளானேரி பகுதியைச் சேர்ந்தவர் திருப்பதி இவரது மகன் நவீன் குமார் என்பவர் கடந்த 10 ம் தேதி அதே பகுதியில் பொது இடத்தில் பொது மக்களுக்கு இடையூறாக பிறந்த நாள் விழா முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாடினார். இது குறித்து தீர்த்தகிரி கொடுத்த புகாரின் பேரில் ஜோலார்பேட்டை போலீசார் இன்று வழக்கு பதிவு செய்து நவீன்குமார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று(ஆக.10) இரவு ரோந்து பணியில் ஈடுபடவுள்ள காவலர்களின் பட்டியலை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. பொதுமக்கள் தங்களின் அவசர தேவைக்கு அவர்களை அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரவில் காவல்துறை உதவி தேவைப்படும் நபர்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ள எண்ணிற்கோ, அல்லது 100-க்கோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள்.
திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் ஆணைக்கிணங்க போக்குவரத்து துறையின் விழிப்புணர்வு பதிவு கார் மற்றும் பேருந்தில் பயணம் செய்யும் போது தலை மற்றும் கையை வெளியில் நீட்ட வேண்டாம். முக்கியமாக குழந்தைகளை அழைத்து செல்லும் போது மிக கவனமாக அழைத்துச் செல்லவும். பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை பாதுகாப்புடன் கவனத்துடனும் பார்த்துக்கொள்ள வேண்டும் என சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர்.
திருப்பத்தூரில் உள்ள தோமினிக் சாவியோ பள்ளியில் உள்ள கிணற்றில் இருந்து 11ம் வகுப்பு மாணவன் முகிலன் சடலம் மீட்கப்பட்ட விவகாரம். மாணவன் உடல் மீடக்கப்பட்டு நீண்ட நாட்கள் ஆகியும் பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என உறவினர்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர். நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியரை சந்திக்க சென்ற போது போலீஸ் தடுத்து நிறுத்தியதால் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடங்களை இன்று (ஆக.12) வருவாய்த்துறையினர் அப்புறப்படுத்தி வரும் நிலையில் ஒரு சில குடியிருப்பு வாசிகள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து சி.எல் சாலையில் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பத்தூர் மக்களே உங்கள் 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையக பெற அரசு ஒரு திட்டத்தைக் கொண்டுவந்துள்ளது. அதாவது<
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 2 அரசு பள்ளிகள் தற்போது மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 207அரசு பள்ளிகளில் ஒரு மாணவ மாணவிகள் கூட (பூஜ்ஜியம்) பள்ளியில் சேர்வதற்கு முன் வராத நிலையில் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் அந்த 207பள்ளிகளை முற்றிலுமாக மூடுவதாக தமிழக அரசு முடிவு எடுத்து உள்ளது. அதற்கான அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் மக்களே, தமிழ் வளர்ச்சித் துறையின் கீழ் செயல்படும், செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலி திட்ட இயக்ககத்தில், அலுவலக உதவியாளர் பணியிடம் நிரப்பப்படவுள்ளது. ரூ. 15,700 முதல் ரூ. 50,000 வரை சம்பளம் வழங்கப்படும். 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. விண்ணப்பிக்கும் முறை மற்றும் விவரங்களை அறிய 044-29520509 எண்ணுக்கு அலுவலக நேரங்களில் அழைக்கலாம். கடைசி தேதி 16.08.2025 ஆகும். SHARE IT
திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, நாட்றம்பள்ளி, வாணியம்பாடி, ஆம்பூர் உள்ளிட்ட காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இன்று (ஆக.11) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறையினர் தொலைபேசி எண்ணுடன் அறிவித்துள்ளனர். இரவு நேரங்களில் நடக்கும் அசம்பாவிதங்கள் மற்றும் குற்றங்கள் குறித்து பொது மக்கள் மேற்கண்ட போலீசாருக்கு தகவல் தெரிவிக்கலாம்.
தமிழக காவல்துறை சார்பில் காவல் உதவி செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நீங்கள் பொது இடங்களில் ஏதேனும் சிக்கலில் மாட்டிக்கொண்டாலோ அல்லது அவசர காலங்களில் செயலியில் உள்ள சிவப்பு நிற பொத்தானை அழுத்தினால், உங்கள் விவரம், இருப்பிடம் ஆகியவை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு சென்று விடும். இதன் மூலம் துரிதமாக உதவி கிடைக்கும். இங்க <
Sorry, no posts matched your criteria.